இன்று We The Leaders சார்பாக சென்னையில் நடைபெற்ற சுற்று சூழல் பாதுகாப்பு பேரணியில் நமது பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டையில் இருந்து கலந்து கொண்ட இயக்க தலைவர்கள். அற்புதமாக உரையாற்றிய சகோதரர் திரு.அண்ணாமலை அவர்கள் வருங்கால சந்ததியினர்களுக்கு தேவையான வளங்களை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் இவ்வளவு மோசமான சுற்று சூழல் இருக்கும் நிலையில் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார் அதே நாம் அனைவரும் ஒன்றினைந்து முயற்ச்சி செய்தால் மாற்றத்தை நிச்சயம் கொண்டுவரலாம் என்று நம்பிக்கை கொடுத்தார் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் படித்த முன்னோடிகள் இன்னிகழ்ச்சியில் கலந்து கொண்டது சிறப்பு. கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். #Wetheleaders
@annamalai_k@WTLFoundation@sembakkamveda@KaruNagarajan@Srikantkarunesh@vasanthrajan_k
2026 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்கள் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும்படி கூறியுள்ளார்.
அவர் பதவி ஏற்ற காலத்தில் இருந்து நாட்டுமக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டும் வகையில் இந்த நிகழ்வை முன்னெடுக்கிறார் அதே உணர்வுடம் நாமும் தொடர்ந்து வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றிவருகிறோம்.
வாழ்க பாரத அன்னை!வாழ்க தமிழ் தாய்.
@narendramodi@annamalai_k
பாராளுமன்ற தொகுதி மறுசீறமைப்பு பற்றிய நேற்று தமிழக சட்டமன்றத்தில் இயற்ற தீர்மானம் பற்றி மக்கள் மனநிலை என்னவென்றால் முதல்வர் விஜய் மற்றும் ஆட்சியாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்பதை தாண்டி அறிவே இல்லாதவர்கள் என்று நினைக்க தோன்றுகிறது காரணம் 1971 ற்கு பிறகு தொகுதி மறுசீறமைப்பு நடக்கவே இல்லை அதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும் தற்போதைய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அதை சீர் செய்ய தொடங்கியிருக்கிறார் தொகுதி விகிதாச்சாரபடி நமக்கு எண்ணிக்கை குறைய கூடாது அதுதான் நாம். கேட்கவேண்டியது.
1971ல் இருந்த மக்கள் தொகை என்ன இப்போது இருக்கும் மக்கள் தொகை என்ன நிர்வாகம் எப்படி செய்யமுடியும் நமது தமிழகத்தில் அதன் பிறகு எத்தனை மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து புதிதாக உருவாக்கியிருக்கிறோம்.
இது பற்றியெல்லாம் எந்த புரிதலும் இல்லாமல் இந்த அமைச்சரவை தொகுதி எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக சட்டசபையை கேலிக்கூதாக்கி இருக்கிறார்கள்.
@annamalai_k@CMOTamilnadu
We The Leaders சார்பாக வரும் 18 ஆம் தேதி நடக்கும் சுற்றுசூழல் பாதுகாப்பு பேரணிக்கு பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டையில் இருந்து செல்லும் இயக்க சகோதரர்களுக்காக சகோதரர் திரு. அண்ணாமலையின் அவர்களின் அடையாளமாக T. Shirts தயார் செய்து கொண்டிருக்கிறேன் அனைவரும் ஒன்றாக இனைந்து நம் அடையாளத்துடன் பேரணியில் கலந்து இது எதுவாக இருக்கும்.
@annamalai_k@WTLFoundation@KaruNagarajan@sembakkamveda
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே🙏
வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னையில் We The Leaders சார்பாக அன்பு சகோதரர் திரு.K.அண்ணாமலை அவர்களின் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான பேரணி நடக்க உள்ளது. அந்த பேரணியில் நம் பகுதியில் இருந்து பல்லாவரம் தொகுதி சகோதர சகோதரிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பேரணியை வெற்றிபெற செய்யவேண்டும்.
