இப்படியெல்லாம் உன்ன பாக்க கஷ்டமா தான் இருக்கு..
ஒட்டுமொத்த மத்த மாநிலமும் உன்ன பப்பு பப்புனு சொன்னப்போ சொன்னவனையெல்லாம் சப்புன்னு வச்ச எங்க கிட்டயே உன் ஓடுகாலி புத்திய காட்டிட்டு ஓடுனியே இன்னைக்கு உன்ன அடிச்சு போட்டா கூட உன் தமிழ்நாடு கூட்டணில இருந்து ஒரு குரல் வராது..
எண்ணம் போல் வாழ்க்கை 🫰
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
எங்கள் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் வே. ஜெயபாலன் அவர்கள். இந்தப் படம் இன்று எடுத்தது; ஏன் தென்காசியில் 4/5 என்பதற்கான விடை இங்கே இருக்கிறது. மக்களோடு மக்களாக அவர்களுள் இருந்து அவர்களுக்கான அரசியலைப் பேசத் தான் அண்ணா வழிகாட்டி உள்ளார் - நடப்பு உதாரணம் @arivalayam
செந்தில்பாலாஜி கெட்டவராவே இருக்கட்டும். ஆனா அவரோட மனசாட்சிக்கு அவர் கையில 41 பேரோட இரத்தக்கறை இல்லனு அவருக்கு 100% நல்லா தெரியும்.
இந்த ஒரு விசயத்துல அவரால நிம்மதியா தூங்க முடியும்.
அதே மாதிரி விஜயாலயும் ஆதவாலயும் அவனுங்க மேல தப்பு இருக்கா இல்லையானு அவனுங்க மனசாட்சிக்கு நல்லா தெரியும்.
ஆனா நாமக்கல்ல 8:30மணி meetingகு சென்னை airportல 8.30 மணிக்கு நின்ன விஜயோட அலட்சியம் துளிக்கூட காரணம் இல்லனு நம்புற உங்களால எப்படி நிம்மதியா சோறு திங்க முடியுதுனு தான் தெரியல.🤧
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தி விஜய் ஆதாயமடைந்ததாக, அவரது வெற்றியை சவால் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் எதிர்மனுதாரரான @ECISVEEP@TNelectionsCEO தேர்தல் ஆணையம் தன்னுடைய பிராமணப்பத்திரத்தை
தாக்கல் செய்துள்ளது..
எந்த வடிவத்திலும் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்பதை
05-02-2024 தேதியிட்ட பத்திரிக்கை செய்தியின் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவு படுத்தியுள்ளோம் என்பதை தேர்தல் ஆணையம் பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது
அப்படியென்றால்,
21-04-2026 அன்று தேர்தல் பிரச்சாரத்தில்,
இந்த நேரத்தில் என்னோட குட்டி நண்பா நண்பீசுக்கு ஒரு வேண்டுகோள்
"இந்த விஜய் மாமாவுக்காக "
"விஜய் மாமா ஜெயிக்கணுங்கறதுக்காக"
உங்க வீட்டில் உள்ள எல்லோரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வைங்க..
"விசிலுக்கு ஓட்டு போடற வரை விடாதீங்க" என குழந்தைகளிடம் விஜய் வைத்த வேண்டுகோள்..
"இப்படி தான் இருக்கப்போகிறது"
இந்த தேர்தல் என்று கூறிய வார்த்தைகளுக்கு @actorvijay முழுக்க பொறுப்பாளியாகிறார்
இந்திய வரலாற்றில் இந்த வழக்கு முக்கியமான ஒன்றாக மாறப்போகிறது
நடுராத்திரி தண்ணிய தொறந்து விட்டு கொன்னவளுக்கு தான் இந்த மக்கள் ஓட்டு போட்டாங்க
வண்டி ஏத்தி கொன்னவனுக்கு தான் இந்த மக்கள் ஓட்டு போட்டாங்க
போய் வேலைய பாருங்கப்பா
கரூர் அசம்பாவிதத்திற்கு @karurpolice காவல்துறையே காரணம்..
