திருப்பதி லட்டை ஸ்ரீவைஷ்ணவ பார்ப்பனர்கள் மட்டும் தான் தயாரிக்க முடியும், இதுதான் பல நூற்றாண்டு பாரம்பரியம் என திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளியிட்டுள்ளது. லட்டு தயாரிப்பிற்கான மூலப்பொருளை இந்த பார்ப்பனர்கள் தான் தரம் அறிந்து வாங்குகிறார்கள் என இரு மாதங்களுக்கு முன்பு கூட அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த 'பாரம்பரிய, பரிசுத்தமான, ஆச்சாரமான, பிரம்மாவின் நெற்றியில் பிறந்த வைதீக நெறிதவறாத இருபிறப்பாளர்கள், தர்மநெறி தவறாதவர்கள், IIT-IIM கல்லூரிகளுக்கு தகுதியான அறிவாளிகள் என உலகை நம்பவைக்கிற, எங்களை தவிர மற்ற எல்லாரையும் புனிதமான கருவரைக்குள் விடமுடியுமா என ஆச்சாரத்துடன் சீற்றம்கொள்ளுகின்ற, IAS-IFS அதிகாரத்திற்கு தகுதி படைத்ததாக நம்பிக்கொள்ளுகிற, கடவுளுக்கு மட்டுமே புரிகிற சமஸ்கிருதத்தை அறிந்துவைத்திருக்கும் ஒரே மானுடனாக பூலோகத்தில் பிறந்திருக்கும் அபூர்வ உயிரிகளாக, பரமார்த்தாவோடு நேரடியாக பேசுகிற ஜீவாத்மாக்களான
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வைணவ பார்ப்பனர்களை ஏமாற்றி மாட்டுக்கொழுப்பை யாரால் சேர்த்திருக்க முடியும்?
பகவான் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பை சேர்ப்பது மட்டுமல்ல, பசுமாட்டையே பிரசாதமாக்குவது ரிக், யஜீர் வேத காலத்திலேயே சொல்லப்பட்டிருக்கும் வேதநெறியை கற்றறிந்த மற்றொரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பார்ப்பனராகத்தானே இருக்கமுடியும்.
ரிக்வேதத்தில் என்ன சொல்றாங்கன்னா...
उ॒क्षान्ना॑य व॒शान्ना॑य॒ सोम॑पृष्ठाय वे॒धसे॑ । स्तोमै॑र्विधेमा॒ग्नये॑ ॥११॥
Ref: Rigveda Mandala 8, Sukta 43, 11th Hymn
அதாவது அக்னி தேவனுக்கு மாட்டினை படைத்து, சோமபானத்தை கொடுப்போம்நு சொல்லிருக்காங்க.
(“Let us serve Agni with our hymns, Disposer, fed on ox and cow, Who bears the Soma on his back.”)
பகவானுக்கு மாட்டுக்கொழுப்பு லட்டு மட்டுமல்ல, இன்றய சோமபாணமான டாஸ்மாக் சரக்கையும் கொடுக்கலாம்னு புரியுது.
ஒருவேளை, மாம்பலத்திலிருந்து கவுன்ஸிலராக ஆச்சாரம் குறித்து பாடம் எடுக்கும் மாமியிடம் பேட்டி எடுத்தால் நமக்கு விளக்கம் கிடைக்கலாம், அல்லது சுமந்த் ராமனிடம் கேட்டுபார்க்கலாம்.
திருப்பதி லட்டு உடலுக்கு ஆரோக்கியமானது எனும் வகையில் மகிழ்ச்சி. சிதம்பரம் கோவில் பிரசாதத்துல என்ன கொழுப்பு சேர்க்கராங்களோ தெரியலையே? தீட்சிதர்களும் அக்மார்க் ஆச்சாரமான இருபிறப்பாளர்கள் தானே, அதனால அவங்களும் ரிக் வேதத்தை நடைமுறைப்படுத்தியிருப்பாங்க..
உண்மையில #பாஜக ஆட்சி பண்ணா கூட, அரசு பள்ளிகள்ல ஜாதக கல்வி சொல்லி தர்றது.. ஒருத்தன் முன்ஜென்ம புண்ணியம் பத்தி பேசுறதுலாம் நடக்குமான்னு தெரியல
மதம், ஜாதிய விட பெரியார் அதிகமா காறி துப்புனது மனுஷனை சோம்பேறி ஆக்குற இந்த மூடநம்பிக்கைகளை தான்... 🚶🏻♂️ சிறப்பான விடியல் / திராவிட அரசு 👌🏻👌🏻
இந்தியப் பார்ப்பனியம் கோலோச்சும் செபி போன்ற அரசு அமைப்புகளை பனியா குசராத்தி மார்வாடிகளின் நலனுக்கானதாக மாற்ற, அதன் விதிகளை தளர்த்தி பார்ப்பனியம் வளைந்து கொடுக்கிறது. @May17Kural
https://t.co/nRyx0iXerZ
சங்கரலிங்கபுரம் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை அதிரவைத்த சாதிய வன்கொடுமையை, அரச பயங்கரவாதத்தை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்து கிராமம். அந்த கிராமத்தில் நீண்டு எழுந்திருக்கும் சாதிய தீண்டாமை சுவரை நேரில் சென்று பார்த்தோம். ஒரு குடும்பம் ஒட்டுமொத்த மக்களையும் தனிமைப்படுத்தி, ஒதுக்கி வைக்குமளவிற்கு சுவரை கட்டி எழுப்பி இருக்கிறது. பட்டியல் சமூக மக்களின் கோவிலை வேண்டுமென்றே மறைத்தும், கிராமத்தின் பிற பகுதியிலிருந்து துண்டித்தும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அக்கிராமத்திற்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வேலி எழுப்பியுள்ளது. இந்த நிலத்தினை சொந்தம் கொண்டாடுகிறது. இந்த நிலத்தினை பட்டியல் சமூக மக்கள் நீண்டகாலமாக புழங்கி வந்துள்ள பொதுநிலமாக இருக்கிறது. 20 ஆண்டுக்கு முந்தைய வன்முறையின் போது சமாதானத்தை அடையாளப்படுத்தும் விதமாக அன்றய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் திரு.பழனியாண்டி மரங்களை நட்டுவைத்துள்ளார். இந்த மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இந்த மரங்களையும் வளைத்து சொந்தம் கொண்டாடுகிறது அந்த பெரும்பணக்கார ஆதிக்க சாதியவாதி குடும்பம். தமக்கு சாதகமான ஆவணங்களை தன் சாதி நபர்கள் அதிகாரிகளாக வந்த சமயத்தில் உருவாக்கிக்கொண்டுள்ளது அக்குடும்பம். இந்த தீண்டாமைச் சுவரை கோட்டைச்சுவர் போல எழுப்பியுள்ளார்கள். பொதுபயன்பாட்டிற்கும், கூடுவதற்கும் இடமில்லாத வகையில் வன்முறையாக ஆக்கிரமித்துள்ளது இக்குடும்பம். நூற்றுக்கணக்கான பட்டியல் குடும்பங்களை எதிர்த்து ஒற்றைக்குடும்பம் ஆக்கிரமிப்பது அதிகாரிகளின் ஆதரவில்லாமல் சாத்தியமாகி இருக்காது. பட்டியல் மக்களின் பொது சாலையையும் மறைத்து சுவரெழுப்பி வைத்துள்ளனர். இறுதியாக பல செண்ட் பொது நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர். இவற்றை பொறுக்க இயலாமல் கடந்த 23 நாட்களாக அம்மக்கள் அமையான முறையில் ஒன்றுதிரண்டு மாலைவேளையில் தர்ணா போராட்டத்தை நடத்துகின்றனர். முழக்கம் எழுப்பி பெண்களும், குழந்தைகளும் இரவுவரை அமர்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும், தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும். இதை திமுக அரசு முன்னெடுக்க வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் பெரும் வன்முறையை ஆதிக்க சமூகமும், காவல்துறையும் கட்டவிழ்த்ததை தோழர் திருமா சட்டசபையில் அம்பலப்படுத்தினார். கிராமத்திற்குள் நுழைந்த ஆதிக்க-காவல்துறை வீடுகளை சேதப்படுத்தி, பொருட்களை கொள்ளையடித்து, பெண்கள் மீது வன்முறையை ஏவி, வழக்கு போட்டு, கல்வி-சொத்து ஆவணங்களை அழித்து நடந்த வன்முறையை அரசு மறுத்த போது திருமா நேரில் சென்று, காவல் முற்றுகைக்கு அப்பால் சென்று வீடுகளை திறந்து பார்த்து உண்மையறிந்து சட்டசபையில் பேசினார். இதை மறுத்த ஜெயலலிதா அம்மையார், பின்னர் நேரில் இக்கிராமத்திற்கு வந்து