அந்த இன்ஸ்டா ரீல்ஸ் ஃபேமிலி சீரழிந்த வீடியோ மனசை ரொம்ப ரணமாக்குகிறது நானும் எவ்வளவோ முயன்று தான் பார்க்கிறேன் அந்த சின்ன பையனின் வார்த்தைகள் என்னை சூழ்ந்து ஒலித்து கொண்டே இருக்கிறது....
பணத்தேவையும் பகட்டான வாழ்க்கைக்கான ஆசையும் தான் அதில் அவ்வளவையும் பண்ணி இருக்கு
இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது ன்னே தெரியல...
பாரு��்க.... ரொம்ப சாதாரண விஷயத்துக்கு கூட விட்டு தர மனமில்லாமல் டைவர்ஸ் பண்றது...
கணவன் மனைவி, குழந்தைகள் ன்னு ஒரு அழகான வாழ்க்கை இருக்கும் போதே இன்னொரு உறவ தேடுறது இதெல்லாம் எப்படி சரியாகும்...
கணவன் மனைவிக்குள் தவறான புரிதல்கள் வந்தால், தயவு செய்து பேசி தீர்த்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. அது முடியவில்லை என்றால் சட்டப்படி பிரிந்து விடுங்கள். உங்கள் குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள���.. அவர்களின் வாழ்க்கையை ஏன் சீரழிக்க நினைக்கிறீர்கள்...
ஒருவருக்கு வேறு உறவு மீது பிடித்தல் இருந்தால், அதை மறைத்து வாழ்வதை விட சட்டப்படி ஏற்கனவே இருக்கும் உறவிலிருந்து விலகி விடுவதுதான் நல்லது... இல்லையெனில் அதிகமாக பாதிக்கப்படுவது உங்கள் குழந்தைகள்தான்.. இது ஏன் பலருக்கும் புரியவில்லை என்று தெரியவில்லை...
அதே மாதிரி கல்யாணம் ஆன பிறகு பெண்கள் கூட பழகற ஆண்களும் ஆண்கள் கூட பழகற பெண்களும் சில தனிமனித நெறிமுறைகளோட இருக்க வேண்டும்...
அப்படி அதில் கல்யாணத்தை மீறிய உறவு வருதுன்னா டைவர்ஸ் வாங்கிட்டு என்ன வேணா பண்ணிட்டு போங்க....
இல்லை.... இதெல்லாம் தான் கெத்து, வாழ்க்கையில எங்க எஞ்சய்மெண்ட் தான் பெரிசுன்னா தயவுசெய்து குழந்தை பெத்துக்காதீங்க...
சமீப காலமாக சில மனநிலை பிறழ்வு கொண்ட மனிதர்கள் இந்த மாதிரி விஷயங்களை ரொம்ப என்கரேஜ் பண்ணிட்டு இ��ுக்காங்க...
இதையெல்லாம் தயவு செஞ்சு நார்மலைஸ் பண்ணாதீங்க...
நீங்க பண்ற எல்லாத்துக்கும் கடைசில பாதிக்கபடுறது ஒரு தப்பும் பண்ணாத குழந்தைங்க தான்..
அந்த_சின்ன_பையனை_எங்க_கிட்டயாவது_தந்து_விட்டு_போய்_இருக்கலாம் 😥