ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தமிழ் மண்ணில் முதன்முதலில் ஒலித்த சிம்மக்குரல், நம் மதிப்பிற்குரிய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அண்ணல் அம்பேத்கருக்கும் முன்பே, லண்டன் வட்டமேஜை மா��ாடுகளில் (1930 - 1932) கலந்துகொண்டு, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்குரிமையும், முறையான பிரதிநிதித்துவமும் வேண்டும்" என்று பிரிட்டிஷ் அரசிடமே நெஞ்சுறுதியோடு வாதிட்ட மாபெரும் ஆளுமை அவர்.
1893-லேயே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ‘பறையன்’ என்ற இதழைத் தொடங்கி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சென்னை மாகாணச் சட்டசபை உறுப்பினராக (1923 - 1936) இருந்தபோது, பொது நீர்நிலைகளில் அனைவரும் தண்ணீர�� எடுக்கலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவரக் காரணமாய் இருந்தவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 'பூனா ஒப்பந்தத்தில்' அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து கையெழுத்திட்ட பெருமைக்குரியவர்.
"தன்னம்பிக்கை கொள்ளுங்கள், கல்வி பயிலுங்கள், உரிமைகளுக்காகப் போராடுங்கள்" என்று தன் வாழ்நாளெல்லாம் உழைத்த அந்தச் சமூகப் போராளியின் வழியில் நடப்போம். சாதியற்ற, சமத்துவமான சமுதாயத்தைப் படைக்க இந்நாளில் உறுதியேற்போம்!
வீழ்ந்துக் கிடந்த சமூகத்தை நிமிர்த்திய அந்தச் சரித்திர நாயகருக்கு எங்களின் வீரவணக்கங்களும், பிறந்தநாள் வாழ்த்துகளும்!
இன்றைய தினம் 28.06.2026, ஞாயிற்றுக்கிழமை - தமிழர் தேசம் கட்சியின், மாநில, மாவட்ட செயலாளர்கள் சந��திப்பு கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு, பொன்னி அரங்கத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த, கூட்டத்திற்கு தலைமையேற்று, கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்து, நிர்வாகிகளிடம் விரிவான விவாதம் நடத்தினேன்!. மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
எனது அன்பான முத்தரையர் சமுதாயச் சொந்தங்களுக்கும், சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கும், என் அன்பான வணக்கங்கள்.
நமது வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு எடுத்துச் செல்லவும், சமுதாய மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஒரு வலிமையான, அர்ப்பணிப்புமிக்க தலைமை தற்போதைய தேவையாக உள்ளது.
அந்த வகையில், சங்கத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, சமுதாயப் பணியே தன் மூச்சு என வாழும் தகுதியான ஒருவரை உங்களின் முன்னிலையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நமது வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் "மாநிலத் தலைவராக" மதிப்பிற்குரிய சகோதரர் திரு. நடராஜன் பூசாரி அவர்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுகிறார்!
மாநிலத் தலைவர் என்பது வெறும் பதவியல்ல; அது ஒட்டுமொத்த சமுதாயத்தையும், சங்கத்தையும் சரியான பாதையில் வழிநடத்தும் ஒரு பெரும் பொறுப்பு.சங்கத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கடைக்கோடித் தொண்டன் வரைக் கொண்டு சேர்த்து, இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவது இப்பதவியின் முக்கியத்துவமாகும்.
நீண்ட காலமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி, சமுதாய மக்களுக்காகக் களத்தில் நின்று உழைத்த உன்னதப் போராளி. அடித்தட்டு மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து, அவர்களின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் எளிய மனிதர். சங்கத்தின் கொள்கைகளைத் நெஞ்சில் ஏந்தி, கட்டுக்கோப்புடன் இயக்கத்தை வழிநடத்தும் ஆளுமைத் திறன் கொண்டவர்.
நமது சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும், புதிய மாநிலத் தலைவர் திரு. நடராஜன் பூசாரி அவர்களுக்கு உங்களது முழு ஒத்துழைப்பையும், பேராதரவையும் நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
"ஒற்றுமையே வலிமை! சமுதாய முன்னேற்றமே நமது இலக்கு!"
தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் திரு.கே.பாக்கியராஜ் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
தமிழ் திரைப்பட உலகின் மிகச்சிறந்த இயக்குநராகவும், ஈடு இணையற்ற திரைக்கதை ஆசிரியராகவும், முத்திரை பதி���்த நடிகராகவும் விளங்கிய திரு.கே.பாக்கியராஜ் அவர்கள் மறைந்த ச���ய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், ஆழமான துயரமும் அடைந்தேன்.
மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையும், எளிய உணர்வுகளையும், நகைச்சுவை ததும்பும் திரைக்கதை வடிவமாக மாற்றி, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த பெருமை அவருக்கு உண்டு. அதிமேதாவித்தனமான வசனங்களோ, பிரம்மாண்டமான காட்சிகளோ இல்லாமல், மிக எளிய மனிதர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான வெற்றித் திரைப்படங்கள�� உருவாக்கியவர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராகத் தன் பயணத்தைத் தொடங்கி, சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள், தாவணிக் கனவுகள், தூறல் நின்னு போச்சு, சின்ன வீடு, போன்ற காலத்தால் அழியாத காவியங்கள் மூலம், எப்படித் திரைக்கதை எழுத வேண்டும�� என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர். ஒரு சாமானிய மனிதனும் திரையில் நாயகனாக வெல்ல முடியும் என்பதைத் தனது யதார்த்தமான ��டிப்பின் மூலம் நிரூபித்தவர்.
திரைத்துறையில் மட்டுமல்லாமல் இலக்கியம், பத்திரிகை உலகம் (பாக்யா இதழ்) எனத் தடம் பதித்த இடமெல்லாம் முத்திரை பதித்தவர். இன்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வரும் பல முன்னணி இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும் திகழ்ந்தார்.
அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அவர் உருவாக்கிய திரைக்கதை உத்திகளும், கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா உள்ளவரை வாழ்ந்து கொண்டே இருக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் ப��ரார்த்திக்கிறேன்!..
திருவண்ணாமலை கிரிவலப் பாதை சாதுக்கள் மீதான காவல்துறையின் அத்துமீறிய சோதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது! சோதனை என்ற பெயரில் குற்றவாளிகளைப் போல் நடத்தி, அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும்!!
பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கிரிவலப் பாதையில், தியானத்திலும் ���றை வழிபாட்டிலும் ஈடுபட்டு வரும் சாதுக்கள் மற்றும் துறவிகளிடம் போதைப்பொருள் தடுப்பு என்ற பெயரில் காவல்துறை நடத்தியுள்ள சோதனையானது அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. காவல்துறையின் இந்த அத்துமீறிய நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திருவண்ணாமலை என்பது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீகப் பயணிகளும், சித்தர்களும், முனிவர்களும் தேடி வரும் ஒரு தபோபூமி. இங்குள்ள கிரிவலப் பாதையில் தங்கி, தியானத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டு வரும் சாதுக்கள் இந்த மண்ணின் ஆன்மீக அடையாளத்தின் ஒரு பகுதியாவர்.
ஒட்டுமொத்த சாதுக்கள் சமூகத்தையுமே ஏதோ சமூக விரோதிகள் போலவும், போதைப்பொருள் கடத்துபவர்கள் போலவும் சித்தரித்து, பொதுவெளியி��் அவர்களைச் சோதனைக்கு உள்ளாக்கியது ஆன்மீக மரபிற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
காவல்துறைக்குக் குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருட்களை ஒழிக்கவும் முழு அதிகாரம் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பதை விடுத்து, சாதுக்கள் என்ற அடையாளத்திற்காகவே சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை எந்த ���ிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆன்மீகத் தலங்களில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அதன் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள், கடத்தல் ஆசாமிகள் மற்றும் வணிக ரீதியாகச் செயல்படும் சட்டவிரோத கும்பல்களைக் காவல்துறை கண்டறிய வேண்டும். அதை விடுத்து, எவ்விதப் பின்னணியும் இன்றி, கிரிவலப் பாதையையே கதியாகக் கொண்டு வாழும் எளிய சாதுக்களை அச்சுறுத்துவது காவல்துறையின் இயலாமையையே காட்டுகிறது.
கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்தி, அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும். சோதனை என்ற பெயரில் சாதுக்களின் உடமைகளைச் சேதப்படுத்துவதோ, அவர்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.
