@chennaicorp@imrajmohan The issue is still not addressed. This morning, another person fell near the damaged pole. Kindly take immediate necessary action to prevent any further accidents.
@CMOTamilnadu
@chennaicorp@imrajmohan
Please check the road condition on both sides. Yesterday, an elderly man fell due to the damaged road. Kindly take necessary action to prevent further accidents and inconvenience to the public.
Santhosam salai Chetpet chennai 600031
TB hospital next st
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரச���ன் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்து���ிறேன்.
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வார��யான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண��ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத���தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
The lady said that for 40 years she had been requesting the closure of the TASMAC shop near the school, but it was never considered. Today, it has finally happened because of our Thalapathi CM @CMOTamilnadu. @TVKPartyHQ
Please note — this is the real report card from the public.
முதல்வரின் இன்னொரு சூப்பர் சிக்சர்!
இந்த அரசில் பெண்கள் பாதுகாப்புக்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் வழங்கப்படுவது இதன் மூலம் உண்மையிலேயே நிரூபிக்கப்படுகிறது.
Thank you Honorable CM @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay