தவறான குழந்தை வளர்ப்பிற்கு ஒரு உதாரணம்.
வெள்ளியன்று எங்க டீம் பார்ட்டி ஒன்னு நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் 35-50 வயதுடையவர்கள். அங்கு அதிகமாக பேசியது இதைத்தான். இவங்க எல்லாம் பொற்றோருடன் வாழ்ந்தது ஒரு டிகிரி, ப்ரொபெஷனல் படிப்பு முடிக்கும் வரை தான். பின்னர் வேலை தேடி, திருமணம் முடித்து பெற்றொரை விட்டு பிரிந்து தனியே தான் வாழ்கிறார்கள். 20-30 வயசுல இருக்கவங்களுக்கும் இது பொருந்தும். குழந்தை வளர்ப்பிற்கு இவர்கள் யாரும் பொற்றேரை நம்பி இல்லை. அனைவருக்கும் பொற்றோர் இருக்கிறார்கள். வருசத்துக்கு 3-4 முறை சந்தித்திப்பார்கள். வீட்டு லோன், கார் லோன், குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு சேமிப்பு என கணவன் மனைவி இருவரும் ஓடுகிறார்கள். Inheritance tax இருப்பதால் பெற்றோரின் வீடுகள் நேரடியாக கைமாற்ற அதிக வரி செலுத்தணும். பரிசாக கொடுப்பதற்கும் ஒரு எல்லை இருக்கு. இப்படி எல்லாத்துக்கும் பெற்றோரை சார்ந்து வாழாமல், பெற்றோரின் சொத்துக்களை எதிர்பார்க்காமல், படிப்ப முடிச்சோமா தன் வாழ்க்கையை பார்த்தோமானு ஓடுகிறார்கள்.
நம்மூரிலோ ஒரே ஒரு தலைமுறை பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்க தொடங்கியவுடன் அடுத்த தலைமுறை அப்படியே சீரழிகிறது. சோப்லாங்கி சமூகமாக மாறுகிறது. கஷ்டம் தெரியாமல் வளர்ப்பதன் பின்விளைவுகள். வேலைக்கு போனால் தான் சோறு என்ற நிலை இல்லை. பெற்றோர் சோறு போடுவாங்க, பெற்றோர் சேர்த்து வைத்த சொத்து இருக்கிறது என்ற அலட்சியம். வெளிநாட்டில் குழந்தைகளை வளர்க்கவும் பெற்றோரை நம்பி இருக்கிறார்கள். இத்தனை pampered சமூகம் எப்படி அடுத்தடுத்த தலைமுறைகளை சுயமாக இயங்கும் தலைமுறையாக உருவாகப்போகிறது என்ற கவலை மட்டுமே எஞ்சியுள்ளது.
ஓலை குடிசை ஆனாலும் குடும்பமாய் வாழ பழகுங்கள்
என்ன தான் சம்பாதித்தாலும் பெற்றோரோடு வாழ பழகுங்கள்
இளமையின் வலிமையாக இருந்தாலும் விட்டுக் கொடுக்கப் பழகுங்கள்
ஏனெனில் உங்கள் குடும்பத்தை தவிர, இந்த உலகில் எதையும் நீங்கள் பெரிதாய் சம்பாதித்து விடப் போவதில்லை
அன்புடன்
செளந்தா,,,
மழைத்துளி மண்ணைத் தொடும் போது மணம் வீசுவது போல அவள் சிரிப்பு என் மனதைத் தொடும் போது
காதல் வீசுகிறது நிலவின் ஒளியைவிட மென்மையானது அவள் சிரிப்பு மலரின் இதழைவிட மெல்லியது அவள் புன்னகை.
இனிய காலை வணக்கம் நட்புகளே 💐❤️