சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்..
இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ?
உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. @CMOTamilnadu
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
கீர்த்தனா ரீல்ஸ் போட்டு பரப்பிய பொய்கள்:
உண்மை என்னவென்றால் royal enfield கூடுதல் முதலீடான 2500 கோடி திட்டம் இவர்கள் வந்து ரீல்ஸ் போட்டு கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்றுவிட்டது. அதுவும் முதல் முறையாக royal enfield வேறு மாநிலத்திற்கு செல்கிறது. Advanced Medium Combat Aircraft (AMCA) மூலமாக பாதுகாப்பு துறையில் நவீன Aircraft சார்ந்த முதலீடான 15,000 கோடியும் தமிழகத்தை விட்டு ஆந்திரா சென்றுவிட்டது இவர்கள் நடத்திய ரீல்ஸ் புரட்சி நேரத்தில்.. இதை கவனத்தில் எடுத்து மேற்கொண்டு நிறுவனங்கள் முதலீடு சார்ந்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த வேண்டிய கீர்த்தனா தினமும் ரீல்ஸ் மோகத்தில் சுற்றி வருகிறார்..
சரி இவர் சமீபத்தில் ஒரு ரீல்ஸ் போட்டார் அல்லவா அதில் தாங்கள் கொண்டு வந்ததாக சொன்ன 5 முக்கியமான பொய்கள் :
1) National Single Window System (NSWS) கொண்டுவந்தது 2021-ல்.. இந்தியா முழுவதும் அனைத்து மா நிலங்களிலும் நடைமுறை உள்ளது. 2017ல் இருந்து தனிப்பட்ட தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தில் சிறப்பு தளம் உள்ளது. நாடு முழுவதும் 1,23,000 applications கிடைக்கப்பெற்று சுமார் 75,599 approvals முதலீட்டாளர்களுக்கு இது கிடைக்கப்பெற்றது.
2)National Electric Mobility Mission Plan (NEMMP) இது 2020 முதல் நடைமுறையில் தீவிரப்படுத்திய இந்தியா. அதற்கு முன் FAME India Scheme , FAME 2 என நடைமுறை படத்தப்பட்ட ஆண்டுகள் 2015 , 2029.
இதன் வழி தமிழகத்தில் மட்டும் சுமார் ₹50,000 crore அளவிற்கு முதலீடுகள் கிடைக்கப்பெற்றன.
3) First National AI Strategy 2018ல் உருவாக்கப்பட்டு பின் அது IndiaAI Mission — 2024 தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக சுமார் 10300 கோடி ஒதுக்கீடு செய்தது இந்தியா.
4)National Policy on Electronics என்று 2019 உருவாக்கப்பட்டு $400 billion அளவிற்கு உள் நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் புதிய உச்சம் தொட்டது. தமிழகத்தில் Tamil Nadu Semiconductor and Advanced Electronics Policy 2024 என பின் வரும் அரசுகள் அதிகரித்தன. ₹30,000 கோடி அளவில் தமிழகம் மட்டும் முதலீடுகளை பெற்றது.
5)MSME பொறுத்தவரை : MUDRA loans 2015 , Startup India 2016 , ECLGS 2020 கொரோனா காலகட்டத்தில் , Make in India 2014 என வெவ்வேறு காலகட்டத்தில் தீவிரமான சீர்திருத்தங்களை செய்து - Revised MSME classification வரை உள்ளது..
இவை அனைத்தும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்த விசயங்கள்... இதில் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக திமுக இரண்டு கட்சிகள் ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்டவையே..
எங்கே இருந்து இது எல்லாவற்றிற்கும் இன்று TVK விஜய் தான் என்னவோ புதியதாக வரக் காரணம் என்பது போல் புதிய மாற்றம் உருவாக்கியது போல் ரீல்ஸ் போட்டு பொய் பரப்புகிறார் கீர்த்தனா?
பொய் மட்டுமே மூலதனமாக TVK பரப்பி ஆட்சிக்கு வந்த பின் அதே பொய் தான் ஆட்சியில் நீடிக்கவும் தேவை என நினைத்துக் கொண்டு தொடர்ந்து பொய் பரப்புவதால் தான் மக்களிடம் வேகமாக நம்பிக்கை இழந்து ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு கோபம் மக்களிடம் கூடுகிறது...
எனவே ரீல்ஸ் போடுவதை விட்டு உருப்படியாக வேலையை செய்தால் நலம். இல்லை தொடர்ந்து பொய் பரப்பி ரீல்ஸ் தான் ஆட்சி என திரிந்தால் நிச்சயம் அவமானப்பட்டு அழிவது உறுதி.
ஒழுங்கா கரண்ட் கொடுக்க துப்பு இல்லை வந்துட்டானுக முதலீடு என்று. எவன் வருவான் இப்படி கரண்ட் கட் ஆனால் ! இது தான் மக்கள் குரல்...
-மாரிதாஸ்
திமுக தவெக வேறுபாடு என்ன ?
