தழல் நடத்தும் தோழர்.பகத்சிங் நினைவுநாள் நிகழ்வு!
#கேளாச்சேவிகள்கேட்கட்டும்#பகத்சிங்#BhagatSingh#openmic#Thazhal#InquilabZindabad#தழல்
✍️தோழர். Lingam Deva @lingamdeva123
அவர்களின் பதிவு
"மனிதகுலத்தை நேசிப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எந்தவொரு தனிநபருக்கும் எதிரான பழிதீர்க்கும் எண்ணங்களையெல்லாம் தாண்டி மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு நாங்கள் புனிதமானதாகக் கருதுகின்றோம்."
நாடாளுமன்றத்தில் ஆட்கள் இல்லாத இடத்தில் குண்டுகளை வீசி, தாமாகவே முன்வந்து சரணடைந்த பின்னர் அமர்வு நீதிமன்றத்தில் தோழர் பகத்சிங் மற்றும் படுகேஷ்வர் தத் ஆகியோரால் எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் இவை.
தம்முடைய செயல் சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பத்தில் தெளிவான பார்வை கொண்டிருந்த அவர்கள், எந்த நோக்கத்திற்காக அதனைச் செய்கிறோம் என்பதையும் நன்கு உணர்ந்தவர்களாகவே இருந்தனர். அதனால்தான் ஆட்கள் இல்லாத இடத்தில் - யாருக்கும் பெரிதாக காயம் கூட ஏற்படாத வகையில் குண்டுகளை வீசினர்.
இத்தகையதொரு தெளிவான இலக்கும் தத்துவார்த்த தெளிவும் அசராத மன உறுதியும் கொண்ட - தனது இளமையையும் எதிர் காலத்தையும் புரட்சிக்காகப் பலியிடத் தயங்காத - ஓர் இளைஞன், வெறுமனே சாகச வாதியாக மட்டுமே இதுவரை அடையாளப் படுத்தப்பட்டு இருப்பது எத்தனை பெரிய அவலம்?
நம் தோழனை நாம் அறிந்து விடக்கூடாது என்று திட்டமிட்டே அது போன்றதொரு கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டு இருக்கும் என்று நாம் ஏன் ஐயுறக் கூடாது?
பகத்சிங்கை பகத்சிங்காக - சக தோழனாக - அறிய தோழர் த. சிவக்குமார் அவர்களின் பெரு உழைப்பில் உருவான "கேளாத செவிகள் கேட்கட்டும்" - தொகுப்பு நமக்குப் பெரிதும் துணைபுரியும்.
பகத்சிங் இன் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பாக இது விளங்குகிறது.
பகத்சிங்கை தெரிந்து கொள்ளவும், பகத்சிங்கிடம் இருந்து தெரிந்து கொள்ளவுமாக இந்த புத்தகத்தை நாம் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகையால், அதன் தேவையும் முக்கியத்துவமும் உணர்ந்து, தழல் நடத்தும் "கேளாச் செவிகள் கேட்கட்டும் - பகத்சிங் மாற்றும் தோழர்கள் நினைவு தின open mic" நிகழ்வையொட்டி மார்ச் 20 முதல் 23 ஆம் தேதி வரையில் 30% தள்ளுபடியில் அப்புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.
380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் புத்தகம் - 30 சதவீத கழிவு + கூரியர் தொகை சேர்த்து 316 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
தேவைப்படும் தோழர்கள் கீழுள்ள எண்களை வாட்சப் வாயிலாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
செல் : 7639216686, 7708784694
பகத்சிங் எனும் பேராயுதத்தைக் கையில் ஏந்துவோம்.
கேட்க மறுக்கும் காதுகளுக்கு உரத்த சத்தம் தேவை .
இன்குலாப் ஜிந்தாபாத் !
நிகழ்வு :
22 மார்ச் (ஞாயிற்றுக்கிழமை)
UCPI அரங்கம்(அண்ணா அறிவாலயம் எதிரில், தேனாம்பேட்டை.
அறிவுஜீவி என சொல்லிக்கொள்ளும் @ikamalhaasan தனது படங்களில் “நாயுடு, முதலியார், தேவர், செட்டியார், பிள்ளைவாள் அய்யர்வாள்,அய்யங்கார்” என்று சர்வசாதாரணமாக வசனம் பேசி ஆதிக்க சாதிகளை குளிர்விப்பார் அந்த வரிசையில் இந்த புத்திசாலி பிழைப்புவாதிகளும் @rparthiepan
#NotebookLM#Comrade#தழல்#Thazhal#AI
✍️தோழர். Lingam Deva @lingamdeva123 அவர்களின் பதிவிலிருந்து...
தோழர்களுக்கு வணக்கம்.
நாம் திட்டமிட்டபடியே கடந்த சனிக்கிழமை (28 பிப்ரவரி அன்று) NotebookLM குறித்த இணையவழி அமர்வு நடைபெற்றது.
பல்வேறு ஊர்களில் இருந்தும், வேறுபட்ட அமைப்புகளில் இருந்தும் கம்யூனிச அரசியலை மையமாக வைத்து தோழர்கள் கலந்து கொண்டது நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கியது.
நிகழ்வு முடிந்த அடுத்த நாள் முதலாகவே தோழர்கள் notebooklm-ஐ பயன்படுத்தி அரசியல் பதிவுகளை இடத் துவங்கியதும் அப்பதிவுகள் அவற்றிற்கான தாக்கத்தைச் செலுத்துவதும் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிற்க.
அன்று நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னரும், நிகழ்வின் போதும், நிகழ்வுக்கு பின்னரும் கூட தோழர்கள் பலரும் நிகழ்வை பதிவு செய்து அதன் recording ஐ அனுப்பும்படி கேட்டிருந்தனர்.
நிகழ்வும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதில் பேசிய சத்தம் எதுவும் பதிவாகவில்லை. எனவே, மீண்டும் ஒருமுறை நிகழ்வில் பேசிய விவரங்கள் அனைத்தையும் பேசி சரியான முறையில் ரெக்கார்ட் செய்து எடுத்திருக்கிறோம்.
இந்த குழப்பங்களினால் ஏற்பட்ட கால தாமதத்திற்கு வருந்துகிறோம். அதே சமயம், தற்போது மேம்பட்ட முறையில் உரிய உதாரணங்களோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் காணொளி முன்னதை விட மேலும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
காணொளியின் இணைப்பை பகிர்கிறோம். தோழர்கள் அவரவர் வட்டத்தில் தேவைப்படும் தோழர்களுக்கு பகிர்ந்து உதவவும்.
கருத்துகளும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.
நன்றி !
தழல்
இணைப்பு : https://t.co/RrrkXtch2w
Where is நடிப்பில் மகேஷ் ?
Where is இளம் பெரியார் ?
Where is நானும் டெல்டாக்காரன் ?
Busy in conducting fake PR events and setup shootings ?
#DMKFailsTN#StalimScamsTN
தமிழ் நாட்டில் சாதி சங்கம் தொடங்கலாம்
ஆனால் தொழிற்சங்கம் தொடங்க முடியாது..
ஏனெனில் இது திராவிட மாடல்.
சாதி சங்கத்தில் கலந்துக்கொண்டு திராவிட மாடல் அமைச்சர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள்
ஆனால் தொழிற்சங்கம் ஆரம்பித்தால் போலீசை ஏவி மிதிப்பார்கள்..
ஏனெனில் இது திராவிட மாடல்..
மேட்ரிமோனி மூலம் பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி 3 வருடங்கள் குடும்பம் நடத்தி, அடித்துதைக்கும் கொடுமைப்படுத்தும் காவலர் ராஜா. 100க்கு கால் பண்ணி பெற்ற புகாரை கட்டப்பஞ்சாயத்து செய்து, அடுத்த முறை அடித்தால் புகார் கொடு எனச் சொல்லும் MGR நகர் SI முனுசாமி 🤦
@CMOTamilnadu@ArunIPSCOP
இன்று சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சின்ன Purchaseகாக போயிருந்தேன். அங்கே துணி எடுத்துகொண்டிருந்த போது கவனித்தேன் வேலை செய்யும் ஒரு ஊழியருக்கு கூட chair (Except Bill counter ஆனால் அங்கேயும் நின்றபடி) போடாமல் நின்ற நிலையில் வேலை செய்தார்கள். ஒரு அக்காவிடம் வேலை நேரம் கேட்டேன் (1)
🇮🇱 🇵🇸 🔊பள்ளியில் பாலஸ்தீன குழந்தைகள் விளையாடும் போது இஸ்ரேல் அரசு நிகழ்த்திய கொடூரமான தாக்குதல்!
◾️போரின் காரணமாக கான் யூனிஸ் என்ற இடத்தில் ஐநா வின் பள்ளியில் தஞ்சம் அடைந்துள்ள பாலஸ்தீனியர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது இஸ்ரேல் அரசு திடீர் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 29 பேர் இறந்துள்ளனர்.
◾️இஸ்ரேல் நான்கு நாட்களில் நான்காவது பள்ளியில் தாக்குதல் நடத்தியுள்ளது.
◾️கடந்த சில மணிநேரங்களில் மொத்த இறப்பு எண்ணிக்கை குறைந்தது 60 ஆக உயர்ந்துள்ளது.
◾️UNRWAவின் கூற்றுப்படி, அக்டோபர் 7 ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து காசாவில் அது நடத்தும் பள்ளிகள் மற்றும் பிற தங்குமிடங்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
#Palestine #ısrael #GazaGenocide
பாலஸ்தீன குழந்தைகளை கொலை செய்த #MadeinIndia ஆயுதங்கள்.
நேற்று காசா பள்ளியில் 14 குழந்தைகள் உட்பட 40 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்தது.
அங்கு கிடந்த ஆயுத கழிவுகளில் #MadeinIndia என பொறிக்கப்பட்டுள்ள காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
#Palestinian #PalestinianLivesMatter #Gaza #Gaza_in_Genocide #IsraelisATerorrist #IsraeliNazis #israel #india
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தலித் சமூக இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கோபி செட்டிபாளையத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்...
@CMOTamilnadu@Kayalvizhi_N
#Erode #Dalit #GobiChettipalayam #attack #TamilNadu #dmk #caste