ஆன்மீகத் தலங்களின் புனிதத்தன்மையையும், அங்கு வாழும் சாதுக்களி��் பாதுகாப்பையும் உறுதி செய்ய முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
தமிழர் தேசத்தின் கொள்கை வழிகாட்டி, தியாக சீலர் ஐயா.பூ.கக்கன் அவர்களின் பிறந்த தினத்தில் அவர் பிறந்த மண், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைபட்டியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்!..
நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்து, சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த, கொள்கை வழிகாட்டி, தியாக சீலர் ஐயா பூ.கக்கன் அவர்களின் 119 வது பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் எளிமையையும் நெஞ்சாரப் போற்றி வணங்குவோம்!
தமிழக அமைச்சரவைய��ல் பொதுப்பணித்துறை, உள்துறை போன்ற மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தபோதும், இறுதிவரை மிக எளிய வாடகை வீட்டிலும், அரசுப் பேருந்திலும் பயணித்த தூய்மையான அரசியல்வாதி.
அதிகாரமும் பதவியும் தேடி வந்தபோதும், தன் குடும்பத்திற்காகவோ, சொந்த நலனுக்காகவோ எவ்வித சலுகையையும் பயன்படுத்தாத "நேர்மையின் மறுபெயர்".
பட்டியல் சமூக மக்களின் கல்வி, உரிமை மற்றும் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர���. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர்.
தமிழகத்தின் மிக முக்கிய அணைகளான வைகை மற்றும் மேட்டூர் கால்வாய் திட்டங்கள் இவரது பொதுப்பணித்துறை அமைச்சர் காலத்தில்தான் திறம்படச் செயல்படுத்தப்பட்டன.
"பதவிகள் வரும், போகும்; ஆனால் நேர்மையும், மக்கள் தொண்டுமே ஒரு மனிதனை வரலாற்றில் அழியாமல் வாழ வைக்கும்."
அதிகாரத்தில் இருப்��வர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்குத் தன் வாழ்க்கையையே பாடமாகச் சித்திரமாய் வரைந்து சென்ற மாமனிதர் கக்கன் அவர்கள்.
அவரது பிறந்தநாளில், அவர் காட்டிய நேர்மை, எளிமை, மற்றும் பொதுநலன் ஆகிய நற்பண்புகளை நம் வாழ்வில் பின்பற்றி வாழ உறுதி ஏற்போம்!
காவல்துறையினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட, ஆகாஷ் டெலிசனில் உடலை காவல்துறையினரே அடக்கம் செய்ய முற்படுவது அதிகார அக்கிரமத்தின் உச்சம்! நீதி கேட்டுப் போராடுவோரின் குரல்வளையை நசுக்கும் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!..
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் பகுதியைச்சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி ஆகாஷ் டெலிசன் காவல்துறையினரால் அடித்து படுகொலை செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு இழைக்கப்படும் அநீதி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உலுக்கியுள்ளது.
சட்டஒழுங்கை பாதுகாக்க வே��்டிய காவல்துறையே, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு உயிரைப் பறித்திருப்பது மிகக் கொடூரமான மனித உரிமை மீறலாகும். தம்பி ஆகாஷ் டெலிசனின் மரணத்திற்கு முறையான நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளான காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உறவினர்கள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராடி வருகின்றனர்.
ஒரு குடும்பம் தங்கள் பி��்ளையின் உடலை வாங்க மறுத்து 90 நாட்களுக்கு மேல் போராடுகிறது என்றால், அங்கு எந்த அளவிற்கு நீதியும் சட்டமும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் வழங்குவதை விடுத்து, 3 மாதங்கள் கடந்துவிட்டத���கக் கூறி, காவல்துறையினரே ஆகாஷின் உடலை அடக்கம் செய்ய முற்படுவது அதிகார அக்கிரமத்தின் உச்சமாகும். குற்றத்தை மூடிமறைப்பதற்கும், தங்களுக்கு எதிரான சான்றுகளை அழிப்பதற்கும் காவல்துறை அவசர அவசரமாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மதுரை அரசு மருத்துவமனை முன்பாகக் கூடி, காவல்துறையின் இந்தத் தன்னிச்சையான முடிவிற்குத் தங்களின் தார்மீக எதிர்ப்பைத் தெரிவித்த ஆகாஷ் டெலிசனி���் உறவினர்களை, காவல்துறை வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று கைது செய்துள்ள செயல் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். நீதி கேட்டுப் போராடும் ஒரு குடும்பத்தின் குரல்வளையை நசுக்கும் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆகாஷின் மரணத்திற்கு காரணமான அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும���. இக்கொடூரச் சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷின் உறவினர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான அடக்குமுறைகளை காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஆகாஷின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் தகுந்த இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும். இந்த விவ��ாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
கும்முடிபூண்டியில் 3 வயது பெண் குழந்தை, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக���கான பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது! தமிழக அரசு, குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம் உட்சபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!.
