மங்களூரு: இந்திய திரையுலகின் உச்ச நடிகரான #ஷாருக்கான் சமீபத்தில் மங்களூருவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அதில் அவர் பிரபலமான சில பாடல்களுக்கு நடனமாடியதுடன் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பெண் ரசிகை ஒருவர் ஷாருக்கானிடம், ‘என் கணவரைவிட உங்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும், ஐ லவ் யூ’ என்று கூறினார். இதை கேட்ட ஷாருக்கான் புன்னகைத்தபடி, ‘இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் அவ்வாறே உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னை நீங்கள் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். அருகில் பார்க்க முடியாது. உங்களுக்கு நான் வீடு வாங்கித்தர மாட்டேன். வீட்டிற்கு வாடகை தர மாட்டேன். உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை நான் கவனிக்கவோ அவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடவோ மாட்டேன்.
உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடித்துப் போக மாட்டேன். உங்கள் கஷ்டத்தில் பங்குபெற மாட்டேன், உங்களோடு சண்டையிடமாட்டேன், உங்களை சந்தோஷமாக வைத்திருக்க போவதில்லை. இது எதையும் செய்யாத என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவை அனைத்தையும் செய்யும் உங்கள் கணவரை நீங்கள் எந்தளவு காதலிக்க வேண்டும். நீங்கள் என்னை ரசித்தால் மட்டும் போதும்’ என்று அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை அவரது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல வைத்தார் ஷாருக்கான்
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
நான்வேட்பாளராக மட்டுமே இருக்கும்போதே சட்டமன்ற உறுப்பினர் போல பணியாற்ற வாய்ப்பளித்து,முக்கிய வீதிகளில் விளக்கு கூட இல்லை என்று நான் சொன்ன அடுத்த நாளே அவசரகால நடவடிக்கை எடுக்கும் இந்த சுறுசுறுப்பை கடந்த 10 வருடங்களாக மக்கள் பார்த்ததே இல்லையாம்.
#Vote4SundarC#Sundarc4MaduraiCentral
#UngalVeetuPillaiSundarC
#Aiadmk
@AIADMKOfficial
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதைப் பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நமது குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியிருக்கிறது.
மாணவியைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட போதைக் கும்பலில், காவல்துறையினர் இதுவரை, ஒருவனை மட்டுமே கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. போதைப் பொருள் கடத்துபவனும், விற்பவனும், பயன்படுத்துபவனும் எங்கு இருக்கிறான் என்பது தமிழக காவல்துறைக்குத் தெரியாதா? திமுக அதிகாரமட்டம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதன் விளைவு, இன்று ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
திமுகவினர் பணம் சம்பாதிக்க, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு, பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.