குமரகுருபரன் IAS, சென்னை மாநகராட்சியில் மட்டும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது திமுக ஆட்சி
குமரகுருபரன் IAS, பத்திர பதிவுத் துறை, வணிக வரித் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது தவெக ஆட்சி
நல்ல மாற்றம் @TVKVijayHQ ?
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஆள் மாறாட்டம்
முன்னாள் சென்னை மாநகர ஆணையர் அருண் அவர்களை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், கட்டுமான நிறுவன உரிமையாளர் ஷர்மா மீது அருண் பிறப்பித்த குண்டர் சட்டம் தொடர்பான ஒரு வழக்கில் இன்று (27.05.2026) ஆஜராகுமாறு கடந்த 20 மே 2026 அன்று உத்தரவிட்டனர். இது தொடர்பாக சம்மனை அருணிடம் நேரில் வழங்க சென்னை உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணன் அருண் IPS இயக்குனராக உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 26 மே 2026 அன்று சென்றார்.
நேற்று (26.05.2026) பிற்பகல் 3.05 க்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகம் சென்ற உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை, மாலை 5.15 வரை சம்மனை வாங்கிக் கொள்ளாமல் 2 மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்துள்ளனர்.
இன்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்மனை வாங்க மறுத்து காக்க வைத்ததற்கான காரணம் குறித்து கடும் கோபமடைந்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற ஊழியரை காக்கவைத்தது யார் ? அவர் நேரில் ஆஜரானபின்தான் விசாரணையை தொடங்குவோம் என்று கூறி, மதியத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
யார் அந்த நபர் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, மதியம் 2.30 க்கு விசாரணை தொடங்கியது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து ஹர்ஷா மோகன் என்ற முகாம் சிறப்பு உதவியாளர் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியரை 2 மணி நேரம் ஏன் காக்க வைத்தீர்கள். சம்மனை வாங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம். உயர்நீதிமன்றம் என்றால் இவ்வளவுதான் மரியாதையா ? என்று கேள்விகளை எழுப்பினார். நீதிமன்ற ஊழியரை காக்க வைக்க உங்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று கேட்டபோது ஹர்ஷா மோகன், இயக்குனர் (அருண்) ரகசிய வேலையாக (confidential meeting) இருந்ததால் அவரிடம் தகவல் சொல்ல முடியவில்லை, அதனால்தான் தாமதம் என்றும், மன்னிக்கவும் என்றும் கூறினார்.
ஒரு கீழ்நிலை ஊழியரை தண்டிக்க வேண்டாம் என்று நினைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகனின் மன்னிப்பை ஏற்ற பின் வழக்கு விசாரணையை தொடங்கினர்.
ஆனால் உயர்நீதிமன்ற ஊழியரை காக்க வைத்தது, ஹர்ஷா மோகன் அல்ல !!
அவரை காக்க வைத்தது, அருணின் கைத்தடியாக, அருண் உதவி காவல் கண்காணிப்பாளாராக சாத்தான் குளத்தில் 1998 ல் பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை பணியாற்றும் “உதவியாளர்” ஐயப்பன்தான் அது.
கடைசியாக அருண் சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்தது வரை, ஐயப்பன்தான் உடன் இருந்தார். இப்போது, அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டதும், ஐயப்பனை அழைத்து வந்து விட்டார்.
ஐயப்பனும் அருணும் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் பல முறை பதிவு செய்திருக்கிறேன்.
நேற்று, உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தது ஐயப்பன். கையெழுத்து போட்டது மட்டும் தான் ஹர்ஷா மோகன். ஆள்மாறாட்டம் செய்தது அருண்.
உண்மையில் அருண் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகன் சொன்னது போல ரகசிய வேலையில் (confidential meeting) இல்லை.
அருணின் மனைவி மற்றும் இரு மகள்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தை சுற்றி பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை அறைக்குள் வைத்துக்கொண்டுதான் அருண் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தார்.
இப்படி இருக்கையில், ஐயப்பனை காட்டிக்கொடுக்க விரும்பாத அருண், இன்று உயர்நீதிமன்றத்தில், ஒரு பாவமும் அறியாத ஹர்ஷா மோகனை மாட்டி விட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு துணிச்சலாக அருண் ஆள் மாறாட்டம் செய்துள்ளார்.
உயர்நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
@CMOTamilnadu@tnpoliceoffl
@sansbarrier அடேங்கப்பா தன் வீட்டில் நாட்டியம் ஆடியவர்
ஜெ என்று பொது மேடையில் மூப்பனார் பேசியவரின் கும்பகோணம்
வீடு தேடி போய் கூட்டணி பேச சென்றார்
ஜெ அவர்கள்..
அரசியலில் தன் மானம் என்கிற சொல்லாடல் வைகோ போன்ற கையாலாகதவர்களின் இயலமையை மறைக்க சொல்லுவது.
விஜய்க்கு எதிராக சோசியல் மீடியாவில் பதிவு போட்டவர் சிறையில் அடைப்பு.. காரணம் ஆபாசமாக பேசினார்..
