திரையிசை பாடல் பயணத்தில், முதல் பாடலாக யுவனின் இசையில் யுவனின் குரலில் இந்த பாடல் எனக்கு அமைந்தது.
வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தவர்களுக்கும், இந்தப் பாடலை தொடர்ந்து ரசித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். @thisisysr@AnandKaiser
சிறந்த பாடலாசிரியர்: சாரதி - ‘நீலோத்தி’ (சிறை)
முன்னெப்போதோ தன் மூதாதையர்கள் நடைபோட்ட வழித்தடத்தை இன்னும் நினைவில் சுமந்து திரியும் ஒற்றை யானைபோல, அப்துல் - கலையரசி வழியே நம்முள் புதைந்துபோன முதல் காதலையும், அதன் வாதையையும் வெளிக்கொணர்ந்து காற்றில் விரவிவிட்டது ‘நீலோத்தி.’
இறுதிவரை இணை சேர்ந்திட முடியாது எனத் தெரிந்தும் தத்தமது இருப்பை ஒவ்வொரு விடியலிலும் நீலப் புன்னகையால் மற்றதற்கு உணர்த்தும் கடலின் ஆழத்தையும், வானின் வாஞ்சையையும் ஒருசேர ஓவியமாய் தீட்டினார் கவிஞர் சாரதி.
நிச்சயமற்ற நாளையில் துளி நம்பிக்கை விதைத்து நம்மை ஆற்றுப்படுத்தியது ‘எல்லாரையும்போல நல்லாருப்போம் நாளை’ என அவர் பேனா உதிர்த்த வரிகள்.
‘படைச்ச சாமி கேக்காததையும் படிச்ச சாமி கேட்டதே’ என மதங்களுக்கு அப்பால், எளியவர்கள் இறுகப்பற்றி மேலேறிக்கொள்ள இருக்கும் ஒற்றைச்சரடு மனிதம் மட்டும்தான் என அவர் போதித்தபோது மறு பேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டன மனங்கள்.
தன் எழுதுகோல் வழியே சமத்துவம் பேசும் சாரதி, எல்லாரையும் பாரபட்சமில்லாமல் அணைத்துச் செல்லும் நீலச் சாரல்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Sarathy | #Neelothi | #Sirai | #BestLyricist