திருவள்ளூர் மாவட்டம், கும்முடிபூண்டியில், 3 வயது அறியாப்பருவப் பெண் குழந்தை, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டிருக்கும், சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த அவல நிகழ்வே சாட்சியாகும். தமிழகத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வரும் சூழலில், தற்போது 3 வயதுக் குழந்தை கூட பாதுகாப்பாக வாழ முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வடமாநிலத் தொழிலாளர்களின் வருகை மற்றும் அவர்களின் பின்னணி குறித்த முறையான கண்காணிப்போ, பதிவுகளோ காவல்துறையிடம் இல்லாததே இதுபோன்ற தொடர் குற்றங்களுக்குக் காரணமாக அமைகிறது. இந்த விஷயத்தில் தவெக அரசு முற்றிலும் கோ���்டை விட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், இத்தகைய கொடூரங்கள் அரங்கேறும்போது வெறும் வேடிக்கை பார்ப்பவராக மட்டுமே இருக்கிறார். குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ எவ்வித பயமும் இல்லை என்பதைத் தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது.
ஒரு பச்சிளம் குழந்தையைக் கூட பாதுகாக்கத் தவறிய இந்த அரசு, எதைக் காட்டி தங்களை நல்லாட்சி என்று மார்தட்டிக் கொள்ளப் போகிறது?
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட வடமாநிலக் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து, விரைவு நீதிமன்றம் மூலம் உச்சபட்ச தண்டனை உடனடியாகப் பெற்றுத்தரப்பட வேண்டும். மேலும், தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் முழு விவரங்களையும், அவர்களின் குற்றப் பின்னணியையும் காவல்துறை உடனடியாகச் சரிபார்த்து முறைப்படுத்த வேண்டும்.
'மா��்றத்தை உருவாக்குவோம்' என்ற முழக்கத்தோடு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு, பதவியேற்ற சில காலத்திற்குள்ளேயே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றன. பொது இடங்கள், பணியிடங்கள் என எங்குமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் போது, இந்த அரசு வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே எடுக்கிறதே தவிர, குற்றங்களுக்கான மூலக் காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுக்க எவ்விதத் தீர்க்கமான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
வெற்று விளம்பரங்களை விடுத்து, மக்களின் அன்றாடப் பாதுகாப்புக்கு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்!
மக்களுக்குப��� பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்கிவிட்டு, நல்லாட்சி நடப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவெக அரசு இனியாவது தன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
தியாகச் செம்மல் ஐயா பூ.கக்கன் ஜி அவர்களின் 119 வது பிறந்தநாள் விழா மதுரை மாவட்டம���, தும்பைப்பட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது.
அன்புடையீர் வணக்கம், நம் தாய்த்தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில், உண்மை, நேர்மை, எளிமை ஆகியவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர், பதவிகள் தேடி வந்தபோதும் ஆடம்பரத்தை வெறுத்து, ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தூயவர். உள்துற��, காவல்துறை, எனப் பல்வேறு முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்தபோதும், பொதுப்பணத்தை தன் சுயலாபத்திற்காக ஒரு பைசா கூட பயன்படுத்தாத தியாக வரலாறு அவருடையது.
அதிகாரமும் பதவியும் மக்களுக்குச் சேவை செய்வதற்கே தவிர, சுயவிளம்பரத்திற்கோ, சொத்து சேர்ப்பதற்கோ அல்ல' - என்று தன் வாழ்நாளின் இறுதிவரை வாழ்ந்து காட்டிய உன்னதத் தலைவர் கக்கனார். அவரது கொள்கைகளையும், தூய்மையான அரசியல் சிந்தனைகளையும் நெஞ்சில் ஏந்திப் பயணிக்கும் நாம், அவரது புகழை உலகறியச் செய்வதும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் நமது முதற்கடமையாகும்.
