சென்னை திருவான்மியூரில் உள்ள அல் மதரஸத்துன் நூரிய்யா 11-ம் ஆண்டு விழா மற்றும் ஹாபிழ் பட்டமளிப்பு விழாவில், முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான கே.நவாஸ் கனி அவர்களுடன் பங்கேற்று சிறப்பித்தோம்.
நேற்று 05/02/2026 புதன் கிழமை மாலை வட சென்னை முஸ்லிம் யூத் லீக் சார்பில் மின்ட் மார்டனில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்களுடன் பங்கேற்றோம்.
சரித்திர பிரசித்தி பெற்ற லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 163 ஆம் ஆண்டு மற்றும் 82 வது பட்டமளிப்பு விழா ஜாமிஆவின் தாருல் தஃப்ஸீர் கலைக்கூடத்தில் ஜாமிஆவின் தலைவர் முஹம்மது சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://t.co/ziHYZktCw6
தமிழ்நாடு அரசியல் கவனத்தை மட்டுமின்றி இந்திய அளவிளான அரசியல் கவனத்தை ஈர்த்து , ஜனவரி 28-ம் நாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்பகோணம் நகரில் நடைபெற உள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு முன்னேற்பாடு மற்றும் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்க
திமுக உயர் நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர் "வேங்கையின் மைந்தர்" மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கு,கும்பகோணத்தில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தோம்.
சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாஅத் சார்பில் சிதம்பரம் பைசல் மஹாலில் நடைபெற்ற நாகூர் இ.எம்.ஹனீஃபா நூற்றாண்டு விழா மற்றும் சமூக நல்லிணக்க கருத்தரங்கம் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினேன்.
#வெளியீடு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டிற்காக கடலூர் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட உள்ள வால் போஸ்டரை சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு அழைப்பிதழ்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு அழைப்பிதழ்.
மஹல்லா ஜமாஅத்துகளின் மாண்புகளை காக்க சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுக்க அணி திரள்வோம் கும்பகோணம் நோக்கி...
ஜனவரி 28 கும்பகோணத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் லால்பேட்டையிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க லால்பேட்டை நகர அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.