கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்ற��் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சன���களுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இரு��்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