உண்மையறிந்தார். பின் சமாதானம் உண்டானது ஆனால் சாதிய ஆக்கிரமிப்புகளை பெரும்பணக்கார குடும்பம் ஒன்று இன்றும் தொடர்கிறது. இந்நிலையில் இம்மக்கள் 20 ஆண்டுகள் கழித்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நீண்ட நெடிய சாதிய தீண்டாமை, ஒடுக்குமுறை இருந்து வந்ததை நேரில் சென்று அறிந்தோம். என்னுடன் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன் வந்திருந்தார். எங்களை விடுதலை சிறுத்தைகளின் பொறுப்பாளர் தோழர் முரசு தமிழப்பன் அழைத்து சென்றார். இம்மக்களை ஒன்றுதிரட்டி அமைதியான முறையில் போராட்டத்திற்கு அணிதிரட்டியுள்ளார். சுதந்திர தினத்தன்று சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தை அறிவித்தனர். சாதியமாக திரண்டுள்ள அரசு அதிகாரிகள் இச்சிக்கலை, இக்காலத்திலும் நிலவும் காட்டுமிராண்டித்தனத்தை ஒழிக்கப்போவதில்லை. அதிகாரவர்க்கம் சாதியமாக அழுகி சிதைந்து கொண்டிருக்கிறது. வெகுசில அதிகாரிகளின் சாதி-சமுகபுரிதல் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்கும் வலிமை கொண்டதல்ல. ஆட்சியாளர்களின் உறுதியான கொள்கை முடிவும், திராவிடர் இயக்க நிலைப்பாடு மட்டுமே இச்சிக்கல்களை தீர்க்கும். ஆகவே தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் இச்சிக்கலை அங்கீகரித்து தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கரலிங்கபுர மக்களின் கோரிக்கையை முன்வைக்கிறோம். இச்சிக்கலும், மக்களின் போராட்டமும் தொடரும் சூழல் இருக்குமெனில் மே17 இயக்கமும் இம்மக்களின் போராட்டத்தில் பங்கெடுக்குமென்பதை உறுதிபட தெரிவிக்கிறோம்.
சாதி ஒழியட்டும்,
தீண்டாமை புதையட்டும், சமூகநீதி எழட்டும்,
தந்தைப் பெரியார் வெல்லட்டும்.
மே 17 இயக்கம்
15-08-2024
@CMOTamilnadu@thirumaofficial@may17iyakkam
ஆக, இலங்கைக்காரன் தமிழனை ( சோ-கால்ட் இந்தியனை) கொலை செய்யரது தப்பில்லைன்னு சொல்ல வர்ரீங்களா கவர்னர் சார்?.
பக்கத்து நாட்டுக்காரன் இந்த நாட்டு மீனவனை கொல்வதை தட்டிக்கேட்க வக்கில்லைன்னு வெட்கமில்லாம சொல்றீங்களே, ஒருவேளை கொல்லப்பட்டவன் பூணூல் போடகூடிய சமூகமாயிருந்தா இப்படித்தான் பேசியிருப்பேளா?
கெடுபிடிகளை அதிகமாக்கி திருச்சி காவல்துறை என்ன செய்ய நினைக்கிறது? இன்றய 'தம்ரோ முற்றுகைப் போராட்டத்தை' SDPI கட்சி ஒருங்கிணைத்து, தோழர் நெல்லை முபாரக் தலைமையில் நடத்தப்பட்டதற்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்தனர். கைது செய்து மண்டபத்தில் வைத்த பின்னர், கையடக்க ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாதென புதியவகை நெருக்கடியை கொடுத்தது காவல்துறை. இதற்கும் போராடி பின்னர் தோழர்களுடன் உரையாற்ற ஆரம்பித்தோம். தோழர் நெல்லை முபாரக் அவர்களோடு தோழர் கே.எம். சரீப் , குடந்தை அரசன், திருமுருகன் காந்தி, த.பெ.திகவின் தோழர் வின்சண்ட், ஆகியோர் போராடி கைதானோம்.
@sdpitnhq
ஆகஸ்ட் 15
பெரியார்
“ஜெனரல் டயர் போகிறார்,பட்டேல் வருகிறார்,என்னவித்தியாசம்?என்று கேட்டார்.
அண்ணா
“போகட்டும்,இருவரில் ஒருவன் போகிறான்”என்றார்.இது அண்ணா சொன்ன சமாதானம்.
பெரியார்
“யார் போகிறார்?யார் வருகிறார்?சாவி கைமாறுகிறது.விலங்கு அப்படியே தான் இருக்கின்றது.!
'தமிழ்நாட்டு முதல்வர்' என்பவர்
தமிழ் மக்களின் பிரதிநிதி.
திராவிட இயக்கத்தின் விளைச்சல்.
ஒட்டுமொத்த தமிழர்களை இழிவுபடுத்தும் டில்லியின் கைக்கூலியை, பார்ப்பனிய வெறியனை, திராவிட இயக்க வெறுப்பாளரை, மாநில உரிமையை நசுக்குபவரை, நீட் மாணவ படுகொலையின் ஆதரவாளரை, வள்ளுவரை இழிவுபடுத்துபவரை, எதேச்சதிகார ஆளுனரை நிராகரிப்பதே சுயமரியாதையின் அடையாளம்.