நமது தமிழர் தேசம் கட்சியின் கொள்கை வழிகாட்டி, தியாகச் செம்மல் ஐயா பூ.கக்கன் ஜி அவர்களின் 119 வது பிறந்தநாள் விழா, எதிர்வரும் 18.06.2026,வியாழக்கிழமை, காலை 10 மணியளவில் தமிழர் தேசம் கட்சி சார்பில���, மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது.
எனவே, தமிழர் தேசம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் இந்த விழாவில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!.
வாரீர்! தியாகத் தலைவரின் புகழைப் போற்றுவோம்!
"மண்டியிட்டு வாழ்வதை விட, நிமிர்ந்து நின்று சாவதே மேல்" என்று உலகிற்கு போதித்து, அதன்படியே தன் வாழ்வை அர்ப்பணித்த ��ாபெரும் புரட்சியாளர், உலக ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி தோழர் சே குவேரா அவர்களின் பிறந்தநாளில் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபாவின் விடுதலைக்காக களம் கண்டு, காங்கோவிலும் பொலிவியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தன் குருதியைச் சிந்தியவர் சே. எந்த மண்ணில் அநீதி இழைக்கப்பட்டாலும், அதை எதிர்த்துப் போராடுவதே ஒரு புரட்சியாளனின் ஆகச்சிறந்த குணம் என்பதைத் தன் வாழ்நாளின் மூலம் நிரூபித்துக் காட்டியவர்.
தன் நாட்டின் வளங்கள் அந்நிய சக்திகளால் சுரண்டப்படுவதை எதிர்த்து சே குவேரா நடத்திய போராட்டம், நம் தமிழ் மண்ணின் வளங்களையும் உரிமைகளையும் காக்க நாம் நடத்தும் போராட்டத்திற்குப் பெரும் ஊக்கமாகும்.
சமரசமற்ற அவரது போராட்டக் குணம், தமிழினத்தின் உரிமைக்கான பாதையில் சமரசம் செய���துகொள்ளாமல் முன்னேற நமக்கு வழிகாட்டுகிறது.
"உலகில் எங்கேனும் ஒரு அநீதி நடந்தால், அதைக்கண்டு உன் உள்ளம் கொதித்தெழுமானால், நீயும் என் தோழனே" என்ற சே-வின் வரிகளுக்கு இணங்க, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், ஏகாதிபத்தியச் சுரண்டல்களுக்கு எதிராகவும் தமிழர் தேசம் தன் போராட்டப் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும்!
புரட்சி ஓங்குக! சே குவேராவின் புகழ் வாழ்க!..
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 3 முக்க���ய செய்தி அலைவரிசைகளை தன்னிச்சையாக நீக்கியது வண்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடக சுதந்திரத்தை நசுக்கும் இந்த சனநாயக விரோதப் போக்கைக் கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களை எவ்வித நிபந்தனையுமின்றி, உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும்!..
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மூன்று முக்கிய செய்தி சேனல்களான, @polimernews , @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகிய தொலைக்காட்சிகளை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தனது ஒளிபரப்புத் தொகுப்பிலிருந்து தன்னிச்சையாக நீக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்க���ம் ஊடகத் துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்களாட்சியில் மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதும், அரசின் செயல்பாடுகளை நடுநிலையோடு விமர்சிப்பதும் ஊடகங்களின் கடமையாகும். ஆனால், மாற்றுக்கருத்துகளுக்கோ அல்லது தங்களுக்குச் சாதகமற்ற செய்திகளுக்கோ இடமளிக்கக் கூடாது என்ற நோக்கில், அரசு பொதுத்துறை நிறுவனத்தைப் பயன்படு��்தி இவ்வாறு சேனல்களை முடக்குவது சனநாயக விரோதச் செயலாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை காரணமாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆளும் அரசின் நிர்வாக சீர்கேடுகளால் மக்கள் படும் அவதிகளை இந்த மூன்று செய்தி சேனல்களும் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. நீ��்கப்பட்ட மூன்று செய்தி சேனல்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக அரசு கேபிள் அலைவரிசையில் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும். அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, ஒளிபரப்பை முடக்குவதன் மூலம் ஊடகங்களை மறைமுகமாக அச்சுறுத்தக் கூடாது.
ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்க உருவாக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம், அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.
கருத்து��் சுதந்திரமும், ஊடகச் சுதந்திரமுமே ஒரு ஆரோக்கியமான சனநாயகத்தின் அடையாளமாகும்.
அதை நசுக்க முற்படுவது மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கூண்டில் அடைப்பதற்குச் சமம்.
