வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நல்லம்பள்ளி வடமேற்கு ஒன்றியம், திப்பட்டி, கோரப்பள்ளிபுதூர், ஒசள்ளிபுதூர், பூச்செட்டிஅள்ளி, ஆண்டியூர், மூக்கனஅள்ளி, பேடரஅள்ளி, சோளபாடி சிறுகலூர், மல்லாபுரம், குப்புசெட்டிபட்டி மற்றும் நடப்பனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில், மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!
#Dharmapuri #PMK
மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து 18 ஹார்டு
டிஸ்குகளில் தரவுகள் திருட்டு: ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா? விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கணினிகளில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 18 ஹார்டி டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுத்துறை அலுவலகத்திலிருந்து மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டிருப்பதும், அதற்கு சாதகமான சூழல் நீண்டகாலமாக உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.
திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பதால், மின்சார வாரியத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நடந்த சதியாக இருக்கக்கூடும் என்று ஐயங்கள் எழுந்துள்ளன.
மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக கூறப்படும் போதிலும், இதுவரை 8 ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 18-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள் காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 அரசு அலுவலகங்களை பட்டியலிட்டால் அதில் மின்சார வாரியத் தலைமை அலுவலகமும் கண்டிப்பாக இடம் பெறும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகவே கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும், தரகர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் அதிக ஊழல் நடைபெறும் துறைகளில் மின் துறை மிகவும் முக்கியமானது. அதனால் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் இவ்வாறு செய்யப்பட்டதா? ஐந்தாண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
@CMOTamilnadu
திருச்சியில் சிறுமி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: குற்றச் செயல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
திருச்சி காந்தி சந்தை பகுதியில் 15 வயது சிறுமி மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது.
சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் மாரியப்பன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அச்சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற அவல நிலை நிலவுகிறது. அதனால் தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. அதன் பிறகும் அதே நிலை தொடரக் கூடாது. பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்த சிங்கப்பெண் சிறப்புப் படை உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl
தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் வாழ்விலும் கோடை முடிந்து வசந்தம் பிறக்கட்டும்; கல்வி சிறக்கட்டும்!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து அரசு பள்ளிகளும் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. விடுமுறையை முடித்து கல்வி பயிலும் ஆர்வத்துடனும், ஆசிரியர்களையும், நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சியுடனும் மீண்டும் பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி மட்டும் தான். அந்த செல்வம் ஊற்றெடுக்கும் மணற்கேணி பள்ளிகள் தான். கல்விக் கோயில்களுக்கு, கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்களின் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கட்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் கிடைக்கட்டும்; அதன் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்கட்டும்; தமிழகத்தில் கல்வி சிறக்கட்டும்!
செங்கல்பட்டு மத்திய மாவட்டம், காட்டாங்குளத்தூர் பாமக கிழக்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் காயரம்பேடு சண்முகம் நாயக்கர் - தேவகி தம்பதியரின் மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட மாணவர் சங்க செயலாளருமான ச.அஜித்குமார் மற்றும் மோ.கோவிந்தராஜ் நாயக்கர் - பத்மா தம்பதியரின் மகள் கோ.கலைச்செல்வி இணையரின் திருமண வரவேற்பு விழா, கூடுவாஞ்சேரியில் பங்கேற்று வாழ்த்திய போது.!
இன்று, எங்களது சொந்த கிராமமான, விழுப்புரம் மாவட்டம், கீழ்சிவிரி திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற திரௌபதி - அர்ஜுனன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் கிராமத்து பொதுமக்களுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்த போது.!
ஆஷா எனும் அற்புத சாதனை!
நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம் கொண்டாடும் போது, அது சார்ந்த மலரும் நினைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றிய போது இந்தியாவில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் அறிமுகப்படுத்திய ஆஷா(Accredited Social Health Activist - ASHA) திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் ஆஷா என்ற மராத்திய திரைப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்த்த போது எனக்கு அதே உணர்வு தான் ஏற்பட்டது.
ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் ஆகும். இது 2005&ஆம் ஆண்டில் நான் அறிமுகப்படுத்திய உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பெண் பணியாளர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும் என்பது தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் அடிப்படை விதி ஆகும். இந்த விதியை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்கள் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியா முழுவதும் 10 லட்சம் ஆஷாக்கள் பணியாற்றி வருகின்றனர்.
கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஐயங்களையும், அச்சத்தையும் போக்க வேண்டுமா? அவர்களுக்கு நுண்ணூட்டச் சத்து மற்றும் துப்புரவு தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டுமா? கருவுற்ற பெண்களை குறித்த காலத்தில் மருத்துமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா? பிறந்த குழந்தைகளின் உடல் நலத்தைக் காக்க வேண்டுமா? குறித்த காலத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதை உறுதி செய்ய வேண்டுமா? அனைத்தையும் ஆஷாக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அவர்களின் துடிப்பான பணிகளால் தான் இன்று 100% பிரசவங்களும் மருத்துமனைகளில் நடைபெறுகின்றன; தாய்மார்கள் இறப்பு விகிதம் 60 விழுக்காடும், குழந்தைகள் இறப்பு விகிதம் 80 விழுக்காடும் குறைந்துள்ளன. ஆஷா பணியாளர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு உலக சுகாதார தலைவர்கள் விருதை உலக சுகாதார நிறுவனம் வழங்கிப் பாராட்டியிருக்கிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க ஆஷா திட்டத்தை கதைக்களமாக வைத்து ஆஷா திரைப்படத்தை தயாரித்த அதன் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அமைந்துள்ள, பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆசான்களில் ஒருவரான, சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.!
இன்று, எங்கள் குலதெய்வமான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூர் அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த போது.!
ரூ.8,000 நடவுச் செலவுக்கு கூட போதாது: மழையில் சேதமடைந்த நெற்பயிருக்கு
ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு தேவை!
காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. மழையில் சேதமடைந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களை இதுவரை வளர்த்தெடுப்பதற்காகவே ஒவ்வொரு உழவரும் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்திருக்கும் நிலையில் தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் போதுமானதல்ல.
டித்வா புயல் காரணமாக பெய்த மழையில் சிக்கி காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதாகவும், அவற்றுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் 2.11 லட்சம் ஏக்கர் பயிர்கள் மட்டுமே மழை நீரில் மூழ்கியிருப்பதாகவும், அவற்றில் பாதிப்பின் அளவு கணக்கிடப்பட்டு ஏக்கருக்கு ரூ.8,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், அதற்கான இழப்பீடு இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இப்போதும் 2.11 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கியிருந்தாலும், பாதிப்பின் அளவு கணக்கிடப்பட்டு தான் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, இந்த முறையும் இழப்பீடு வழங்காமல் உழவர்களை திமுக அரசு ஏமாற்றி விடுமோ? என்ற ஐயம் எழுகிறது. அவ்வாறு செய்தால் அது மன்னிக்க முடியாத துரோகமாக இருக்கும்.
சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு சேதம் உறுதி செய்யப்பட்டாலும் கூட, ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டும் தான் இழப்பீடாக வழங்க முடியும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சம்பா, தாளடி பயிர்களுக்கான விதை நெல் வாங்கி, நாற்று வளர்த்து, அதை பிடுங்கி நடவு செய்வதற்கே ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், அதை விட குறைவான இழப்பீடு வழங்குவது அநீதியானது ஆகும்.
காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களுக்கான சாகுபடி செலவு ரூ.40 ஆயிரம் ஆகும். இதுவரை ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகியிருக்கிறது. இன்னும் 30 முதல் 40 நாள்களில் இந்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டால் ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
நெய்வேலியில் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை சில ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி நிறுவனம் அழித்த போது, அதற்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதையே அடிப்படையாக வைத்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
@CMOTamilnadu
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில், அரசு கொள்முதல் செய்து, தற்காலிக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்ட 1,80,000 நெல்மூட்டைகளை ஆய்வு செய்த போது!
நாற்றங்கால் விட்டு 15 நாட்கள் ஆனது போல, நெல்மூட்டைகளில் இருந்து நெல்மணிகள் முளைத்து வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விவசாயிகளின் கடுமையான உழைப்பில் விளைவிக்கப்பட்ட நெல், அரசின் அலட்சியத்தால் முளைத்துவிட்டது. இதனை தவிர்க்கும் விதமாக உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Congratulations Cricket team of India. Chasing the highest score ever in Women’s cricket and winning it for all the girls in the country. You have inspired us all and made everyone proud and happy. Best wishes for the finals.! #CWC25