தேசிய நெடுஞ்சாலைக்கே வந்து தன்னை ஊருக்குள் அழைத்துச்சென்றது எல்லாம் சதி/சூழ்ச்சி என்ற ரீதியில் @actorvijay பேசியுள்ளார்
மாநிலத்தின் @CMOTamilnadu -வாக இருக்கிறோம் என்பதையே முற்றிலும் மறந்து பேசியிருக்கிறார்
விஜய் தாமதமாக வந்ததே கரூர் சம்பவத்திற்கு காரணம் என்று கூறியதே “ என் மீது பழி போடுகிறார்கள்” என் மீதே பழிபோடுகிறார்கள்”என ஆதங்கத்தில் ஓயாமல் பேசும் @TVKVijayHQ எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறைக்கு Instruction கொடுத்துள்ளனர்..சதி-சூழ்ச்சி என்று பேசியிருப்பதெல்லாம்/முடிவுக்கே வந்ததெல்லாம் முதலமைச்சர் பதவிக்கு கொஞ்சமும் ஏற்ற பேச்சல்ல
கரூரில் அசம்பாவிதம் நிகழவேண்டுமென்ற நோக்கத்தோடு தீட்டப்பட்ட
அரசியல் சதிக்கு கரூர் போலீஸார் உதவி செய்தனர் என்று முதலமைச்சருக்கு
யார் சொன்னது ?
தமிழ்நாட்டின் காவல்துறை தலைவரா?
உளவுத்துறை தலைவரா?
உள்துறை செயலாளரா?
விசாரணை அதிகாரியாக இருந்த
அஸ்ரா கார்க் IPS-ஆ? தற்போதைய கரூர் காவல்கண்காணிப்பாளரா ?
அல்லது வழக்கை விசாரித்து வரும் CBI-ஆ
@CBIHeadquarters ?
காவல்துறை மூலமாக கரூரில் கொலை செய்தனர் என ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சை அப்படியே ஆமோதித்திருக்கிறார் விஜய்
உண்மையிலேயே @tnpoliceoffl -ல் பணியாற்றும் யாராவது,ஒருவராவது உப்பு போட்டு உணவருந்துவர் என்றும்,
ஒருவருக்காவது சொரணையுள்ள தோல் இருக்குமென நம்புகிறேன்
அறந்தாங்கி மாவட்டத்தில் இருக்கின்ற இந்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக 2 வருடம் முன்னாடி Robotics programming session பிளான் பண்ணோம்.
ஆன்லைன் sharing , எந்த தவறும் இருக்க கூடாது, பேசும் வார்த்தகளில் கவனம் தேவை, நாம் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தத்தை மாணவர்கள் வேறு மாதிரி புரிந்துகொள்ள கூடாது, கவனம் சிதறி வேறு ஒன்றை பற்றி சிந்திக்க மாணவர்களை விடக்கூடாது அப்படின்னு பார்த்து பார்த்து வகுப்பினை நடத்தினோம்.
அவற்றிற்கு காரணம் பயம் அல்ல, "இவரே இப்படி பேசுறாரே, நாம பேசினா என்ன ?" அப்படின்னு மாணவர்கள் நினைத்துவிட கூடாது அப்படின்னு மாணவர்களின் எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்வு.
ஆனால் இன்று அதே போல ஒரு அரசு பள்ளி மாணவர்கள் , சினிமா வசனத்தை வகுப்பறையிலே ரசிக்கிறார்கள். அதில் கலந்துள்ள முறையற்ற வார்த்தைகளை, பகடிகளை, public decorum அற்ற உடல் மொழிகளை ஆரவாரத்துடன் ரசிக்கின்றனர்.
வாக்கு வங்கிக்காக கும்பல் மனநிலையில் , ரசிக மனப்பான்மையில் மாணவர்களை உருவாகாதீர்கள். மருத்துவராக, பொறியாளராக, விஞ்ஞானியாக, விவசாய தொழில்நுட்பவாதியாக வர வேண்டியவர்களை தெருவில் poster ஒட்ட தூண்டாதீர்கள்.
