Just because it feels difficult doesn't mean you're on the wrong path. Some of the most important chapters of your life will require you to keep going before you see why.
இங்கு இது என்ன என்கின்றானே…!
புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில் திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன இறப்பற்றினேன் இங்கி தென்னென்கின்றானே.
விளக்கம்:-
என் உள்ளத்தின் எண்ண ஓட்டம் வெளியே செல்வதும் பின்னர் மீண்டும் திருப்புவதும் ஆக இருந்தது. அது அவ்வண்ணம் செய்யாமல் தடுத்து நிறுத்தினேன். என் உள்ளத்தைச் செம்மையாக்கிச் சிவன் மீது செலுத்தினேன். அவனை “என் தலைவா!” என்று அழைத்தேன். என் உயிர் அறிவு கெட்டு ஒழியும்படி அவன் வெளிப்பட்டான். “இங்கு இது என்ன?” என்று என்னைக் கேட்டான்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