இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா?
நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.
கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.
என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்.
மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.
இன்னொரு கேள்வி...
இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?
அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது.
ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.
சிறுத்தைகளை விரட்டி விட நாள் குறிச்சிட்டாங்களாமே அன்புமணியும் ஜான் அரோக்கியசாமியும்.. So sad 😭😭..
கார் பார்க் வரைக்கும் வந்து கூட்டிட்டு போறார் புஸ்ஸி 😂😂
நேத்து நீங்க பேசியதற்கும் இந்த பதிவிற்கும் துளியும் சம்பந்தம் இல்லை... அந்த சின்ன பெண்ணை வைத்து எதற்கு வீடியோ போட்டீங்கன்னு மட்டுமே கேக்குறாங்க.. நீங்க போறத பத்தியோ ஆய்வு பண்ணுவதை பற்றியோ எந்த விதமான கேள்வியும் கேட்கவில்லை...
இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி:
கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?
இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.
நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.
நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.
மேலும் ஒரு விஷயம்...
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!
என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!
@selvinnellai87 சென்டர் லைன்ல இன்னொருத்தர் இருக்கணும்... செஸ்ல ராணிக்கு என்ன பவரோ சென்டர் லைன்ல இருக்கவருக்கு அந்த பவர் இருக்கும்...
வேற லெவல் விளையாட்டு... Me one of the king in this game..
மாண்புமிகு அமைச்சர் @sarath0828 பற்றி எனக்கு நன்றாக தெரியும்.. மிகவும் நல்ல மனிதர்...உயர்ந்த பொறுப்பில் உள்ள உங்களை வசைப்பாட,வெறுப்பை பரப்ப வரிசை கட்டி நிற்க தான் செய்வார்கள்..
கடந்து போகவும் அமைச்சரே ✍️
"ஆந்திராவுக்கு போச்சு ஆந்திராவுக்கு போச்சுன்னு சொல்றாங்கள்ள அவங்களுக்கு ஆதாரத்தோட உரிய பதிலடி கொடுக்க ரெடியா இருக்கேன்.."
டிஆர்பி ராஜாவ வேணாம்னு சொல்லி தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க.. மாற்றத்தை ஏத்துக்க சொல்லுங்க.. இன்னும் அவர் தொழிற்துறை அமைச்சராவே வாழ்ந்துகிட்டு இருக்காரு - அமைச்சர் கீர்த்தனா
#TVK | #Keerthana | #TRBRajaa | #PolimerNews
"ஆந்திராவுக்கு போச்சு ஆந்திராவுக்கு போச்சுன்னு சொல்றாங்கள்ள அவங்களுக்கு ஆதாரத்தோட உரிய பதிலடி கொடுக்க ரெடியா இருக்கேன்.."
டிஆர்பி ராஜாவ வேணாம்னு சொல்லி தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க.. மாற்றத்தை ஏத்துக்க சொல்லுங்க.. இன்னும் அவர் தொழிற்துறை அமைச்சராவே வாழ்ந்துகிட்டு இருக்காரு - அமைச்சர் கீர்த்தனா
#TVK | #Keerthana | #TRBRajaa | #PolimerNews
முட்டு அளவாக கொடு
@MaridhasAnswers அவுங்களோட தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சனம் செய்யல..
அமைச்சர் Government protocol மீறி நடக்கராங்க அத தான் சொல்லராரு..நீ அப்படியே உருகாத.. ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது...ஏற்கனவே நீ கொடுத்த முட்டில்தான் முதலமைச்சர் இப்ப ex MLA வாக மாறிட்டார்..
Had high regards on you .
Now realizing that you are just another cheap and crass person who will go to any length for setting a narrative .
Shame @MaridhasAnswers - third Class behaviour !
இங்கு பிரச்சனை உடை இல்லை உங்கள் நடனம் கூட இல்லை
உங்க பிரச்சனை பெரிய பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பில்லாமல் அலைவது தான் 😡
கற்றுக் கொள்வதற்கு பதிலாக திசை திருப்புவது தான்
நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்கு பதிலாக மொத்த கம்பெனிகளையும் வெளி மாநிலத்திற்கு அனுப்புவது தான் 😂
இங்கு பிரச்சனை உடை இல்லை உங்கள் நடனம் கூட இல்லை
உங்க பிரச்சனை பெரிய பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பில்லாமல் அலைவது தான் 😡
கற்றுக் கொள்வதற்கு பதிலாக திசை திருப்புவது தான்
நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்கு பதிலாக மொத்த கம்பெனிகளையும் வெளி மாநிலத்திற்கு அனுப்புவது தான் 😂