தவறான முன்னுதாரணம் ! பள்ளி கல்வித்துறை திருத்திக்கொள்ள வேண்டும்.
விளிம்பு நிலை சமூகங்கள் மேலெழுந்துவர கடைசி வாய்ப்பு கல்வி ! அதை சிதைத்து விடாதீர்கள்.
கண்டனங்கள் .
@CMOTamilnadu
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்....
இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்...
கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்...
இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்....
ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது... அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்...
எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்... காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை...
ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்....
செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்...
ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையிலிருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்.... அதில் குழந்தைகள் 11 பேர்....
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை...
41 பலிக்கு மிக முக்கிய காரணி ... அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்... ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை....
ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்.... அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்...
ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை...
மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான்.
அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று
திரு விஜய் அவர்கள்... என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா?திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்.....
இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்...
உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்....
மிக முக்கியமாக 65% மக்கள்...
அப்பாவி மக்கள் 41 பேர்...
அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல... இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்...
ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை....
அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்... அப்ப அதுக்கு காரணமானவங்க?
ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தான்.
எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு....Dot
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் @mkstalin நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்று கரூரில் பேசும் போது ஆணவத்தோடு கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டு விட்டேன் என்று சொல்லும் முதல்வர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?
கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என்று உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை பேட்டியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? 7 மணி நேரம் கால தாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணோளியை நினைவுபடுத்தி
41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களை போன்று பழிவாங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பார் ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்.
தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் இரண்டும் ஊழலில் ஒன்றுதான் என்று கரூரில் பேசிய CM sir, தீர்ந்து போன கட்சியில் ஊழல் செய்தவர்களை தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தூய சக்தியா? அல்லது தூர்நாற்ற சக்தியா?
CM sir, இது ஜனநாயக நாடு. மக்கள் தான் எஜமான்கள். விரைவில் காலமும் மாறும்! காட்சிகளும் மாறும்! ஆட்சியும் மாறும் !
@CMOTamilnadu@actorvijay@arivalayam@Udhaystalin
விஜய் பேச்சை முழுமையாக கேட்டேன். அதை எந்த கேட்டகிரியில் வகைப்படுத்துவது என்றே புரியவில்லை. ஒரு தலைவருக்கு உரிய முதிர்ச்சியும் இல்லை, ஒரு முதலமைச்சருக்கு உரிய கண்ணியமும் இல்லை, ஒரு மனிதனுக்கு உரிய பண்பும் இல்லை. திருச்சியில், 'கவர்ச்சி காட்ட நான் என்ன .....-ஆ?' என்று கேட்டதைப் போலவே இன்றைய பேச்சிலும், "நான் சொன்ன மாதிரி வெளிப்படையா அவங்களால சொல்ல முடியுமா? அந்த தில்லு இருக்கா, திராணி இருக்கா? ஒரு ......-ம் கிடையாது" என்கிறார். அந்த கோடிட்ட இடத்தில் நாம் என்ன வார்த்தையை போட்டு நிரப்பிக்கொள்வது? ஒரு மயிறும் இல்லை என்றா? ஒரு மண்ணும் இல்லை என்றா? இல்லை சிம்பு பாடிய பீப் சாங் போல நினைத்துக்கொள்ள வேண்டுமா?
"பணமா, ஜனமான்னு கேட்டா என் ஜனம்தாண்டா எனக்கு முக்கியம்..." - என்கிறார். அந்த டா என்பது யாரைப் பார்த்து? பேச்சு முழுக்கவே இப்படிதான். கூச்சமற்ற பொய்கள். தேவையற்ற சவடால்கள்.
கூட்டம் அதிகமா இருக்கும்போது நிகழ்ச்சியையே கேன்ஸல் பண்ணியிருக்கலாமே என்கிறார். அப்படி செஞ்சிருந்தா எங்களை மக்களை சந்திக்க விடாம தடுக்கிறாங்கன்னு இதே வாய்தானே சொல்லியிருக்கும்?