அரசியலையே ஒரு சேவையாக செய்தவர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கமாக கொண்டு பல்வேறு கட்சியில் இருந்து இந்த இயக்கத்தில் இணைந்த அனைவரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க சகோதரர் திரு.அண்ணாமலை அவர்கள் பின் நிற்கவேண்டும்.
இயக்கம் தொடங்கி முதன்முறையாக சென்னையில் சென்னையில் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது அதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
நான் அவர் தலைமையின் கீழ் பணியாற்றியவன் அவரது உழைப்பு என்னவென்று நன்கு அறிந்தவன் அவரால் தமிழகத்தில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொடுக்க முடியும் அந்த காலம் வெகுதொலைவில் இல்லை.
படித்த, நிர்வாகம் தெரிந்த ஒருவர் பின்னால் நாம் அணிவகுப்போம் வளர்ச்சி, சமுதாய மாற்றம்,மக்கள் நலன் போன்றவற்றை முன்னெடுக்கும் அவருக்கு எந்த எதிபார்ப்பும் இன்றி ஆதரவு தர வேண்டும் எனவே இந்த பேரணியை வெற்றிபெற செய்ய நாம் அனைவரும் ஒன்று திரள்வோம் வென்று காட்டுவோம். வாழ்க தமிழ் அன்னை, வாழ்க பாரதத்தாய் 🙏.
@annamalai_k@WTLFoundation
தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் We the Leaders ஆகஸ்ட் 16ம் தேதி சென்னை பேரணி நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட செங்கல்பட்டு மாவட்ட WTL குடும்ப ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தாம்பரத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் குரோம்பேட்டை பகுதியில் இருந்து கலந்து கொண்டு பேரணிக்கான அழைப்பிதழை பெற்றுக்கொண்டோம்.
@annamalai_k@WTLFoundation
சென்னை, பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டைய ஜமீன் ராயப்பேட்டை என்னும் இடத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழாவிற்கு
We The Leaders சார்பாக வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்கள்.
@annamalai_k@WTLFoundation
இன்று காலை பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டை, கணபதிபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 1000 நபர்களுக்கு 16-08-2026 அன்று அன்னதானம் நமது we the leaders ஐ சேர்ந்த திரு. ராம்குமார் அவர்கள் ஏற்பாட்டில் நடக்க உள்ளது அதற்கான அழைப்பிதழை செம்பாக்கம் திரு. வேதாசுப்பிரமணியன் அவர்களுக்கு வழங்கப்பட்டது உடன்
ஆடிட்டர் திரு.P.S.வெங்கடேஷ்,வினோபாஜி நகர் குடியிருப்பு நலச்சங்கத்தின் செயலாளர் திரு.S.கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு. ராம்குமார் அவர்கள்.
-வழக்கறிஞர்
K.N. குமார் நடராஜன்
we the leaders foundation
குரோம்பேட்டை
சகோதரர் திரு.அண்ணாமலை அவர்கள் சீரிய முறையில் புதிய சமூகத்தை கட்டிமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அதன் ஒரு பகுதியாக மறைந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் நினைவாக 20 லட்சம் மரங்கள் நடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் அதை ஏற்று நம்முடைய பல்லாவரம் தொகுதியில் குறைந்தது 20ஆயிரம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்று உறுதி ஏற்றுள்ளோம்.
@annamalai_k@WTLFoundation
இந்தியாவின் ஒப்பற்ற அனு விஞ்ஞானி, எளிமையின் சிகரம், மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ABJ. அப்துல்கலாம்
அவர்களுடைய நினைவு தினத்தில் அவரின் பெருமைகளை போற்றுவோம்.
@annamalai_k@WTLFoundation
கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 124 பிறந்தநாள் விழா அஸ்திணாபுரம் பகுதியில் நடைபெற்றது we the leaders இயக்கத்தின் சார்பில் அவருடைய திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தோம். 🙏🙏🙏
@annamalai_k@WTLFoundation
எந்த விளம்பரமும் கிடையாது, சிறிதும் கட்டமைப்பு இல்லை,யாரையும் போன்செய்து அழைக்கவில்லை,ரசிகர்கள் கிடையாது, கோட்டர் பிரியாணி கிடையாது, தனிமனிதன் ஒருவருக்காக அவர் செயல் மீது நம்பிக்கை வைத்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தண்ணிச்சையாக லட்சகணக்கான சகோதர சகோதரிகள் கூடியிருக்கிறார்கள்.
