பலராமரே! ❤️
யாத்திரை
நித்திரையில்
கரையாதோ?
இளவல் இன்றி
மலர்ந்த துறவு
பேரனால்
நிறைவு பெற
இருக்கிறது
கை கோர்க்கும்
காலம் இது!
பந்தங்களுடன்
இணையும்
புரிதல் உளதோ?
இராமர் இருவர்
வாழ்வும்
என்றும்
பாமரனை ஈர்க்க
வேண்டாவோ?
-கவிஞர். கிறிஷ்கோடி✍️
#BalaramJayanti | #Harekrishna
போர்த் தொடங்கிய
காலத்தில் உக்ரைன்
நாட்டு மக்கள்
பணப் பரிவர்த்தனை
செய்ய முடியாமல்
தவித்த செய்தி
நினைவிற்கு வருகிறது.
வாழ்க பாரதம்!
வாழ்க #Modiji !
நம் நாடு
வளர்ந்த பாரதத்தை
நோக்கி நகர்கிறது,
இது எளியவர்களுக்கும்
புரிகிறது. (2)
#10YearsOfUPI
கைப்பேசி
எதற்கு என்றிருந்த
காலம் 2015,
2016 லிருந்து
திறன்பேசி
தேவை எங்கிருந்து
வந்தது?
வங்கி கணக்கு
இல்லாத ஏழைகளுக்கு
ஜன் தன் திட்டம்
கொண்டு வந்து
பாமர ருக்கும் டிஜிட்டல்
பணப் பரிவர்த்தனையின்
சேவையை கொண்டு
சேர்த்தது எப்படி?
இன்றும் வியக்க
வைக்கிறது (1)
#10YearsOfUPI
கவிஞரே! ❤️
யுக யுகமாய்
தம்முடன்
பயணித்தோரை
மறந்தீரோ?
அறிகிலேன்!
தாம்
ஆண்டி இல்லை
மடியில் தவழ்ந்து
தம்முடன் விளையாட
தம் தலைவன்
இரட்டை வேடம்
தரிக்க விருக்கிறான்
துறவி
நிலையிலிருந்து
விடுபடுவீரோ?
#AnbuModiji
தேசிய
செயலாளர்களில்
ஒருவராக
மத்திய அரசால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
எழுத்தாளர்
ம. வெங்கடேசன்
அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
நியமனம் பெற்ற
மற்ற புதிய தேசிய
நிர்வாகிகளுக்கும்
எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள் 💐
#BJP
பாரதம் வளர்ச்சியை
நோக்கி நகர்கிறது
புதுயுகத்தை வரவேற்கிறது
இப்போதும்
எம் மக்களுடன்
உறவாட தெய்வங்கள்
வருகின்றனர்
மேலும்
பாடவா? பாடவா?
பாரத பெருமை பாடவா?
முன்னோர்கள்
எம் நாட்டு ஆண்கள்
தம் குருதி கொண்டு
மண்ணில் விதைத்த
வீரமடா இது! (2)
#HappyIndependenceDay
வாருங்கள்
மூவர்ணக் கொடியின்
அழகைக் கொண்டு
வீட்டை அலங்கரிப்போம்
இப்போதும்
காவியின்
தியாகம் தெரிகிறது
இப்போதும்
வெண் நிற
அமைதி நிலவுகிறது
இப்போதும்
மண்ணில்
பசுமையும், வளமும்
நிறைகிறது
இப்போதும்
அசோகச் சக்கரம்
என்ற பெயரில்
காலச் சக்கரம்
ஒன்று சுழன்று
கொண்டே இருக்கிறது (1)
அனுமன் ❤️:
தென்னகத்தோன்
சிரஞ்சீவி பவ!
சிவனின் அம்சம்,
காற்றிற்கு இணையான
சிந்தனையின் வேகம்,
திடக்காத்திர
உடல்வாகு,
தேசத்தின் மீது பற்று
ஒப்பற்றது
மக்களை ஈர்க்கிறது
மிரட்டும் தொனியில்
மன்னன் வாயு தேவனின்
மைந்தன்,
கலியுக வசுதேவரின்
கண்மணிகளுக்குத்
தாய் மாமன்(1)
#jaihanuman
பருவநிலைக்கு ஏற்ற
கதராடைகளை,
கைத்தறி நெசவு சார்ந்த
ஆடைகளை
சுதந்திர தாகம் கொண்ட
நம் முன்னோர்கள்
ஒற்றுமை மற்றும்
விடுதலைச் சின்னமாக
பயன்படுத்தி உள்ளனர்.
பருத்தியின் இயல்பு
மென்மையானது
கோடையில் குளிர்
குளிரில் கதகதப்பைத்
தருகிறது (1)
#NationalHandloomDay
பாடு பெரும்பாடு
இந்த மாசுபாடு
வீசிய நெகிழிகளால்
வந்த மாசுபாடு
இயற்கைக்கு தீங்கு
மனிதனின் அலட்சியம்
மனிதனுக்கு தீங்கு
இயற்கையின் கோபம்
இலைகளற்று
குடிலும், நிலமும்
பட்டுப் போகிறது
வெப்பம் தணிக்க
அல்லல் படுகிறது
தீர்வோ
பிளாஸ்டிக் ஒழிப்பு
மரங்கள் வளர்ப்பு
நீர் சேமிப்பு (1)
மண்ணில் கலந்திடுமோ
இவ்வெண்ணம் என்றும்!
@WTLFoundation தரும்
50 லட்சம் மரக்கன்றுகள் மூலமும்,
நீர் நிலைகளில் நெகிழிகள்
அகற்றுவதன் மூலமும்
வந்தது உபாயம்
ஆகஸ்ட் - சுற்றுச் சூழல்
விழிப்புணர்வு மாதம்
குமரி முதல் தூத்துக்குடி
வரை முதல் பயணம்
மாறுவோம்! மாற்றுவோம்! (2)
பாடு பெரும்பாடு
இந்த மாசுபாடு
வீசிய நெகிழிகளால்
வந்த மாசுபாடு
இயற்கைக்கு தீங்கு
மனிதனின் அலட்சியம்
மனிதனுக்கு தீங்கு
இயற்கையின் கோபம்
இலைகளற்று
குடிலும், நிலமும்
பட்டுப் போகிறது
வெப்பம் தணிக்க
அல்லல் படுகிறது
தீர்வோ
பிளாஸ்டிக் ஒழிப்பு
மரங்கள் வளர்ப்பு
நீர் சேமிப்பு (1)
என் பாதைக்கு முதல்
வித்திட்ட தலைவன் இவர்.
ஏழை மாணவச்
செல்வங்களின் ஊக்கம் இவர்.
தம் தியாகத்தால்
குடியரசு தலைவராக
பாரதம் பெருமை
கொள்கிறது;
தம் செயலால்
ஒரு தமிழனாக
நாங்கள் பெருமை
கொள்கிறோம்
வாழ்க நின் புகழ்!
#apjabdulkalam
"கனவு காணுங்கள்;
அந்தக் கனவை நனவாக்க
உழையுங்களென"
மாணவர்களுக்கு
ஊக்கம் ஊட்டிய
ஏவுகணை தலைவனின்
நினைவு நாள் இன்று - அவர்
மறைய வில்லை
மறையப்போவது மில்லை
இளைஞர் சக்தி
என்றுமே அழியாதது.
அன்பு, தேசப்பற்று,
உயர்ந்த சிந்தனை
ஒரு சேரப் பெற்ற மனிதம்
Dr. #APJAbdulKalam
ஐயா அவர்கள்.