அரசு தனது இந்த மக்கள் விரோத, ஊடக விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் உடனடியாக அலைவரிசைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துக���றேன்!..
தமிழகத்தின் மரபுசார் அடையாளமும், இயற்கை பானமுமான "கள்" மீதான தடையை உடனடியாக நீக்கி, விவசாயிகளின் பொருளாதாரத்தை தமிழக அரசு மேம்படுத்திட வேண்டும்!
தமிழகத்தின் மரபுசார் அடையாளங்களிலும், கிராமப்புறப் பொருளாதாரத்திலும், தென்னை மற்றும் பனை மரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனினும், கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ள "கள்" தடை உத்தரவு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியில் கள் ஒரு பாரம்பரிய உணவாகவும், இயற்கை பானமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இதற்கு விதிக்கப்பட்டு��்ள தடை இயற்கை விவசாயத்திற்கும் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கும் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தென்னை மற்றும் பனை மரங்களை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான குறு, சிறு விவசாயிகளுக்குக் கள் ஒரு நிலையான வருமான வாய்ப்பை வழங்கும். தேங்காய் மற்றும் கொப்பரை விலையில் ஏற்படும் அதீத விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடனாளியாவதைத் தடுத்து, அவர்களுக்குத் தினசரி வருமானம் கிடைக்க வழிவகை செய்யும். ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காயை விட, கள் மற்றும் அதன் உபரிப் பொருட்கள் மூலம் 3 முதல் 4 மடங்கு கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.
��ரத்திலிருந்து இறக்கப்படும் தூய்மையான கள்ளில் குறைந்த அளவே (சுமார் 4% முதல் 5% வரை) இயற்கை ஆல்கஹால் உள்ளது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் நிறைந்துள்ளன. இரசாயனங்கள் கலந்த மதுவகைகளை விட, இது ஒரு சிறந்த இயற்கை ஆரோக்கிய பானமாகும்.
மரமேறும் தொழிலாளர்கள், கள் சேகரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்குப் புதிய வாழ்வாதாரம் கிடைக்கும். பத���ீர், கருப்பட்டி, பனை வெல்லம், பனஞ்சர்க்கரை போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி அதிகரித்து, கிராமப்புறப் பெண்களின் சுயஉதவிக் குழுக்களுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
தற்போது தமிழகத்தில் விற்கப்படும் ரசாயன மதுவிற்குப் பதிலாக மக்கள் ஒரு இயற்கை பானத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படும். கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களின் புழக்கம் முற்றிலுமா�� ஒழிக்கப்படும்.
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிப்பது என்பது வெறும் மதுவிலக்குச் சார்ந்த முடிவு அல்ல; அது விவசாயிகளின் வாழ்வுரிமைச் சார்ந்தப் போராட்டம். அண்டை மாநிலங்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, உரியக் கட்டுப்பாடுகளுடன் கள் இறக்க அனுமதிப்பதன் மூலம் ��மிழக விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு, கிராமப்புறங்கள் சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும். எனவே, உடனடியாக இதற்கான தடையை நீக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
ஆளுங்கட்சி செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. பொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது.
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும் ஆளுங்கட்சியி���் தவறுகளை சுட்டிக் காட்டுவதும்,விமர்சிப்பதும், இயல்பானது.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த திரு. மாரிதாஸ் என்ற யூடியூபர் அமைச்சர்கள் திரு.ஆதவ் அர்ஜுனா, திருமதி.கீர்த்தனா மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி.லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோரை விமர்சனம் செய்ததற்காக
சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை ��ரவோடு இரவாக வீடு புகுந்து கைது செய்துள்ளது.
இதனை தமிழர் தேசம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது சனநாயகத்திற்கு விரோதமானது.
சட்டம் ஒழுங்கு மற்றும் போதை கலாச்சாரத்திற்கு முந்தைய அரசுதான் காரணம் என கூறி தட்டிக் கழித்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்,ஒருவர் விமர்சனம் செய்தார் என்பதற்காக இத்தனை வேகமாக செயல்பட்டு அவரை கைது செய்திருப்பது பழிவாங்கும் போக்��ை காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட, யூடியூபர் திரு.மாரிதாஸ் அவர்களை உடனடியாக விடுதலை செய்து சனநாயகத்தை காத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!..