இந்த கூட்டம் என்பது இப்படியும் நன்மை செய்யமுடியும் என்பதை சாதித்து காட்டியிருக்கிறார் சகோதரர் அண்ணாமலை.இது தற்குறி கூட்டமல்ல அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் கூட்டம் மாற்றம் என்பது நம்மிடமிருந்து உருவாகட்டும்.
#மாறுவோம்_மாற்றுவோம் @annamalai_k@WTLFoundation
மாற்றம் என்பது வெறும் வார்த்தையில் இல்லை தான் தனியாக இயக்கம் தொடங்க போவதை மரியாதையுடன் தான் இவ்வளவு நாள் பணிசெய்த கட்சி தலைமைக்கு பணிவுடன் விளக்கமாக எடுத்து கூறி எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் யாரையும் குறை சொல்லாமல் வெளியேறி இயக்கம் தொடங்கியதே தமிழகத்திற்கு புதிய மாற்றம்தான். #wetheleaders
@annamalai_k
அனைவருக்கும் வணக்கம்.
இன்று குரோம்பேட்டை ராதாநகர் செல்வமஹால் அருகில் நடைபெற்ற we the leader உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்ட அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.
புதிதாக நமது இயக்கத்தில் இணைந்த தன்னலமற்ற சகோதர சகோதரிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
@annamalai_k@WTLFoundation
நாளை காலை சரியாக 9 மணியளவில் குரோம்பேட்டை ராதா நகர் மெயின் ரோடு செல்வம் மஹால் அருகில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது . இந்த குழுவில் உள்ள சகோதர சகோதரிகள் கலந்து கொள்வதோடு உங்கள் இல்லங்களில் அருகில் உள்ள நபர்களை நம்இயக்கத்தில் இணைக்கும் வண்ணம் அவர்களையும் இந்த இடத்திற்கு அழைத்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மாறுவோம்-மாற்றுவோம்.
We The Leader Foundation.
Chrompet.
@annamalai_k
நேற்றைய தினம் பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தராஜன் ஒரு நேர்காணலில் தலைவர் அண்ணாமலை பெயரை உச்சரிக்க மாட்டேன் என்கிறார்.
ஏன் இவ்வளவு வன்மம் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர் உங்களுக்கு அவர் என்ன கெடுதல் செய்து விட்டார்?
அதே பதவியில் இருந்த உங்களுக்கு அவருக்கு கிடைத்த வெளிச்சம் கிடைக்கவில்லை அந்த பொறாமை குணம்தானே இதற்க்கு காரணம்?
அவர் போன்று துணிச்சலாக முடிவெடுக்க தெரியுமா?
அவர் போன்று உழைக்க தெரியுமா?
அவர் போன்று அறிவார்ந்த கருத்துக்களை பேச தெரியுமா?
அவர் தலைவராக இருந்த அவர்தான் தலைப்பு செய்தி இத்தனைக்கும் திமுக ஆட்சியில் அது உங்களால் முடியுமா?
பாஜகவை நோட்டாவுடன் போட்டி போட வைத்த பெருமை மட்டும்தான் உங்கள் காலத்தில் நீங்கள் செய்த சாதனை.
என்ன இருக்கிறது நீங்கள் அவரை பார்த்து பொறாமை கொள்வதற்கு உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள். அவர் வெளியேறிவிட்டார் அவரை பற்றி பேசுவதை விட்டு கட்சி வளர்ச்சியில் கவனம் கொள்ளுங்கள் இந்த நிலை தொடர்ந்தால் உங்களுக்கு ஒன்றும் இல்லை பாஜக வுக்குதான் கெட்ட பெயர் ஏற்படும்.@annamalai_k
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.