தலையில் இருந்து கால்வரை சதிக் கோட்பாட்டை மட்டுமே நம்பும் ஒரு மனிதன், தன்னைச் சுற்றிலும் ஆதவ் அர்ஜுனா போன்ற அதே மனப்பாங்கு கொண்ட மனிதர்களை சேர்த்து வைத்திருக்கிறார். இவர்கள், 'அரசியல் என்பதே சூழ்ச்சிதான்' என மனதார நம்புகிறார்கள். பெற்ற வெற்றி, 'நாம சரியான ரூட்லதான் போறோம்' என்ற இறுமாப்பை கொடுத்துள்ளது. அதனால்தான் அரசை நிர்வகிக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்த பின்னரும் கூட, மேலும் மேலும் சதிக் கோட்பாடுகளையே பரப்புகிறார். இது இத்துடன் முடியாது. இதே Pattern அடுத்த ஐந்தாண்டு காலம் தொடரும். அவருடைய அமைச்சரவை சகாக்களும் இதை பின்பற்றுவார்கள்.
இன்று கரூரில் முதல்வர் @TVKVijayHQ பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..!
யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் @imrajmohan முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார்., படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை..!
#TVKFails
அன்பை 🤍 அழகாக வெளிப்படுத்த AI உதவுகிறது. சூலை 9, 2026, தந்தையார் திரு.ஆலடி அருணா அவர்களின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு நமது VilPower Digital Team இந்தப் படத்தை அழகாக வடிவமைத்தனர். கற்பனை என்றாலும் காலத்திற்குப் பாலம் அமைக்கு கலை, செயற்கை நுண்ணறிவின் சிறப்பு!
ஆலடி எழில்வாணன்
1.கலைஞர் மகளீர் உரிமை தொகை =மகளீர் உரிமைத்தொகை
2.நான் முதல்வன் = திறன் மேம்பாட்டுத்திட்டம்
3. முதல்வர் படிப்பகம் = படிப்பகம்
4. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் =ஸ்டாலின் பெயரை மறைத்தது!
5. மகளீர் விடியல் பயணம் =மகளீர் பயணம்
6. மின்சார வாரியத்தில் 30 to 40 சதவிகிதம் கமிசன்= அதை சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்க்கை எடுப்போம்
7. தனியார் பள்ளிகள் உரிமை வழங்குவதில் ஊழல் - புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்
8. டாஸ்மாக் பார்ட்டி fund : ன்னு பேசியது விஜய் , எந்த கட்சிக்கு fund யாருக்கு யார் கொடுத்ததுன்னு இதுவரை சொல்லவில்லை !
9. தொழிற்துறையில் பல தொழிற்சாலை, கமிசன் கேட்டதால்,ஆந்திராவுக்கு போயிட்டு என்று கீர்த்தனா சொல்லுது ,ஆனா ஆந்திர அமைச்சர் ; தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு முதலீட்டார்களும் எங்களிடம் வரவில்லை மேலும் புகாரும் தெரிவித்ததில்லை என்று சொல்கிறார்!
10.கஜானாவை துடைத்து எடுத்துட்டு போய்ட்டாங்கன்னு சொன்னது விஜய் ஆனா அடுத்தது திமுக திட்டங்களை செயல்படுத்தினார்!
11. கடந்த ஆட்சியில் உதயநிதிக்கும் , சபரீசனுக்கும் எல்லா துறைகளில் இருந்து கமிஷன் போனது ஆளுக்கு 16 துறைகள் என்று பிரித்துக்கொண்டார்கள் என்று பேசுவது ஆதவ் -ஆனா ஆதாரம் இல்லையாம்!
