ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்திய அணியின் 4 நபர் அடங்கிய இந்தக் கலப்பு தொடர் ஓட்டக் குழுவில், 2 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமில்லாமல், தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும்.
தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் இருவரும் தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.
இவர்களது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இவர்களின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைத்திட வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு,
மாண்புமிகு கழகத் தலைவர்,திரு. @TVKVijayHQ அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,திரு. @BussyAnand
அவர்களின் ஆலோசனையின் படி,மூலனூர் பேரூராட்சி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை
அமைச்சர்,திரு. @TamilanParthib1 அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.(1/2)
நம் கரூர் மாவட்டத்தின் பெருமைமிகு விழாக்களில் ஒன்றான அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்ட வைபவத்தில் கலந்து கொண்டு,
பொதுமக்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தேன்.
இந்நன்னாளிலே,எம்பெருமான் பெருமாளின் அருள் நம் மக்கள் அனைவருக்கும் கிடைத்து எல்லோருடைய வாழ்விலும் நலமும் வளமும் பெற்று, அமைதியும் மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்கிறேன்.
திருத்தேரோட்ட வைபவத்தின் போது அன்போடு வரவேற்று உபசரித்த பொதுமக்களுக்கும், ஆன்மீக பெருமக்களும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
#TVK #CMJosephVijay #KARUR
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,திரு. @BussyAnand அவர்களின் வழிகாட்டுதலின் படி,
நம் கரூர் மாநகராட்சி,
வார்டு எண்-29 மற்றும் 46 ஆகிய பகுதிகளில் நமது கழக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் மருத்துவ முகாம் நிகழ்வை,
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்,திரு. @karurmathimas1 அவர்களுடன் நேரில் சென்று துவக்கி வைத்து,பார்வையிட்டேன்.
மருத்துவ முகாம் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நமது கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
#TVK #CMJosephVijay #Karur
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,திரு. @BussyAnand அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற நம் கரூர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்,கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்,திரு. @karurmathimas1 அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்.
#TVK #CMJosephVijay #Karur
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், "வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (7.9.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் சந்தித்து, 2026-2027 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,திரு. @BussyAnand அவர்களின் வழிகாட்டுதலின் படி,நமது கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள்
பயன்பெறும்,நெரூர் ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றிச் சென்றடைய தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இப்பணிகளை கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. @karurmathimas1 அவர்களுடன் இணைந்து தொடங்கி வைத்தோம்.
#TVK #CMJosephVijay #Karur
நமது கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள்
பயன்பெறும் நெரூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி துவக்க நிகழ்வு.
#TVK#CMJosephVijay#Karur
வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!
வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம்.
வளரட்டும் சென்னைப் பெருநகரம்!
உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!
#CMJosephVijay
#MadrasDay
#MadrasDay2026
நம் கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்திடும் வகையில் ரூ.34.20 கோடி மதிப்பீட்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்திடும் திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு நமது முதல்வர்,திரு. @TVKVijayHQ அவர்களுக்கும்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @BussyAnand அவர்களுக்கும் கரூர் மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#TVK #CMJosephVijay #Karur
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம்!
மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம் !
வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.
#CMJosephVijay
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
நம் இந்திய திருநாட்டின் 80 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,மாண்புமிகு தமிழக முதல்வர்,திரு. @CMOTamilnadu அவர்களின் ஆணைக்கிணங்க,
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ பொது விருந்தில் கலந்து கொண்ட நிகழ்வு.
#TVK#CMJosephVijay #Karur
தமிழக மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையாய்,
மக்களின் பேராதரவுடன் மாண்புமிகு முதலமைச்சர்,
திரு. @TVKVijayHQ அவர்களின் தலைமையில் மக்களுக்கான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.
மன்னராட்சி ஒழிந்து,மக்கள் நலம் காக்கும் நிஜமான மக்களாட்சி மலர்ந்த மகத்தான 100 நாட்கள் இவை.
இது வெறும் ஆரம்பம் தான்... வார்த்தைகளால் அல்ல,
மக்களின் வளர்ச்சியால் பேசும் நம் தலைவரின் வழியில் தொடர்ந்து முன்னேறுவோம்.
#TVKVijay #100DaysOfTVKGovt
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு இன்று (15.8.2026) சென்னை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றி, தகைசால் தமிழர் விருது, டாக்டர் A.P.J.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள், மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காகத் தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆகிய தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
#CMJosephVijay
#IndependenceDay
நம் இந்திய திருநாட்டின் 80 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,மாண்புமிகு தமிழக முதல்வர்,திரு. @CMOTamilnadu அவர்களின் ஆணைக்கிணங்க,
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ பொது விருந்து நிகழ்வில்,
கரூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்,திரு. @karurmathimas1 அவர்களுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு அளித்து,நம் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தோம்.
சாதி,மத பேதமற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
#TVK #CMJosephVijay #Karur