@CMOTamilnadu
இன்றைய தினம், 05.06.2026, வெள்ளிக்கிழமை - தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, மாநில அரசின் சார்பில், புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டம் 2008-ன் படி (The Collection of Statistics Act, 2008) சாதிவா��ி கணக்கெடுப்பு (Caste Survey) நடத்துவதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் @draramadoss அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம், தலைநகர் சென்னை, தியாகராயர் நகரில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு எனது தரப்பு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்தேன்!
"வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழ��க இருக்கட்டும்!" என்று முழங்கி, தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் விடியலுக்காகவும் அர்ப்பணித்த முத்தமிழறிஞர், டாக்டர்.கலைஞர் அவர்களின் பிறந்ததினம் இன்று.
ஒரு சாதாரண மனிதனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை அரியணை ஏறி, அரை நூற்றாண்டு காலம் இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய ஒரு மாபெரு���் ஆளுமையின் பிறந்தநாளை இன்று நாம் போற்றிக் கொண்டாடுகிறோம்.
"ஓய்வறியாமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறைக் கவிதையைத் தானே எழுதினார். அவரது 94 ஆண்டு கால வாழ்வில், அவர் உழைக்காத நாளே இல்லை என்று கூறலாம்.
அதிகாலையிலேயே எழுந்து முரசொலியில் 'உடன்பிறப்பே' என்று அவர் எழுதும் கடிதங்கள், தொண்டர்களின் ரத்தத்தை உஷ்ணமாக்கும் சக்தி கொண்டவை. மேடைப் பேச்சில��ம், திரைத்துறையிலும், இலக்கியத்திலும் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்.
அரசியலில் எத்தனையோ சறுக்கல்கள், நெருக்கடி நிலை (Emergency) காலக் கொடுமைகள், தோல்விகள் வந்தபோதும், ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்து வந்த இரும்பு மனிதர்.
இன்று தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பதற்கு கலைஞர் போட்ட அடித்தளமே முக்கியக் காரணம்:
பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம். சென்னை தரம��ியில் 'டைடல் பார்க்' (Tidel Park) அமைத்து, தமிழகத்தை ஐடி (IT) துறையின் உலகளாவிய வரைபடத்தில் ஏற்றிய பெருமை. இலவச விவசாய மின்சாரம், ஏழைகளுக்கு இலவசக் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரங்கள். இன்னும் எத்தனையோ!..
தமிழ்நாடு இருக்கும் வரை, தமிழ் மொழி வாழும் வரை, கலைஞரின் பெயரும் புகழும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். கலை, இலக்கியம், அரசியல் எனப் பன்முகத் திறமையால் நம்மை வியக்க வைத்த அந்தப் பேராசானின் நினைவைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நீதியும் நிறைந்த தமிழகத்தைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம்!
"வாழ்க கலைஞர் புகழ்! வளர்க தமிழ்!"
அனைவருக்கும் எனது மனமார்ந்த தியாகத் திருநாள் பக்ரீத் நல்வாழ்த்துகள்!
இறைவனின் தூதர் இப்ராஹீம் அவர்களின் உன்னதமான தியாகத்தையும், அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும் போற்றும் புனிதமான நாள் இன்று.
நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து மகிழும் ஈகைப் பண்பையும், சக மனிதர்கள் மீது காட்டும் உறைவிடமில்லா அன்பையும் இந��த நன்னாள் நமக்குக் கற்றுத் தருகிறது. தியாகமும், மனிதநேயமும் மட்டுமே இந்த உலகை இன்னும் அழகாக்க வல்லவை.
இந்த இனிய பக்ரீத் திருநாளில், எல்லா��் வல்ல இறைவன் உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், நீடித்த அமைதியையும், அனைத்து வளங்களையும் வாரி வழங்க வேண்டுகிறேன்.
மகிழ்ச்சியைப் பகிர்வோம்... மனிதநேயத்தைக் காப்போம்!
அனைத்து இசுலாமிய சொந்தங்களுக்கும், என் நெஞ்சம் நிறைந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!..
தமிழர் பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 வது சதயவிழாவின் இறுதி நிகழ்வாக, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் "சதயவிழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம்" சிவ��ங்கை அரண்மனைவாசலில் சிறப்பாக நடந்து முடிந்தது!..
இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று எழுச்சி உரையாற்றினேன்!
இந்நிகழ்வில், தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் அனைத்துநிலை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
#முத்தரையர்_சதயவிழா