இன்று மாலை தூத்துக்குடி தெரேஸ்புரத்தில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தில் பங்கேற்று உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி.
சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன், கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது உற்சாகத்துடன் திரண்டு வந்த சகோதர, சகோதரிகளின் உறுதியும், அர்ப்பணிப்பும், நமது இயக்கத்திற்கு மிகவும் வலு சேர்த்திருக்கிறது.
மக்களின் பங்கேற்பால் உருவாகியிருக்கும் நமது பயணத்தை இன்னும் பல மடங்கு வலுப்படுத்தி, தூய்மையான, பசுமையான, வளமான தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம். (1/2)
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பாஜக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் திரு. @annamalai_k அவர்கள் சுற்றுப்பயணம் மற்றும் சமூக ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.
நாள்: மார்ச் 31
இடம்: ராஜ்பவன், நெல்லித்தோப்பு
Had an excellent meeting with Prime Minister Netanyahu. Expressed gratitude to him for the warm welcome earlier in the day. It is a delight to be back in Israel after 9 years. We discussed a wide range of subjects aimed at boosting bilateral ties. Sectors such as technology, water management, agriculture, talent partnership and more offer immense scope for close collaboration. We also discussed key developments in the region.
@netanyahu
சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் பேசிய பா சிதம்பரம்.
அவருக்கு பலமுறை நாம் பதிலடி கொடுத்து விட்டோம் ஆனால் அதெல்லாம் பத்தாது.
பிரேசில் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்கரன் கொடுக்கும் பதிலடி செருப்படி மாதிரி இருக்கு... 😂
28 வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் கோவையில் மரியாதைக்குரிய தலைவர் திரு அத்வானி அவர்களின் வருகை முன்னிட்டு 12 இடங்களில் வெடித்த குண்டில் 58 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.
அன்று விமானம் தாமதமாக வந்ததால் நூலிலையில் அவர் உயிர் தப்பினார்.
கோவையில் தரையிறங்கியவுடன் அவர் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல விழைந்தார். அப்பொழுது நகரத்தில் 144 தடை உத்தரவு சட்டம் அமலில் உள்ளதால், தங்களை அனுமதிக்க முடியாது என காவலர்கள் தடுத்தனர்.
இருந்தும், எனக்காக காத்திருந்த மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களை நான் சந்தித்தே ஆக வேண்டும் என அவர் மருத்துவமனைக்கு சென்று அவர்களை சந்தித்தார். 12 குண்டுகளில் ஒன்று அவர் சென்ற மருத்துவமனையிலும் வெடித்தது.
இதுதான் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய தைரியம்!
#Courage
இன்றைய தினம் காலை, திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையத்தில் நடைபெற்ற, இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் திரு. கிஷோர் குமார் அவர்களின் மகன் செல்வன் K.U. கவின் மற்றும் செல்வி R. நிகிதா ஆகியோரின் திருமண விழாவில் கலந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
புதுமணத் தம்பதியராய் வாழ்வின் புதிய பயணத்தை துவங்கியிருக்கும் மணமக்கள் இருவரும், எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.
எங்க அண்ணன் எப்பவும்
ஒரேமாதிரி தான் இருப்பாரு
அவரின் மனசு சுத்த தங்கம்.🧡
இப்பேற்பட்ட வாய்ப்பெல்லாம் அந்த சகோதரிக்கு கிடைத்த தவம், வரம்.🙏💐🧡
@annamalai_k
திமுக அரசை மக்கள் CMC அரசு என சொல்கிறார்கள். CMC என்றால் Corruption Mafia Crime ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசாக இருக்கிறது. தமிழக மக்கள் திமுக அரசையும், CMC ஆட்சியையும் விரட்டியடிக்க முடிவு செய்துவிட்டார்கள். இங்கு பாஜக-NDA அரசு அமைவது உறுதி - மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
#NDA4TN
On Thiruvalluvar day, I offer my solemn tributes to the great sage.
Thiruvalluvar Ji's life and works epitomised highest virtues of our civilisation and illuminated the path to pious life and harmonious society. His legacy will continue to guide us on our journey to greatness.
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.
திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் பக்திமிகு வாழ்க்கைக்கும் இணக்கமான சமூகத்திற்கும் வழி வகுத்தன. அவரது மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும்.
திரு எல். முருகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், பொங்கல் திருநாளின் உற்சாகத்தையும் அன்பையும் பிரதிபலித்தன. இந்தப் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும்.
@DrLMurugan
கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக @NewIndianXpress நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம்.
காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதலமைச்சர் திரு @mkstalin குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல,
அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே. பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு அருவருப்பாக இல்லையா?