Apple CEO பதவியிலிருந்து Tim Cook விலகி John Ternus அந்த இடத்திற்கு வருகிறார். இந்தச் செய்தியில் என்னை ஈர்த்தது டெக்னாலஜி கிடையாது, ஒரு பிசினஸை எப்படி ஸ்கேல் செய்ய வேண்டும் என்கிற லாஜிக் மட்டும்தான்.
Steve Jobs காலமான போது Apple நிறுவனத்தின் மதிப்பு $350 billion. இன்றோ அது $4.5 trillion அளவிற்குக் வளர்ந்திருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது? Cook ஒன்றும் புதுப்புது கண்டுபிடிப்புகளைத் தூக்கிக்கொண்டு வரவில்லை. மாறாக, இருக்கும் சிஸ்டத்தை சீர்படுத்தினார்.
ஒரு iPhone விற்றால் அதோடு லாபம் முடிந்தது என்று நினைக்காமல், 2.5 billion யூசர்களை வைத்துக்கொண்டு அதை ஒரு recurring revenue machine-ஆக மாற்றினார். கூடவே AirPods, Apple Watch என accessories விற்பனையிலேயே $35 billion கொண்டு வந்தார்.
நமக்கு இதிலிருந்து கிடைக்கும் பாடம் சிம்பிள். ஆரம்பத்தில் ஒரு ஐடியா க்ளிக் ஆவது பெரிதல்ல. அதைத் தொய்வில்லாமல், லாபகரமாகத் தொடர்ந்து நடத்துவதுதான் அசல் வித்தை. Cook செய்ததையே தான் Ternus-ம் செய்ய வேண்டும். ஆனால் இப்போது சூழல் வேறு.
சீனாவிலிருந்து உற்பத்தியை இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றும் சவாலும், AI போட்டியில் முந்த வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருக்கிறது. $3 million சம்பளம் மற்றும் $55 million மதிப்புள்ள equity award வாங்கும் ஒருவருக்கு இதெல்லாம் சாதாரண சவால்கள் கிடையாது.
பெரிய கண்டுபிடிப்புகளை விட, ஒழுங்கான செயல்பாடுகள் (operations) அதிகப் பணம் ஈட்டித் தரும் என்பதற்கு Tim Cook ஒரு ஆகச்சிறந்த உதாரணம். 🍎
#Apple #TimCook #StockMarket
உங்க அப்பா அம்மாவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா என்று கேட்டால், உடனே 'இருக்கே, பிரீமியம் வருஷா வருஷம் கட்டறோமே' என்று சொல்வீங்க. இதுதான் நாம பண்ற பெரிய தப்பு. 10 அல்லது 15 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த பாலிசியை அப்படியே புதுப்பித்துக்கொண்டே இருப்பது, அந்த காலத்து போனை வைத்துக்கொண்டு இன்னைக்கு 5G வேகத்தை எதிர்பார்ப்பது மாதிரி.
அப்போ ஒரு சில லட்சங்கள் கவர் இருப்பது பெரிய விஷயமாக தெரிந்தது. ஆனால் இன்னைக்கு ஒரு ICU செலவோ அல்லது ஒரு மேஜர் அறுவை சிகிச்சையோ நடந்தால், பழைய பாலிசி ஒரு சில நாட்களிலேயே காலியாகிவிடும். காசு கட்டிட்டோம் என்கிற தைரியம் மட்டும் இருக்கும், ஆனால் ஆஸ்பத்திரி பில் வரும்போதுதான் கையிலிருந்து எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கு என்று தெரியும்.
பாலிசியில் இருக்கிற co-pay கிளாஸ் அல்லது ரூம் ரென்ட் லிமிட் இதையெல்லாம் நாம க்ளைம் பண்ணும்போதுதான் கவனிப்போம். ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன பிறகு இதைப் பற்றி கவலைப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. உங்க ஊரில் இருக்கும் ஒரு நல்ல ஆஸ்பத்திரியில் ஒரு வாரச் செலவை இந்த பாலிசி தாங்குமா என்று யோசித்துப் பாருங்கள்.
வருடம் ஒருமுறை போர்ட்ஃபோலியோ செக் பண்ணும்போது அப்படியே இந்த பழைய பாலிசி டாக்குமெண்டையும் ஒருமுறை எடுத்துப் பாருங்க. சும்மா பிரீமியம் கட்டுறதோடு நிறுத்தாமல், இன்னைக்கு இருக்கிற மருத்துவ செலவுக்கு அது கட்டுப்படியாகுமா என்று பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். 🤒
#HealthInsurance #PersonalFinance
The moment you’ve all been waiting for is finally here… Registration for #CiscoLiveAPJC 2026 Melbourne is OPEN! You don’t want to miss out so save big $$$ and sign up today 👉 https://t.co/eA3trFQ1dp
Is there ever a good time for network uh-ohs? (That was a trick question 😜)
Discover how @Cisco AgenticOps helps you quickly identify, troubleshoot, and fix issues before anyone feels the impact.
See the ah-ha networking difference ⬇️
https://t.co/FQqX9VMfgD
Securing software shouldn't slow down innovation. Frontier AI is changing the game by automating code scanning at scale, making it easier to stay ahead of threats.
See how the landscape is changing: https://t.co/X0ph97eE0q
🤔 Which model should run this task? That used to be the only question. Now add: Where should it run? How close to the user? What network does it need?
Cisco explores the shift ⬇️
https://t.co/0fvsSKQuVl
Enterprise-grade security shouldn't be a luxury.
Meet Antares: compact, open-weight small language AI models that bring professional vulnerability detection to any team. Fast, secure, and built for the modern developer.
See the full breakdown: https://t.co/fbNNodc8Qi