மக்களுக்கு தெளிவான விரிவான இந்த விளக்கத்தை அளித்ததற்கு நன்றிகள் கொடி.. நீங்கள் இருக்கும் வரை இவர்களை கோவில் நிலங்களை அபகரிக்க விடமாட்டீர்கள் என்று இந்துக்கள் நம்புகின்றார்கள்.. @annamalai_k@WTLFoundation
Breaking News | கோவில் சொத்து ஆக்கிரமிப்பு
பழனி தண்டாயுதபாணி கோவில் நிலத்தை நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக புகார்
கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பார்க்கிங் நிலம் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளதாக புகார்
Palani | Murugan Temple | Parking | 11 July 2026
#Palani #MuruganTemple #Parking
We are deeply saddened to learn about the tragic boat incident that took place in Vietnam today. The incident involves some of our channel partners and team members.
We are in constant touch with the Embassy of India in Vietnam and the local authorities to gather information about the safety and well-being of our people. Our immediate priority is to extend all possible support to those affected and their families. Our teams in both India and Vietnam are in regular contact with the families and are providing all possible assistance.
A Control Room has been established by the Consulate General of India in Ho Chi Minh City. Families seeking information or assistance may contact the Control Room at +84 36 281 7930, +84 91 552 37 14, or +84 33 452 0414.
We are awaiting further updates from the authorities and will continue to provide timely information as it becomes available to us.
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
கோவில் பராமரிப்புக்காக அரசர்களும், ஆன்மீக வள்ளல்களும் கொடையாக கொடுத்த நிலங்களை தாரைவார்க அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அரசு புறம்ப்போக்கு நிலங்களை கொடுக்கலாமே. அறநிலையத்துறை இதற்குத்தானா? கேள்வி கேட்க யாரும் இல்லையா? @annamalai_k@WTLFoundation
ஆலய நிலங்கள் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா CM Vijay அவர்களே?
ஆட்சிக்கு வந்தவுடன் இந்து ஆலயங்களின் சொத்துக்களை பாதுகாப்போம் என்று கூறிய TVK அரசு, இன்று கரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 ஆலயங்களுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே ஒப்படைக்க முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. ₹25,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள ஆலய சொத்துக்கள் இவ்வாறு பறிபோக அனுமதிக்கப்படக் கூடாது.
CM விஜய் அவர்களே (@TVKVijayHQ), ஆலய நிலங்கள் அரசியலுக்கான பேரம் பேசும் பொருளா? “ஆலய நிலங்கள் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?” இந்து சமய அறநிலையத் துறையின் பெயரில் நடைபெறும் இந்த துரோகத்திற்கு உங்கள் அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆலய சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒப்படைக்க தமிழக அரசுக்கு உரிமை எங்கிருந்து வந்தது?!
முதலமைச்சர் விஜய் அவர்களே, அறநிலைய அபகரிப்பு துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே(@RameshOffcl), ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே வழங்கும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுங்கள். இல்லையென்றால் பாஜக பெருந்திரள் போராட்டங்களை நடத்தும்.
@blsanthosh@NainarBJP
#SaveTempleLands #ProtectHinduTemples #Karur #HRCE #TamilNadun
கரூர் மாவட்டத்திலுள்ள புகழிமலை பாலசுப்ரமணியன் திருக்கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், குச்சிபாளையம் ரவீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட நான்கு திருக்கோயில்களுக்கும் பாத்தியப்பட்ட 3084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை உத்தரவை நீக்கி ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க வழிவகை செய்யும் பொருட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையருக்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரைத்துள்ள அறிவிப்பாணை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த விஷயத்தில் சட்டவிரோதமாகவும், அறத்திற்கு புறம்பாகவும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் செயல்பட அனுமதித்த தவெக அரசின் இந்து விரோத செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தவெகவை சேர்ந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்கள் கோயில் நிலம் கோயிலுக்கே சொந்தம் பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படாது என்று உறுதிமொழி அளித்தார்.
ஆனால் கரூரில் 3084 ஏக்கர் திருக்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்திரப்பதிவு செய்து தர கரூர் மாவட்ட ஆட்சியரும், திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும் பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவு பிறப்பித்துள்ள செயலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
மதசார்பற்ற சமூகநீதி என சொல்லிக்கொண்டே இந்து விரோத செயல்களை தனது ஆட்சியில் அனுமதிப்பதன் மூலமாகவும், இந்து விரோத செயல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து அதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் மூலமாகவும் தவெக இன்னொரு திமுக என்பதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நிரூபித்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி தான் மாறி இருக்கிறதே தவிர இந்துக்களுக்கு எதிராகவும், இந்து கோயில்களுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் இந்து விரோத செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கோயில்களின் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959 உருவாக்கப்பட்டது.
எந்த நோக்கத்திற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959 உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமே செயல்படுவது காலக்கொடுமை.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் திருக்கோயில் சொத்துகளைப் பாதுகாப்பது இந்து சமய அறநிலையத் துறையின் மற்றும் அரசின் சட்டப்பூர்வ கடமை என்றும், கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு அல்லது சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு உட்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஆகவே கரூர் மாவட்டத்திலுள்ள மேற்குறிப்பிட்டுள்ள நான்கு திருக்கோயில்களுக்கும் பாத்தியப்பட்ட 3,084 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க @CMOTamilnadu திரு. @TVKVijayHQ அவர்களும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்களும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துகிறேன்
@ThamaraiTVTamil@ThanthiTV@polimernews@PTVNewsOfficial@News18TamilNadu@news7tamil@TamilJanamNews@ChanakyaaTv@TamilTheHindu@thatsTamil@ibctamilmedia
கோவில் நிலங்கள் விழுங்கப்பட்டுவிட்டது
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
@amaruvi@bseshadri மற்றும்
பல ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட்ட முட்டாள் இந்துக்களே
😢
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth