ஆனானப்பட்ட மூத்த கொத்தடிமைகளையே மக்களின் துணையோடு வீழ்த்தி விட்டோம்.
பொடிசு கொத்தடிமைகளை எங்களின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் செல்ல குட்டீஸ்கள் கவனித்து கொள்வார்கள்.
கொத்தடிமை என்பது பெருமை இல்லை. அது அடிமைத்தனம்.
கொத்தடிமையாக இருப்பது பெருமை என்று புதிதாக உருவாகி உள்ள பொடிசுகள் வீட்டில் போய்ட்டு ��ொல்லி விடாதீர்கள்.
சோறு போடமாட்டாங்க😁.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது..
தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புல��்�� வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது!
ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாத��யில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்.
சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர்.
கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்க��ில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள்.
தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள்.
எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!
@news7tamil ஆட்சியில் அமர்ந்து முழுதாக பத்து நாட்கள் கூட ஆகவில்லை என்பது தெரிந்தும் கூட்டணி கட்சி��ள் கொடுக்கும் அற்ப பணத்திற்காக விமர்சனம் செய்யும் இவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.5.2026) தலைமைச் செயலகத்தில், TAFE நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திருமதி மல்லிகா சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் லட்சுமி வேணு ஆகியோர் சந்தித்தபோது,
1/2
2/2
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகத்தை இந்த தேர்தலில் ஆதரிக்கிறேன், விஜயை ஆதரித்து இணைய பரப்புரை செய்து என்னால் முடிந்த ஆதரவை விஜய்க்கு திரட்டிக் கொடுப்பது மட்டுமே எனது நோக்கம், இதில் எந்த மாற்றமும் கிடையாது.
தேர்தலில் வ��ஜய் வெல்ல வேண்டும் என்பது மாற்றத்திற்கான இளைஞர்களின் நம்பிக்கை அதே போல ஒரு நம்பிக்கை தான் என்னிடமும் அவர் மீது உள்ளது, அவர் வந்தால் கட்டாயம் மாற்றங்கள் வரும், ஏழை எளிய மக்கள் மீது அக்கறை செலுத்தும் ஒரு நபராக விஜய் பார்க்கப்படுகிறார், அவர் ஆட்சிக்கு வந்தால் ஏழை எளிய மக்களின் நலன் காக்கப்படும் என்று நம்புகிறார்கள்.
விஜய் பல தடைகளை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார், அரச��யல் களத்தில் அவருக்கு ஆதரவாக இருக்கும் தொண்டர்கள், ரசிகர்கள் தான் அவரது பலம். ஆகவே இந்த சிக்கல்களை அவர் கடந்து வென்று ��ருவார் என்று நானும் நம்புகிறேன்.
#TVKForTN
ச���தந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய கு��ும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத ���ிரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவர��� இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாய�� இலக்கை உறுதியாக வெல்வோம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.