Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திருமிகு. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),
விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் அமைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @TVKVijayHQ@INCIndia@cpimspeak@tncpim@thirumaofficial@IUMLTNOfficial
From getting called as BJP B team to..
Becoming the A team of Opposing BJP..
TVK leads the war against BJP in TN with INC .
All others who oppose TVK government are now BJP B team 😭
முதன் முதலா mla ஆனா சினிமா நடிகர் ஒருத்தருக்கு 2 வருசத்துலயே
துணை முதல்வர் பதவி கொடுக்கும் போது வராத கோபமும், சுயமரியாதை சிந்தனையும்
இன்னொரு சினிமா நடிகர் cm ஆக போறத ஏத்துக்க முடியாம தவிக்குது.
உண்மையான கொத்தடிமை தற்குறி
யார் னு ego ah விட்டுட்டு யோசிச்சி பாருங்க டா.
கூட்டணிக்கு அவ்ளோ open aa விஜய் கூப்பிட்டார்.
போயிருந்தா.. இந்நேரம் 30 seat ஜெயிச்சு துணை முதல்வர்+ பெரிய அமைச்சர் பதவி வாங்கி..
VCK வின் நோக்கமான.. அதிகாரத்த அடஞ்சி இருக்கலாம்.
Generational Fumble by Thiruma.
Why you guys chose udhay as MLA candidate nu kettathukku people accepted him and made him as MLA, if people have no problem why do you guys worry nu kettanga. Now UPs are struggling hard to swallow their own medicine.
மக்கள் நாசமா போகட்டும் ன்னு சொல்றானுங்களே தவிர அவனுங்க எங்க தப்பு பண்ணுனானுங்க, எதனால் இந்த தோல்வி என்பதை கடைசிவரைக்கும் உணரவே மாட்டேங்கிறானுங்க.. நல்லா வருவீங்க டா.. 🚶♂️🚶♂️🤦♂️
Result annaiki 'Kamarajar aaye thokadicha ooru sir idhu' nu sollaporom nu Morattu sarcasm pantu irundhaanunga
Ini kaalathukum 'stalin aaye thokadicha ooru sir' nu thookitu suththa poraanunga 😹😹😹...
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.