12. தமிழ்நாடு தீயணைப்புத்துறை ஆணைய தலைவராக மாற்றம் செய்யப்பட்ட சங்கர் ஜிவால் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
13. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாற்றம் செய்யப்பட்ட சுனில்குமார் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
14. தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அபய் குமார் சிங்கும் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
15. மாதம் மாதம் மின் கட்டணம் -சொல்லினர் ஆனால் தற்பொழுதும் இரெண்டு மாதம் ஒருமுறை தான் நடக்கிறது
16. விஜய் தினமும் தலைமை செயலகத்தில் அவர் மேஜையில் ஒக்காந்து வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவை சாப்பிடுறார் : முழு பொய்
17. விஜய் அமரும் நாற்காலியில் இருந்த வெள்ளை துண்டு சம்பந்தமான அழுகுணி பரப்புரை
18. சிங்கப்பெண் திட்டம்ன்னு சொல்லி பரப்புரை ஆனா திமுக ஆட்சியில் கொண்டுவந்த அதே ரோந்து வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி அம்பலப்பட்டது
19. முதல் பெண் அமைச்சர் கீர்த்தனா என்ற முழு பொய் பரப்புரை
20. 26 பட்டியல் சமுதாய மக்களை பொதுத்தொகுதியில் நிறுத்தியதாக பொய் பரப்புரை
21. வெள்ளை அறிக்கை நாங்க தான் கொடுக்குறோம் முதலில் என்று பரப்பி அசிங்கப்பட்டது, திமுக அரசு விதிகளுக்கு உட்பட்ட கடன் வாங்கியதாக ஒப்புதல்
22. விஜய்யின் சொந்த ஆஸ்தான ஜோசியருக்கு அரசு பதவி பிறகு பல்ட்டி
23. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கு சேவகம்
24. எண்ணிலடங்காத பாலியல் குற்றங்கள் சாதிய கொலைகள்
25. டன் கணக்கில் போதை பொருட்கள் எரித்ததாக பரப்புரை காணொளி ஆனால் நடந்தது முந்தைய ஆட்சியில்
26. கீர்த்தனா அமைச்சரின் ரீலிஸ் சர்ச்சை மற்றும் பள்ளி மாணவியை அவமானப்படுத்தும் விதமாக நடந்தது
27. 2024ல் ஸ்டாலினால் மீண்டும் துவங்கப்பட்ட போர்ட் தொழிற்சாலையை தான் தொடங்கியதா விஜய் கும்பல் பரப்புரை
28. மாநிலங்களுக்கிடையே சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் கடலோர மாநிலங்களுக்கான பிரிவில் 2025க்கான ‘முன்மாதிரி மாநிலமாக’ (EXEMPLAR STATE) தமிழ்நாடு தேர்வு.அதை எடுத்துக்கொண்டு தங்கள் சாதனையாக விஜய் கும்பல் பரப்பியது
29. பத்திரிக்க்கையாளர்கள் ஒருங்கிணைப்பில் உருவான திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்கு தடை
30. மதம் மாறிய இசுலாமிய மக்களின் இடஒதிக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை விதத்தை கண்டுக்காமல் விட்டது !
31. பக்ரீத் (Bakrid) பண்டிகை மற்றும் இதர பொது நிகழ்வுகளில், பொது இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகளைப் , வெட்டுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம் இதற்கும் தலையாட்டி அமைதி .
32. பொது இடத்தில் போதை பொருள் பயன் படுத்திய ஒரு அமைச்சர் அதற்கும் நடவடிக்கை இல்லை
33.சென்னை அருகே உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ,இந்த விவகாரம் என்ன ஆனதுன்னு தெரியாது
34. விஜய் கட்சிக்காரர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதே கட்சி சார்ந்த பெண் கட்சியில் இருந்து நீக்கம் அவர்கள் சுகந்திரமாக சுற்றிவருகிறார்கள்!
35. சென்னையில் போக்சோவில் கைதான இன்னொரு விஜய் கட்சிக்காரன் சில நாட்களில் விஜய் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறான்
36.தினகரன் கட்சி சட்டமன்ற உறுப்பினரை தங்கள் பக்கம் இழுத்து
37. அதிமுகவில் வென்ற ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யவைத்து தன் கட்சிக்குள் இணைத்து
38. விஜய் கட்சிக்காரர்கள் பள்ளிக்கூடம் உள்ளே போய் விஜய் பாடலுக்கு மாணவர்களை ஆடவைத்தது
1/2 please come to 1st comment 🙏