+2 முடித்துள்ள குழந்தைகள் எல்லோரும் விண்ணப்பிக்க வேண்டிய Online Applications & Last Dates👇
1. TNGASA BA Bsc Bcom BBA 29.05.2026 125000 seats https://t.co/1HlGGQK7Bv
2. TNDALU BA LLB 05.06.2026 1500 seats https://t.co/9JwdxHNmo8
3. TNDALU SOEL BA LLB (HONS.) BBA LLB (HONS) BCA LLB (HONS) BCOM LLB (HONS) 05.06.2026 600 seats https://t.co/9JwdxHNmo8
4. TNEA BE 02.06.2026 170000 seats https://t.co/ijjJi6T483
5. TNAU AGRI Degree and Diploma Agri Tamil Medium 08.06.2026 5000 seats https://t.co/wlC5SCEwmd
5. TNEA B. Arch 20.06.2026 120 seats https://t.co/ijjJi6T483
6. TANUVAS BVSC and https://t.co/II0at2mU0G 580 seats https://t.co/6DgfQiLmFK
7. TNJFU BFSc and https://t.co/II0at2mU0G 600 seats https://t.co/auGaaxfsa3
8. BNYS 120 seats
9. https://t.co/MHzxDtcv17 Para Medical Degree Diploma and Certificate courses B.Pharm BSc Nursing BPT BOT Diploma Nursing D.Pharm 19000 seats
10. MBBS BDS BSMS BHMS BUMS BAMS With NEET Marks 11000 seats
11. https://t.co/P3bYc9MOo1 Government polytechnic colleges 19000 seats
12. Government ITI Tamil Medium PSTM QUOTA மூலம் எளிதில் அரசுப்பணிக்கு செல்ல முடியும். ஒரு வருட Fees just Rs. 250 only மாதம் ரூ 1750 உதவித்தொகை பெற்றுக் கொண்டே படிக்கலாம். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு ITI க்கு நேரில் செல்லவும்
மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள கீழ்காண் அரசு உதவி எண்களை அழைக்கவும்
14417 அல்லது 14416
மாண்புமிகு மன்னார்குடி MLA அண்ணன் காமராஜ் அவர்களது இந்த வெளிப்படையான அன்பான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை நோக்கிய அரசியலை விதைக்கத்தான் நானும் எனது தலைவர் அவர்களும் எப்போதும் உழைக்கிறோம்.
அவரவர் சார்ந்துள்ள கட்சிகளால் வேறுபட்டாலும் மன்னார்குடி மீதுள்ள பற்றால் அதன் வளர்ச்சியில் இணைகிறோம். தேர்தலுக்கு பின்பு, அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உழைத்தால்தான் அந்தப் பகுதி செழிக்கும் என்பதை நான் எப்போதும் நம்புபவன். இதையே பல முறை பல மேடைகளில் பல ஆண்டுகளாக தெரிவித்து வருகிறேன்.
நமது மன்னார்குடியின் வளர்ச்சி தொடர எனது முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும். தொடர்ந்து மன்னார்குடி மின்னும்.
மின்ன வைப்போம்🙏🏾
#மின்னும்_மன்னை #MinnumMannai
புதிய முப்படைத் தலைமை தளபதி
-----------------------------
நாட்டின் முப்படை தலைமை தளபதி என்ற சிறப்பு முதல் முறையாக ஒரு தமிழருக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் ராஜா சுப்பிரமணி.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னையில் பிறந்தவர்; என்றாலும் இவரது வளர்ப்பு- படிப்பு எல்லாம் மும்பையை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.
முப்படை தலைமை தளபதி என்பது(chief of defence staff CDS) ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் பதவியாகும். கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த பதவியில் நாட்டின் குடியரசுத் தலைவரை பொறுப்பில் இருந்து வந்தார். ஒரு கௌரவம் கருதி அவரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
இதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக நாட்டின் பாதுகாப்பு படைகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்திடவும், தளவாடங்களை சரியாக பயன்படுத்திடவும் வசதியாக கடந்த 2020 ஆம் ஆண்டு, முதல் முறையாக நமது ராணுவத்தில் முப்படை தலைமை தளபதி பதவி கொண்டுவரப்பட்டது.
இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்து வந்த ஜெனரல் பிபின் ராவத்திடம் முதல் முறையாக இந்த பதவி ஒப்படைக்கப்பட்டது. அவர் விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஜெனரல் அனில் சவுக்கான் அந்தப் பதவியில் அமர்த்தபட்டார். வரும் 30 ஆம் தேதியுடன் அவர் பதவி முடிவுக்கு வருவதை தொடர்ந்து இந்த பொறுப்புக்கு ஓய்வு பெற்ற லெப்டிண்ட் ஜெனரலான தமிழகத்தின் ராஜா சுப்பிரமணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நமது நாட்டின் அடுத்த முப்படை தலைமை தளபதியாக இவர் விரைவில் பொறுப்பேற்க இருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் எம்.ஃபில் பட்டம் பெற்றவர். இவரது பூர்வீகம் தமிழகம் என்பதால் நமக்கு அது பெருமிதம் அளிப்பதாக இருக்கிறது. டெல்லியிலும், லண்டன் மாநகரிலும் பயின்று பல பட்டங்களை பெற்றிருக்கிறார். டெல்லியில் உள்ள புகழ் பெற்ற தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவர் இவர். இந்திய ராணுவ கல்விக் கழகத்தில் இளநிலை பட்டம் பெற்ற ராஜா சுப்பிரமணி, கடந்த 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார்வால் ரைஃபிள் படை பிரிவில் முதல் முறையாக பணியில் சேர்ந்தார்.
அதன் தொடர்ச்சியாக ராணுவத்தில் 37 ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்திருக்கிறார். குறிப்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ராணுவ தலைமை துணை தளபதியாக பணிபுரிந்து இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் காலாட்படையை வெற்றிகரமாக வழி நடத்திய பெருமையும் இவருக்கு இருக்கிறது. இது போன்ற பல்வேறு சேவைகளுக்காக விஷிஸ்ட் சேவா, பரம் விஷிஸ்ட் சேவா போன்ற பதக்கங்களையும் அவர் பெற்றிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்புத்துறையில் ராஜா சுப்பிரமணி ஆற்றிய அளப்பரிய சேவை மற்றும் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு தற்போது நாட்டின் முப்படை தலைமை தளபதி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த பொறுப்பில் அவர் பல்வேறு சாதனைகள் புரிந்திடவும், நமது தமிழகத்திற்கு பெருமைகள் சேர்த்திடவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
#PrideOfTamilNadu
#FirstTamilCommander
#IndianArmedForces
#ProudMoment
#TamilPride
#Leadership
#Inspiration
#SaluteTheLeader
#ServiceToNation
#ProudIndian
#HistoricAchievement
#RespectAndHonor
#NationFirst
#MilitaryLeadership
#Congratulations
#WATCH | திடீரென சாலையை கடந்த குழந்தை.. வேகமாக வந்த வாகனத்தை லாவகமாக நிறுத்தி விபத்தை தவிர்த்த ஓட்டுநர்.
கேரளாவின் வயநாட்டில் நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
#SunNews | #Kerala | #CCTV
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
ரூட் மாஃபியா என தற்போது பேசப்படும் ஒரு நிறுவனம் நூறாண்டு கால ஆர்.எஸ்.எஸ் போன்ற பிரச்சார இயந்திரத்தை விட பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு பிரமிக்கிறேன்.
திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி என்று ஒரு வதந்தி கிளம்புகிறது. உடனடியாக அதை அத்தனை ஜர்னலிஸ்டுகளும் endorse செய்கின்றனர். ஒரு சில மணித் துளிகளில் இந்தச் செய்தி கிட்டத்தட்ட உண்மை என்றே நம்பப்படுகிறது!
ஒரு துளிகூட சாத்தியமற்ற விஷயத்தை நிஜமென ஒரு சிலரால் நம்ப வைக்க முடியுமெனில் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலம் நிஜமாகவே யார் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது?
இனி, தமிழ்நாட்டு அரசியலில் அரசியல்வாதிகளும், மக்களைப் போலவே வெறும் பார்வையாளர்கள்தானா?
காங்கிரஸ் வேக வேகமா போய் ஆதரவு குடுத்த உடனே பாஜக trigger ஆகிட்டான்.
முதல்முறையா ஆட்சி அமைக்க போறப்ப பீடையவாடா கூட சேப்பீங்க..
குறிச்ச நாள்ல பதவியேற்க முடியுமா தெரிலயே 😪
விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய போது, பெரும்பான்மைக்கு தேவைப்படும் எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றால்தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியும் என ஆளுநர் கூறியதாக தகவல்கள் வெளியாகின்றன.
அப்படி ஆளுநர் கூறினால் அது அதிகார துஷ்பிரயோகம், அரசியலமைப்பு சட்ட மீறல். யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கும் சூழலில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அந்தக் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்.
ஆட்சியமைக்கும் கட்சியின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டிய இடம் சட்டப்பேரவைதானே ஒழிய ஆளுநர் மாளிகை அல்ல என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்ற தீர்ப்பும் நிலைநிறுத்தப்பட வேண்டும்.