மாநில உரிமையை நசுக்கும் 'ஆட்டுக்கு தாடி' என சொல்லப்பட்ட 'ஆளுனர்' பதவிக்கு எதற்காக திமுக மதிப்பளிக்க வேண்டும்?
இச்சந்திப்பும், அங்கீகாரமும் கண்டிப்பிற்குரியது.
வழக்கம் போல திமுக அரசவை அறிஞர்கள், யூட்யூப் புரட்சியாளர்களைக் கொண்டு திமுக மாடலை, 'திராவிட மாடல்' என மல்லுக்கட்ட ஆரம்பியுங்கள்.
A Palestinian father lost his newborn twins and their mother, who were killed in an Israeli air strike while he was out collecting their birth certificates.
'வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது' போன்ற குரல்களை அண்மைக்காலமாக அதிகம் கேட்க முடிகிறது.
வட இந்திய தொழிலாளிகள்தான் இங்கு பிரச்சனையா அல்லது வட இந்திய மூலதனம் இங்கு பிரச்சனையா?
- தோழர் திருமுருகன் காந்தி
தேயிலை கம்பெனி BBTC பேச்சை கேட்டுதான் கலைஞர் திமுக மாஞ்சோலை படுகொலை செஞ்சது.
தனியார் முதலாளிகளுக்காக
பரந்தூர் வி.நிலையத்துக்கு நிலம் குடுத்தாரு ஸ்டாலின்
காப்பர் கம்பெனிக்காக பழனிச்சாமி அதிமுக தூத்துக்குடி மக்களை கொன்னுச்சு..
எல்லா அரசும் கம்பெனிக்கு தலையாட்டும் பொம்மை தான்.
தேவையற்ற கெடுபிடிகளை தூத்துக்குடி காவல்துறை தம்ரோ போராட்டத்தில் வெளிப்படுத்தியது. போராட்ட இடத்திற்கு வந்து கொண்டிருந்தவர்களை கலைப்பதும், ஒன்று சேர்பவர்களை கைது செய்வதுமாக இயங்கியது. போராட்ட களத்திற்கு வந்த மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் மற்றும் இதர தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தது. போராட்டம் தொடங்கும் முன்பாகவே நெருக்கடியை கொடுக்க அவசியமற்ற நிலையில் தூத்துக்குடி காவல்துறையின் போக்கு கண்டிக்கதக்கதாக இருந்தது.
போராட்டம் இந்த அடக்குமுறையை மீறி தொடர்ந்தது. போராட்டத்தில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன், ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா.பாத்திமாபாபு, மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் முரசுதமிழப்பன், ஆட்டோ கணேசன், நாட்டுப்படகு சங்கத்தின் தோழர்.ரீகன்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தோழர் தாழை உமர்பாரூக், ஆதித்தமிழர் கட்சியின் தோழர் நம்பிராஜ் பண்டியன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் ஆட்டோ சரவணன் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொறுப்பாளர்கள் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட மே17 இயக்கத் தோழர்களை விடுவிக்கக் கோரி காவல்துறையிடம் போராடி விடுவித்தோம். போராட்டம் விரிவடையும் என்பதையும், அடக்குமுறை அதிகரித்தால் பெருந்திரளாக போராட்டத்தை முன்னகர்த்துவது என்றும் காவல்துறையிடம் எதிர்ப்பை தெரிவித்தோம். சிங்கள நிறுவனத்திற்காக போராடும் தமிழக காவல்துறை, மீனவரை கொல்லும் சிங்கள படை மீது வழக்கு பதிய மறுக்கிறது. இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்கை பதிவு செய்யும்வரை போராட்டம் தொடரும். இதற்காக வழக்கு, நீதிமன்றத்தை நாட உள்ளோம். போராட்டத்திலிருந்தும், கோரிக்கையிலிருந்தும் பின்வாங்காது மே17 இயக்கம். தமிழகம் தழுவி ஜனநாயக சக்திகள் இப்போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தமிழினம் கைகோர்த்தால் எதிரிகளை வீழ்த்திடலாம் எனும் உறுதியோடு களம் காண்போம். மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கான இப்போராட்டம் மீனவர் அமைப்புகளை கடந்து பிற அமைப்புகளால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. மீனவர்களுக்கு துணையாக தமிழினம் எழும் என்பதை இப்போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. மேலதிக அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கெடுப்பார்கள். தமிழரின் உரிமையை நிலைநாட்டுவோம். நாளை திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஒருங்கிணைப்பில் தோழர் நெல்லை முபாரக் தலைமையில் தம்ரோ பர்னிச்சர் கடைகள் முற்றுகையில் பங்கெடுக்க அணியமாவோம்.
நாம் வெல்வோம்
மே 17 இயக்கம்.
13-08-2024