என் அன்ப���ம் நீயே !! என் வாழ்வும் நீயே !!
கருவறையில் என்னை சுமந்த போது வலியை கொடுத்தும்..!!
நான் இருட்டில் இருக்கிறேன் என்று தான் கவலை கொண்டாள்..!!!
விரல் பிடித்து நடந்த போது, என் விரல் வலிக்காமல் இருக்க..!!
அவள் விரல் மீது என் விரல் கோர்த்து நடந்தாள்..!!!
உணவு ஊட்டும் போது உணவின் ருசி அறிந்தேன்..!!
ஊட்டும் அவள் உணர்வு அறிய மறந்தேன்..!!
நான் சிரிக்க, அவள் கண்ணீர் மறைத்தாள்..!!
இது புரியாமல் என் கண்ணீரையும் அவளிடமே கொட்டினேன்...!!
அதையும் துடைத்து என் கஷ்டம் நீக்கினாள்..!!
என்று பகலும் இரவும் சமமாக தோன்றுகிறதோ அன்று உன் வாழ்க்கை நிம்மதியை அடைந்துவிடுகிறது.
இரவை தேடும் பகலும், பகலை தேடும் இரவும் நிம்மதியையும் தேடிக்கொண்டு தான் இருக்கும், என்றும் கண்டு விடாது...!
தேடுதலை நிறித்தி உன் வாழ்க்கைக்கு விடுதலைக்கொடு. :-)
#குமரி_கிறுக்கன்
காதலின் முடிவில் காமம் வருவதற்கும், காமத்திற்காக காதலெனும் பகடையை உருட்டு வதற்கும் உ��்ள வித்தியாசம் புரியாமல் நடைபெறும் குற்றங்களே பாலியல் வன்கொடுமை..!!
காமத்தில் முடியாதது காதல் இல்லை, அதற்காக காலையில் மலர்ந்த காதலுக்காக அன்று மாலையே காமம் தேடுவது காதலுக்கு அழகல்ல...!!
பணம் உண்டு, கடன் உண்டு, ஆசை உண்டு, அமைதி இல்லை, நிம்மதி இல்லை..!
உண்ண உணவு உண்டு, இருந்தும் என்ன பயன்? உன் பாதை இறுதியில் அமைதியும் நிம்மதியும் தேடி..! அது இந்த கிறுக்கனிடம் நிறைந்துள்ளது.
#குமரி_கிறுக்கன்