ஏன் என்ற காரணங்களுக்குள் காதலைச் சுருக்கி விட முடியாது; காரணங்களைத் தொகுத்து காதலாக மாற்றவும் முடியாது.
-எலனோர் கேட்டன், த லூமினரிஸ்
Love cannot be reduced to a catalogue of reasons why, and a catalogue of reasons cannot be put together into love.
- Eleanor Catton, The Luminaries
நிறைய அவகாசம் இருப்பதாய் நம்பி
மறுதலித்துக்கொண்டே இருக்கிறோம்
நிறைய வாய்ப்புகள் வரும்
என்ற யூகத்தில் ஒத்தி வைக்கிறோம்
மகத்தானவைக்கு காத்திருக்கிறோம்
நம் சுயம் கெடோம் என்று
தலையுயர்த்துகிறோம்
நம் எளிய பிடிவாதங்களின்
மறுமுனையை வைத்திருக்கும் விதியோ
எல்லாப் பிரார்த்தனைகளுக்கும் வசவுக்கும்
ஒரே ஒரு விளங்காத புன்னகையை வைத்திருக்கும்
சிலையைப் போல் சிரிக்கிறது
அதன் செய்தி
இக்கணம் என்பதே மெய்
- நேசமித்ரன்
ஜெயிலர் திரைப்படத்தைப் பார்க்கும்போது, டாக்டர் படத்தின் அதே திரைக்கட்டமைப்பு அப்படியே பயன்படுத்தப்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரே திரைப்படமாகப் பார்த்தால் இது தெளிவாகப் புரியும்.
குற்றச்செயலில் ஈடுபடும் ஒரு பெருங்கும்பல், அதன் தலைவன், அவனுக்குக் கீழே மூன்று, நான்கு நிலைகளில் உள்ள அடியாட்கள் என இந்த இரண்டு திரைப்படங்களிலுமே கட்டமைப்புகள் உள்ளன.
டாக்டர் திரைப்படம் சிறுமிகளைக் கடத்துவதைப் பற்றியது என்றால், ஜெயிலர் திரைப்படம் சிலைகளைக் கடத்துவதைப் பற்றியது.
இரண்டு திரைப்படங்களிலுமே ஒரு அபத்த நகைச்சுவை ரவுடியும் அவனது துணைக் கதாபாத்திரமும் இருக்கிறார்கள். டாக்டரில் மாகாளியும் கிளியும் என்றால், ஜெயிலரில் பழக்கடை மூர்த்தியும் கோலியும்.
இரண்டாம் நிலையில் இருக்கும் ஆல்வினை வைத்து, முதல் நிலையில் இருக்கும் டெர்ரியை வீழ்த்த முயற்சிப்பதைப் போன்று, ஜெயிலரில் இரண்டாம் நிலையில் இருக்கும் திலீப்பைக் கொண்டு, முதல் நிலையில் இருக்கும் போதி கல்பக்கை வீழ்த்த கதாநாயகன் முயல்கிறான்.
டாக்டரின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு சிறுமியின் கழுத்தில் கத்தி வைக்கப்படுகிறது. ஜெயிலரின் கிளைமேக்ஸ் காட்சியில், ஜெயிலரின் பேரனின் கழுத்தில், அதாவது ஒரு சிறுவனின் கழுத்தில், கத்தி வைக்கப்படுகிறது.
இன்னும் இந்த இரண்டு திரைக்கதைகளின் கட்டமைப்புக்குள் இருக்கும் ஒற்றுமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். சுவாரசியத்திற்காகச் சில கதாபாத்திரங்களும் காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன; சில கதாபாத்திரங்களும் காட்சிகளும் விடுபட்டுள்ளன.
இதுவரைக்கும் இந்த உத்தி எதிர்பார்த்த முடிவுகளைத் தந்துள்ளது. இந்த மூன்று திரைப்படங்களுமே, அதாவது டாக்டர், ஜெயிலர், ஜெயிலர் இரண்டாம் பாகம், சுவாரஸ்யமானவைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
ஆனால், இந்த ஒற்றைத் திரைக்கதை உத்தி இன்னும் எத்தனை திரைப்படங்களுக்கு எடுபடும் என்று எனக்குத் தெரியவில்லை.
#Jailer2 #Jailer2OnPrime #Nelsondilipkumar #Rajinikanth
Life can only be understood backwards, but it must be lived forwards.
-Søren Kierkegaard
பின்னோக்கித் தான் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியும்; ஆனால் முன்னோக்கித் தான் வாழமுடியும்.
-சோரன் கீர்க்ககார்ட்
குடை.
எதிர்பாராமல் பெய்த ஒரு பெருமழையில்
அப்போது மட்டுமே மனிதர் கண்ணில் படக்கூடிய
அப்போது மட்டுமே உசிதமென்று தோன்றக்கூடிய
கடற்கரை பாதையோரத்து ஓலைக்கூரைக்குக் கீழே
சேர்ந்து நிற்கையில் அறிமுகம் கொண்டோம்.
கனத்துப் பெய்யும் மழையில்
அதிபுராதனமான ஓர் அபயத்தின் நம்பிக்கையில்
எங்களுக்கு எங்களைப் பிடித்துப் போயிற்று.
சேர்ந்து வாழ முடிவெடுத்தோம்.
ஒரே போலத் தோன்றும் இரு குழந்தைகளுக்குப் பெற்றோரானோம்.
சமீபத்தில் ஓர் இரவில்
தூங்கிவிட்டாள் என்று தோன்றியபோது
அவளது கரத்தை எடுத்து மெல்லக் கீழே வைத்தேன்.
அவள் கேட்டாள்
அந்த மழை அரை மணிநேரம் மட்டும் பெய்ததா என்ன?
- கல்பற்றா நாராயணன்.
To love someone out of compassion means not really to love.
- Milan Kundera, Unbearable Lightness of being.
கருணையால் வருவது காதலல்ல
-மிலன் குந்தேரா, வாழ்வின் தாள முடியா மென்மை
இடையறாத ஏமாற்றங்கள்
உறவுகள் முறிந்து போயின
எத்தனை துரோகங்கள்
காதலென்று ஏதுமில்லை
இன்பங்கள் என்று ஏதுமில்லை
கடவுள் என்னை கைவிட்டுவிட்டார்
என்ன செய்தால்
சற்றே மீட்சியடையலாம்?
இப்போதைக்கு
கையில் நிறைய பணம் இருந்தால்
ஆறுதலாக இருக்கும் என்று தோன்றுகிறது
-மனுஷ்ய புத்திரன்
If these "நாளேலேருந்து / இன்னிலேருந்து அக்கா இனி என்ன பஸ்னு பாக்காம ஏறலாம்டா" type reels pop up on your feeds, block those influencers right away to sanitize your algorithm. Either they are paid for that or they are mindless trend followers.
I am I, and I wish I wasn't.
- Aldous Huxley, Brave New world
நான் நானாக இருக்கிறேன்; நானாக இல்லாமலிருக்க விழைகிறேன்.
-ஆல்டஸ் ஹக்ஸ்லி, தீரமிகு புது உலகம்
Legion live in us;
I think or feel and don't know
Who it is thinking, feeling.
I am merely the place
Where thinking or feeling is.
I have more souls than one.
There are more 'I's than myself
And still I exist
Indifferent to all.
I silence them: I speak.
The crisscross thrusts
Of what I feel or don't feel
Dispute in the I I am.
Unknown. They dictate nothing
To the I I Know. I write.
- Fernando Pessoa