ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்ப���ய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.
இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு ���ேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவே��ை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்���ப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020@kuratpdk
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
புகாரளித்த பாலகிருஷ்ண���ை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது?
பாலகிருஷ்ணனின் ��டலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முறையாக விசாரித்து, இந்��� மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்���ெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எ��்போது காப்பாற்றுவார்?
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்ட��!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்த��� நிற்கிறார்கள்.
போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்��தற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.
அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!
#TVKFails #PriceRise #LawAndOrder
@sekartweets@TVKVijayHQ Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின�� முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் ��ால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வ��ட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காகப் பொய்வழக்குகள் மூலம் அரசியல் பழிவாங்கலா? பாஜகவின் B-Team போலச் செயல்படும் விஜய் அரசின��� இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது!
We stand with @Anbil_Mahesh
We strongly condemn the arrest of former minister Anbil Mahesh Poyyamozhi! Is this political vendetta through false cases for opposing the National Education Policy? The Vijay government’s alleged political vendetta is unacceptable!
@CMOTamilnadu
#dmk #tvkfails #tvkvijay
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இரு���்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்ப��்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாட��� இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
மு��மைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கே��ியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண��டும்.
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் ���ோகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிட���் கேளுங்கள்!
#PriceRise #Inflation
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் த���்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு