@senbalan இலவச பயணம் கொடுக்காமல் பேருந்து கட்டணம் பாதிக்கு பாதி குறைத்தால் அரசுக்கும் நல்லது மக்களும் நல்லது. ஆட்டோகாரர்களும் தனியார் பேருந்துக்களும் நஷ்டபடாது
HST Wealth “Research Services” Launch Event Video🚀♥️
21.08.2026 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற 40 நிமிட தொடக்க நிகழ்வு காணொளி. உங்கள் அன்பு, வாழ்த்துக்கள் நோக்கி @HSTwealth 🙏🏼
HST Wealth Management and Research Advisors Pvt. Ltd.
SEBI RA Reg. No. INH000028255
Disclaimer: Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.
Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors.
இதையெல்லாம் புரிஞ்சி தெளிஞ்சி ஒருத்தன் "இந்த ரேட் ரேசில் நான் ஓட மாட்டேன்..சமூக அழுத்தத்துக்கு உட்பட மாட்டேன்.
எனக்கென ஒரு பாதை உள்ளது அதில் என்னாலான வேகத்தில் தான் செல்லுவேன் என அடமாக நிற்கும் போது அவனுடைய நிலைப்பாட்டை அவனுடைய குடும்பத்தாரே சப்போர்ட் செய்வதில்லை என்பது தான் உண்மை.
This is why I Love H.Vinoth Interviews❤️
The unspoken pressure on every young man 💔 .
H. வினோத் - நம் தாத்தாக்களை எடுத்துக்கொண்டால், அவர்களிடம் இரண்டு ஏக்கர் நிலம் இருந்தால் அதுதான் அவர்களுடைய எல்லையாக இருந்தது. அதில் உழைத்தார்கள், வாழ்க்கையை வாழ்ந்தார்கள். பெரிய மனஅழுத்தம் எதுவும் இல்லை.
ஆனால் இன்று, உலகமயமாக்கல் காரணமாக யார் வேணா என்ன வேணா ஆகலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. தெருவில் இருக்கும் ஒரு பையன் எதையாவது சாதித்து வீட்டிற்கு ஒரு டிவியோ அல்லது காரோ வாங்கி வந்தால், அது திடீரென ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி ஆக வேண்டும் என்ற கட்டாயமாகி விடுகிறது.
இதெல்லாம் வைத்திருக்கும் பையனுக்குத்தான் என் பொண்ணைக் கொடுப்பேன் என்றும் சொல்கிறார்கள். அந்த சிறிய வயதில் ஒரு வாலிபனால் எப்படி திடீரென்று இதையெல்லாம் பெற முடியும்?
அந்த மனஅழுத்தம், ஒரு மனிதனை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீவிர கட்டாயத்திற்குத் தள்ளி, அவனை Shortcut தேட வைக்கிறது.
சமூக வலைதளத்தில் Followers இருந்தாலே சிலர் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பலாம் என்று நினைத்து வாழ்கிறார்கள்..
ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் பேசிய அண்ணாமலை, ஆளும் தவெக குறித்து விமர்சித்து அரசியல் செய்யாமல், நாகரிகமாக நேர்மறையான அரசியல் கருத்துகளை முன்வைத்தது இதுவரை பார்க்காத அரசியல். அதுவே @annamalai_k
அண்ணே @itisprashanth, நீங்கள் அண்ணாமலையை விமர்சிக்கக் கூடாது என்று நான் எப்போதும் சொன்னதில்லை; சொல்லவும் மாட்டேன். எல்லா அரசியல்வாதிகளும் விமர்சனத்திற்குட்பட்டவர்கள்தான்.
ஆனால், சிலர் ஒரு கட்சியிடம் பணம் வாங்கிக்கொண்டு அடுத்தவர்களைத் கடிக்கும் வேலையை வெறிநாய் போல செய்து கொண்டிருப்பார்கள்.
அவதூறு என்பது சாக்கடையில் கையைவிட்டு அள்ளி அடுத்தவர் மீது எறிவது போன்றது. அது அடுத்தவர் மீது விழுவதற்கு முன், முதலில் நம் கையில்தான் ஒட்டும். அரசியல் ஏவலுக்காக செயல்படுபவர்களுக்கு இந்த சாக்கடை வேலை சாதாரணமாக இருக்கலாம்.
ஆனால், @itisprashanth அண்ணா, உங்கள் குணம் அப்படியில்லை என்று நான் நம்புகிறேன். அண்ணாமலை மீது சரியான விமர்சனங்களை வையுங்கள்; விவாதிப்போம்.
இல்லை, நானும் அவதூறு பரப்பும் வேலையைத்தான் செய்கிறேன் என்று நீங்கள் முடிவு செய்தால், அது உங்கள் விருப்பம். ஆனால், அடுத்தவர்களை கடிப்பதையே வேலையாகக் கொண்டவர்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் குறித்து மேலே நான் குறிப்பிட்ட பார்வையில்தான் மக்கள் பார்க்கத் தொடங்குவார்கள்...
நன்றி 🙏
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
இன்று @annamalai_k அண்ணாவை சந்தித்தேன். ரொம்ப நேரம் பேசுற வாய்ப்பு கிடைத்தது.
செம்ம மீட்டிங்! ரொம்ப Informative, Casual & Fun-ஆ இருந்துச்சு. சினிமா, அரசியல் என்று நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார்...
முன்னாடியை விட ரொம்ப Energetic-ஆ இருக்காரு…
என்ன பண்ணணும், எப்படி பண்ணணும், எப்ப பண்ணணும்னு ரொம்ப தெளிவா இருக்காரு….
பொறுமையாவும் நிதானமாவும் அடுத்த வேலைக்கு தயாராகிட்டு இருக்காரு. 👍👍
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
வடக்கன் கூட சேர்ந்து நான் கூட தமிழ்மக்கள் அறிவில்லாத மக்கள் அவங்க தற்குறிக்கு ஓட்டு போட்டு வர வச்சிட்டானுங்கனு திட்டிக்கிட்டு இருந்தேன்.
இப்போ தான் தெரியுது அவங்களுக்கு வேற வழி இல்லாம ஓட்டு போட்டு இருக்காங்கன்னு.
தமிழ் மக்கள் 🙏
#Annamalai