அது சரி... நான் கேட்பது
அப்போ ஆளும் ஆட்சியாளார்களுக்கு நேர்மை ஆண்மை இருக்கும் என்றால் "உங்கள் ரூட் மாபியா நடத்தும் வார் ரூம் கும்பல் இருக்கே" அந்த கட்டிடத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய மக்களை அனுமதியுங்கள். ஆண்மை இருக்கா?
ஏன் என்றால் கடந்த 2 வருடமாக விஜய்க்கு ஆதரவு என்ற பெயரில் இவனுக பண்ணும் முக்கிய வேலை விஜய் எதிராக பதிவு செய்யும் எந்த நபரையும் அவர் அம்மா , தந்தை , மனைவி , குழந்தை என ஆபாசமாக திட்டுவது மட்டுமே.. அதன் மூலம் அவமானப்படுத்தினால் தங்களுக்கு எதிராக எவனும் பேச முன் வரமாட்டன் என்ற அருவருப்பான எண்ணம்... இது உண்மையா இல்லையா? பொதுவான விசாரணைக்கு தயாரா?
மக்கள் வேண்டாம் நான் மாரிதாஸ் ஒருத்தன் வரேன்.. ஒரே ஒருத்தன் என்னை மட்டும் அனுமதியுங்கள்.. உங்கள் மொத்த சாக்கடை கும்பல் லட்சணத்தை - மக்களுக்கு என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன்.. விஜய் இந்த சவாலுக்கு தயாரா?
விஜய் ரசிர்கள் என்று திரிபவனை விடவா ஒரு ஆபாசமாக பேச கூடிய ஒருத்தனை சமூகவலைத்தளத்தில் பார்க்க முடியும்?.,.. ஆபாசமாக பேசினால் கைது செய்வதென்றால் முதலில் மொத்த TVK விஜய் ரசிகர் என திரியும் 99% பேர் ஜெயிலில் தான் இருப்பார்கள். கைது செய்ய தயாரா?
தவறான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் வைத்தால் கூப்பிட்டு எச்சரிக்கை செய்து அனுப்புவர்.. ஏன் என்றால் அவர் சமூகத்தின் மீது கொண்ட கோவத்தை காட்டலாம் ஆனால் வார்த்தை நாகரீகம் முக்கியம் என்பதை சொல்லி.. இரண்டாவது முறை என்றால் FIR போடுவது வழக்கம்.. ஆனால் இங்கே விஜய் செய்வது அப்பட்டமான அடக்குமுறை... தன்னை எதிர்த்து எவனும் பேசிவிட கூடாது என்ற எச்சரிக்கையை பயத்தை காட்ட முயற்சிக்கிறார் விஜய்..
இந்தாங்கடா வீடியோ ஆதாரம்..
கோவை கல்லூரி மாணவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு உண்மையே .. வீட்டுக்குள் சென்ற நிலையில் நூல் பொழுதில் உயிர் தப்பியுள்ளார்.
கோவை பகுதியில் கிடுகிடுவென பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது கடந்த 1 வாரத்தில்.
யோவ் SP வேலுமணி இந்த ஆட்சிக்கு தானே ஓடி போய் லீமா ரோஸ் அம்மா ஆட்சினு குடை பிடிச்ச. உங்க ஏரியா தான்.. என்ன இன்னும் ஆதரவு கொடுத்துட்டு தான் இருக்கய்யா?
@ProudTamizhan1 கொலைகாரனோடு கூட்டணி வச்சுட்டு
கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு இரங்கல் எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பி நீங்க வேற லெவல் அரசியல்...பேசுறிங்க...!
👌
நாடாளுமன்றத்தில் 1993 ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் JMM எம்பிக்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ்,பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது போன்று, தற்போதும் முதல்வர் @TVKVijayHQ மீது வழக்கு வர வாய்ப்பு உள்ளது.
@AIADMKOfficial
@ProudTamizhan1 தம்பி காக்கா பிரியாணி சாப்பிட்டா
உன்னி கிருஷ்ணன் குரல் வராது என்று மகான் விவேக் சொன்னதை நினைவு படுத்து கிறேன்..
இது என்ன மாதிரியான பதிவு...வெரி சேட்...
@ProudTamizhan1 தமிழ் நாடு காங்கிரஸை மிக கேவலமா விமர்சனம் செய்துட்டு
திமுக கூட்டணி கட்சிகளை மிக கேவலமா விமர்சனம் செய்துட்டு அவங்கிட்ட இப்போது ஆதரவு கேட்டு நிற்கிறது கேவலம் இல்லையா தம்பி கூச்சமா இல்லையா..
அதில் திமுக வாக்குகள் இல்லை யா
இல்லை அந்த வாக்குகள் தூய வாக்குகளா..?
என்ன தம்பி இது அறம்..
@sureshelangov12 லூசாய்யா நீ இது தான் பிளாக் மெயில் எவிடென்ஸா மாற போகுது...
குதிரை பேரத்திற்கான முகாந்திரம் நீங்களே கொடுத்தா எப்படி...?
அலுவலகத்தில் வைத்து கையெழுத்து வாங்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவு இல்லையா..?
இது ல பத்திக்கை டேஷ் உனக்கு சந்தேகம் வேறயா..?