#கருப்பு இத்தகைய கடவுள் நம்பிக்கையான கதைகளத்தில் தர்க்கங்கள் தவறுவது இயல்பு ஆனால் அவ்வாறு எந்த பிசிறுமின்றி கடவுளையும் வாழ்வியல் சூழலுடன் ஒன்றர கலக்கவிட்டமை👏நீதித்துறையின் சிவப்பு நாடா தன்மையும் அதனால் தாமதிக்கப்படும் நேர்த்தியான தீர்ப்புகளும் ஓர் சமூகத்தின் சாபக்கேடு@RJ_Balaji
#தாய்கிழவி ஓர் திரைப்படம் நவரசங்களின் கலவையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அல்ல, ஆனால் பெரும்பான்மையின் மனதை தொடும் ரசங்கள் இருந்தால் அது ஓர் தரம் நிறைவான படைப்பே. இதுவும் அத்தகைய ஒன்றே🙏🏽
@Siva_Kartikeyan@SKProdOffl
நிகழ்கால வாழ்வியலில் வயோதிப பெற்றோர்களை சுமையென எண்ணும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அந்த அவசர ஊர்தி காட்சி ஓர் படிப்பிணை. இதற்கு மனம் நெகிழாதோர் எவரும் இருந்திருக்க முடியாது❤️🩹ஒவ்வொரு காட்சிகளும் உண்ணதம், சிரித்து மகிழ கண்கள் வியர்க, குடும்பத்துடன் கண்டுகளிக்க இதைவிடை ஓர் படைப்பு ஏதடா
நடிகவேலின் வாரிசு என்று தன் நடிப்பாற்றலால் பவுனுத்தாயி @realradikaa பறைசாற்றியுள்ளார்
பெண்ணியத்தினை நடைமுறைக்கேற்ப அழகாகவும் மனம் கவரும் வகையிலும் பதிவுபடுத்தியமை சிறப்பு. பெண் சுதந்திரமானது தான் வாழும் சூழலிலேயே அமைத்துக்கொள்ளக்கூடியது என்ற கருத்தினை எளிய உரைநடையில் உரைத்தமை 💪