#JustNow || ''காவிரி விவகாரம்.." - கர்நாடகத்தில் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளது.. ஆனால் இங்கு தமிழக கட்சிகள் அரசியல் செய்கிறது..!! காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் - அமைச்சர் நிர்மல் குமார்
#Madurai | #TVK | #Minister | #CTRNirmalkumar | #PolimerNews | #KaveriWaterIssue | #SupremeCourt
“காவேரி விவகாரத்துல வருகிற திங்கள்கிழமை, நாளை மறுநாள் தமிழக அரசு சார்பாக முதல்வரின் உத்தரவின் பேரில், முதல்வர் கொடுத்த அறிவுரையின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.” - இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் @CTR_Nirmalkumar
மின்கட்டணம் குறித்து பல தரப்பினர் சந்தேகம் எழுப்பியதை அடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று முதல் சிறப்பு மின்னளவி மறுஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. இதுவரை 15323 மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 100 மின் இணைப்புகளில், அதாவது 0.65% மட்டுமே, வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த மின்கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படும். இந்தப் பணி சுமார் 3,70,000 இணைப்புகளுக்கு செய்யப்பட உள்ளது. இதனால் மின் நுகர்வோர்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS
#TNPDCL #TNEB #TANGEDCO #TamilNadu #PowerSupply
"அய்யா எங்களுக்கு பட்டா கொடுங்கைய்யா... 60 வருஷமா அங்கதான் இருக்குறோம்... பல வருஷமா கோரிக்கை வைக்கிறோம், முதலமைச்சர் விஜய் ஆட்சியில எப்படியாவது எங்களுக்கு நல்லது பண்ணி கொடுங்கைய்யா" அமைச்சர் ஆனந்திடம் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த மக்கள்.. அமைதியாக கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக மனுக்களை வாங்கிக்கொண்டு கைகளை குலுக்கி உற்சாகப்படுத்திய அமைச்சர்
#Chennai | #NAnand | #Minister | #People | #PolimerNews
”மதகை திறந்தவுடன் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்த தண்ணீர்”.. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறப்பு..!
#Karnataka | #KabiniDam | #Water | #PolimerNews
கபினியில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறப்பு.. கபினி அணைக்கு வினாடிக்கு 15,675 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது
#Karnataka | #Dam | #Water | #PolimerNews
“எந்த ஆதாரமும் இல்லை''
கொளத்தூர் தொகுதியில் EVM இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் அதிகாரி சமீரன் விளக்கம்.
“திமுகவின் புகார்களுக்கு உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது.வேட்பாளர்கள் வாரியாக பதிவான வாக்குகள் சரிபார்க்கப்பட்டது. EVM, விவிபேட் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. EVM இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதரமும் இல்லை''
- தேர்தல் அதிகாரி சமீரன்
#kollathur #evm #dmk #ThanthiTV
மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக இரண்டு இடங்களை நேரில் ஆய்வு செய்தேன்.
1. பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியின் அபாய நிலை
2. மக்கள் அடர்த்தி மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, மிகவும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது எனது முதன்மை பொறுப்பு. அதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய தீயணைப்பு நிலையம் விரைவில் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை வெறும் வார்த்தைகளாக அல்லாமல், செயலாக்கமாக மாற்றுவதே எங்கள் அரசின் நோக்கம். மக்கள் நலனும், பாதுகாப்பும் எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும்.
விவசாயிகள் நலன்களுக்காகவும்
கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?
அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.
ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.
எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
எனவே, காவிரிப் பிரச்சனையில் திரு. ஸ்டாலின் அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை.
இன்று (01.08.2026) திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற 19வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
பட்டம் என்பது கல்விப் பயணத்தின் நிறைவு மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வுடன் புதிய பயணத்தைத் தொடங்கும் முக்கியமான மைல்கல்லும் ஆகும். இன்று பட்டம் பெற்ற ஒவ்வொரு மாணவியும் தங்களது திறமை, உழைப்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் உயரங்களை அடைய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடனும், பொறுப்புடனும் எதிர்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்க அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
"Firstly, it was a historic revolution that has taken place now. For me, my sister, or everyone related to my family, there is an extra level of responsibility and legacy, and we also need to safeguard [it]. We need to be cautious and careful." - @official_jsj
இன்று (01.08.2026) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பனிமய மாதா பேராலயத்திற்கு சென்று வழிபாடு செய்தேன்.
தமிழ்நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலைத்திருக்கவும், நமது மக்களின் வாழ்வில் நலனும் வளமும் பெருகவும் இறைவனிடம் மனமார பிரார்த்தனை செய்தேன். மத நல்லிணக்கமும், மனிதநேயமும் நம் சமூகத்தின் மிகப்பெரிய பலமாகும். அந்த உயர்ந்த மதிப்புகளை என்றும் போற்றியும் பாதுகாத்தும் செயல்படுவோம்.
அனைவரின் வாழ்விலும் அன்னையின் அருளும், இறைவனின் ஆசீர்வாதமும் என்றும் துணைநிற்கட்டும்.