மேகமலை வருசநாடு மலைப்பகுதியில் வாழும் பூர்வகுடி தமிழர்களை ஆக்ரமிப்பு என்ற பெயரில் வெளியேற்ற துடிக்கும் உச்சநீதிமன்றம் ..!!
யார்.. ஆக்கிரமிப்பாளன்..??
மெரினா கடற்கரையில் உள்ள சுடுகாடுகளை முதலில் தூக்குடா..??
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துகள்!மலையாள மண்ணின் பண்பாட்டுப் பெருவிழாவாகவும், உழைக்கும் மக்களின் மகிழ்ச்சித் திருநாளாகவும் கொண்டாடப்படும் ஓணம் நன்னாளை மகிழ்வோடும், உணர்வோடும் கொண்டாடும் உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பிரிக்காது, அனைவரும் சமமாக வாழ்ந்த பொற்காலத்தின் நினைவாக மாவேலி மன்னனை வரவேற்கும் ஓணம் திருநாள், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் ஆகிய உயரிய பண்புகளை நமக்கு நினைவூட்டுகிறது. ஓணம் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல; தலைமுறைகளைக் கடந்து வாழும் ஒரு மக்களின் பண்பாட்டு அடையாளம்.மேற்குத் தொடர்ச்சி மலையின் இருபுறமும் வாழும் தமிழர்களும் மலையாளிகளும் நிலத்தாலும், நீராலும், மொழிகளாலும், பண்பாட்டாலும், வரலாற்றாலும் நெடுங்காலமாக உறவாடி வாழ்ந்து வருகிறோம்.
எல்லைகள் நம்மைப் பிரித்தாலும், மனித உறவும் மண்ணின் பாசமும் நம்மை எப்போதும் இணைத்தே வைத்திருக்கின்றன. இயற்கையைப் போற்றி, உழைப்பை மதித்து, சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ஓணம் திருநாளின் உயரிய செய்தி உலகெங்கும் பரவட்டும்!மலையாள உறவுகளின் இல்லங்களிலெல்லாம் மகிழ்ச்சி மலரட்டும்!
அன்பும் அமைதியும் நிறையட்டும்!
செழிப்பும் வளமும் பெருகட்டும்!
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
ஓணம் நல்வாழ்த்துகள்!
200 ற்கு மேற்பட்ட பொதுநல வழக்குகளை மக்களின் நலனிற்காக தொடர்ந்த நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அண்ணன் தீரன் திருமுருகன் அவர்கள் 💯💪👍
#Article14#Article16#நாம்தமிழர்கட்சி
மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாகப் படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப்போற்றும் வகையில் அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
தென்கொரிய நாட்டின் சியோல் நகரில் பன்னாட்டு அளவிலான இளையோருக்கான டேக்வாண்டோ போட்டியில் கோவை மாணவர்கள் 5 வெண்கல பதக்கம் வென்ற செய்தியறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
அன்பு பிள்ளைகள் ஐவரும் மேலும் பல பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
திமுக அதிமுகவுக்கு கேள்விக்கு பதில் தான் தெரியாது!
தவெகவுக்கு கேள்வியே தெரியாது!
- எங்கள் தேசம் வலைக்காட்சி நேர்காணலில் இடும்பாவனம் கார்த்திக் பேட்டி
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!
ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக் கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி!
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் பழகிய பண்பாளர்!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களுடைய 74வது பிறந்தநாளில், அவருடைய நற்செயல்பாடுகளை போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கல்வி, மருத்துவம் இரண்டிலும் ஏழை - எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்திலும், பணம் செலுத்த முடியாதவர்களின் நிலை அறிந்து இலவசமாகவும் சேவையாற்றி வரும் ஐயாவின் அறப்பணிகள் மிகுந்த போற்றுதற்குரியது.
கல்வி வள்ளல், பெருந்தமிழர் ஐயா பாரிவேந்தர் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் உடல் நலத்தோடும், உள்ள நிறைவோடும் வாழ்ந்து தமிழ்ப்பேரினத்திற்கு அருந்தொண்டு ஆற்றிட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
@PaarivendharTR