உதய் மாம்ஸ் எலிவேசன் வீடியோ எல்லாம் பாக்க நல்லாத்தான் இருக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் 🔥🔥🔥 வருது ஆனாலும் இந்த கெரகம் புடிச்ச ட்விட்டர நம்புறதா இல்ல 🚶🚶
24/7 நியூஸ் சேனல்ல இத என்னவா manipulate பண்றானுகளோ அதுதான் பொதுமக்கள் மனநிலை
#BREAKING | தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ரோடு ஷோ செல்கிறார்.
#SunNews | #UdhayanithiReturns
உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் tvk அன்பர்களே.. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்💐💐💐 அதே நேரத்தில்,ஸ்ரீவைகுண்டம் MLA மீது பாலியல் புகார் பற்றிய அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலுக்கு உங்களின் எதிர்வினை என்ன..? இல்லை நீங்களும் மாற்றம் சொல்லிட்டு மக்களை ஏமாற்றும் கூட்டமா..
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சொல்லிவிட்டது அரசு.
இது இப்படிதான் முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.
யாரை மகிழ்விக்க இந்த ஒருநாள் கூத்து என்பதுதான் கேள்வி.
நாட்ல முக்கியமா ஒழிக்க வோண்டிய பதவிகள்ல ஒன்னு இந்த கலெக்டர் பதவி. இதுக்கு அந்த இடத்தில மேயர்/எம். எல். ஏனு இருந்தா கூட ஐஞ்சு வருஷத்தில ஓட்டு கேட்டு போவனும்னு கொஞ்சம் பயப்படுவாங்க.
#NewsUpdate | பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரி, மாணவர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தவர் மீது வழக்குப்பதிவு
#SunNews | #Ramanathapuram | #GovtBus
#NewsUpdate | பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரி, மாணவர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தவர் மீது வழக்குப்பதிவு
#SunNews | #Ramanathapuram | #GovtBus
When you oppose the arrest of Udhayanidhi, it does not mean you endorse the crass remarks he made or the many similar remarks his party has historically made in the name of political polemics. It simply means you oppose the criminalization of speech, and you oppose giving the police the power to manufacture arrests, either at the behest of the government or to appease those in power, by casually inserting cognizable offences into an FIR.
உதய் பேசுனது அரசியல் மேடைகள்ல சாதரணமா நடக்கறது தான். பேச்சுரிமைங்கறது எல்லா விதமான பேச்சுக்கும் தான் சொல்லுவாங்க. அது க்ரிமினல் குற்றம் இல்லனு நிறைய தீர்பு இருக்கு. ஆனா இப்ப கைது பண்ணறது நாளைக்கு பட்ஜெட் கூட்டத்தொடர நினைச்சு பயந்து செய்யற மாதிரி தான் இருக்கு.
இதே தான் என்னோட கருத்தும். எந்த அரசியல் கூட்டத்துக்கும் யார் வேணா போயி ஒருத்தர் பேசறப்ப கூட பேசி வீடியோ ரெக்கார்ட் பண்ணலாம். அது எல்லாம் பேசறவர் மேல எழுத முடியுமா?
உதயநிதி பேச்சு..
அவர் பேசிய வீடியோ பார்த்தேன். அவர் மீதான புகாரில் உள்ள குற்றச்சாட்டும் பார்த்தேன்
கூட்டத்தில் இருந்தவர்கள் பேசியதை உதயநிதி பேச்சோடு இணைத்து புதிதாக அர்த்தம் உருவாக்கி உதயநிதி அப்படி பேசியதாக புகார் கொடுத்து உள்ளது போல தெரிகிறது.
உதயநிதி பேசியது முழுக்க காவிரி பற்றியது. கூட்டத்தில் இருந்தவர்கள் சம்மந்தமே இல்லாமல் எதையோ தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாலும் உதயநிதி அவரது பேச்சை தான் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
உதயநிதி பேச்சின் இடையே கூட்டத்தில் உள்ளவர்கள் சொன்னதையும் இணைத்து அதை உதயநிதி சொன்னதாக சொல்வது சட்ட ரீதியாக நிற்காது.
ஆனால்.. நாளைய பட்ஜெட் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வது தடுக்க அரசு நினைத்தால், இந்த புகாரை அடிப்படையாக வைத்து கைது செய்து ஒன்றிரண்டு நாட்கள் சட்டசபைக்கு வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது.
கூட்டத்தில் இருந்துகொண்டு திசை திருப்புவதற்காக ஏதேதோ சொல்லிக்கொண்டு இருப்பவர்களை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசுவது என்பது எல்லா பேச்சாளர்களும் செய்வது தான்.
ஆனால் அதையும் இதையும் இணைத்து புதிய பிரச்சனை உருவாக்குவார்கள் என்கிற வாய்ப்பு இருக்கையில் நாம் சற்று கவனமாக செயல்பட வேண்டியது முக்கியம்.
குறிப்பாக கூட்டத்தில் இருந்தவர்கள் அப்படி கூச்சல் இட்ட போது, அதை கண்டித்துவிட்டு அவர்களை வெளியேற சொல்லிவிட்டு தொடர்ந்து பேசியிருக்கலாம். ஆனால் எல்லா சூழலிலும் இப்படி யோசித்து யோசித்து எந்த பேச்சாளரும் பேச முடியாது.
ஒருவர் தன்னுடைய பேச்சாக பேசாத ஒன்றை அடிப்படையாக வைத்து கைது செய்ய முயற்சிப்பது எல்லாம் ஜெயலலிதா அவர்கள் கூட சிந்திக்காத அளவுக்கு பாசிச எண்ணம்.
ஒருவர் பேசிய வார்த்தைக்கு தான் அவர் பொறுப்பு ஆக முடியும். மற்றவர்கள் பேசிய வார்த்தையை இவரது பேச்சோடு இணைத்து புதிய அர்த்தம் கொண்டு வருவதை எல்லாம் நீதிமன்றம் ஒப்புக்கொள்ளுமா என தெரியவில்லை.
கூட்டத்தில் கூச்சல் போட்டவர்கள் யார் எதற்காக அப்படி திரித்து கூச்சல் போட்டார்கள் என்பதை எல்லாம் இந்த அரசும் காவல்துறையும் விசாரிக்குமா என தெரியவில்லை.
மாண்பும் நாகரீகமும் இல்லாத ஒரு கூட்டத்திடம் மிக மிக கவனமாக இருந்திருக்க வேண்டும். எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கீழிறங்கி அரசியல் செய்ய தயாராக இருக்கும் அவர்களை போன்றவர்களிடம் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கிறது.
திமுக சட்ட குழு இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று நம்புகிறேன்.
🙏🙏🙏