அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
இளைஞர்களின் நம்பிக்கையாகவும், கழகத்தின் எழுச்சி நாயகனாகவும் திகழும் நம் இளந்தலைவர் அவர்கள் கழக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று 7 ஆண்டுகளை சிறப்பாக நிறைவு செய்து, 8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளைஞர்களுக்கான தங்களது அர்ப்பணிப்பும், மக்கள் நலன் சார்ந்த பணிகளும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தொடர வாழ்த்துகள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி
#Udhay4Youth #dmkywtenkasi
போதைப்பொருள் பயன்படுத்திய தமிழக அமைச்சர் சரத்குமாரை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கழக நிர்வாகிகளுடன் கண்டனம் முழக்கங்களை எழுப்பி கைதான போது
#TVKFails
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
ஸ்டாலின் சார் ஆகமுடியுமா விஜய் ப்ரோ?
எதற்கெடுத்தாலும் ‘ஸ்டாலின் சாரா, விஜய்யா?' என்று கேள்வி எழுப்பும் #SofaModel முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே... இந்த சிறு ஒப்பீட்டைப் பாருங்கள்...
இன்றைய @MPaasarai பக்கத்தில்...👇
#TVKFails
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று,
நம் @dmk_youthwing-ன் தலைமையகமான அன்பகத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் 75 அடி உயர கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளைத் திறந்துவைத்தார்.
மேலும், அன்பகத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்து, இளைஞர் அணி மேற்கொண்டுவரும் ஆக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று- கழகத் தலைவர் தலைமையில் திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்க,
கழக இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!
#KalaignarForever #Kalaignar103
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan.
Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders.
Incidentally, this also exposes the hollowness of the reckless allegations made by some Congress leaders who repeatedly questioned why Pinarayi Vijayan had “not yet been targeted by the BJP”!
#EDraids
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.