மேடம் @Keerthana4VNR எப்போதும் பெண் என்பதால் என்னை ட்ரோல் பண்ணுறாங்கனு ஒப்பாரி வைப்பீங்களே மாவட்ட ஆட்சியருக்காக பேசி ஏதாவது கண்டன பதிவு போடுவீங்களா? TVK பெண்ணியவாதிகள் எல்லோரும் அமைதியா இருக்கீங்க ஏன்....
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் நிலவி வரும்நிலையில், தற்போது வட மாநிலங்களை போல துப்பாக்கி கலாச்சாரமும் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது.
குற்றங்கள் நடக்கும் போதெல்லாம், "உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறோம்", "கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று வெறும் பெயரளவு செய்திகளை மட்டும் ஊடகங்களில் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்?
வெறும் விளம்பர அறிக்கைகளாலும், கேமராக்களுக்கு முன்னால் நடத்தும் போலி ஆய்வுகளாலும் ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை ஒருபோதும் சரிசெய்து விட முடியாது.
காவல்துறையை தன் கையில் வைத்துள்ள பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சர் @actorvijay நிர்வாகத் திறமையின்றி தூங்கிக் கொண்டிருக்கிறாரா?
எனவே இனிமேலும் விளம்பர பாணியில் வெற்று நாடகங்களை நடத்தாமல், தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கும் சட்டம்-ஒழுங்கை உடனடியாக சரிசெய்யவும், துப்பாக்கி கலாச்சாரத்தை ஆரம்ப நிலையிலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் தேவையான தக்க நடவடிக்கைகளை பொய்க்கால் குதிரை தவெக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர்.
அந்த ஆட்சியர் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! கேவலம் @CMOTamilNadu !!
ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் , அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார் , அவருக்கே நீதி இல்லை என்றால் ,
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? @cmotamilnadu
பதில் என்று எதாவது உங்களிடம் இருந்து முதலில் வருமா?
“உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்” என்று மிரட்டும் அமைச்சர்,
மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி “ஆபாச அர்ச்சனை” செய்து அதை மறைக்க முயலும்
துணை சபாநாயகர்,
எல்லாவற்றிற்கும் மேலாக
“ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்”
அனுப்பிய MLA
என்று தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
தங்கள் கட்சியினர் தவறு செய்தால்
வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு , மற்ற கட்சியினர் செய்திருந்தால் இன்று அனைத்து மைக்குகள் முன்னரும் so called spokespersons எவ்வளவு பேசியிருப்பர்??
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, MLA மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா?
வாக்களித்த மக்களின் பாதுகாப்பை விட, முதலமைச்சர் நாற்காலி தான் திரு. ஜோசப் விஜய்க்கு முக்கியமென்று கருதுகிறாரா?
பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் தவெக MLA விஜய் சரவணன் மீது வழக்கே பதியாமல், அவருக்கு சட்டமன்றத்திலேயே “Good Conduct Certificate” அளித்து வழக்கை இழுத்து மூடியது அதே Formula-வை அருள் விக்னேஷுக்கும் பயன்படுத்தப் போகிறதா இந்த அரசு?
ஒரு ஆட்சியாளராக மாவட்ட ஆட்சியருக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக வழக்கு பதிந்து தன் கட்சி MLA-வை கைது செய்ய வேண்டும் நேர்மையான, அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
செய்வீர்களா @CMOTamilNadu ?
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 படுகொலைகள் நடந்த செய்தி பொதுமக்களின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இந்த சூழ்நிலையில், இதைப் பற்றி கேள்வி கேட்டால் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் கூறும் பதில் என்ன தெரியுமா?
"பண்டிகை காலங்களில் இதெல்லாம் புதிதல்ல... எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்!"
என்ன ஒரு பொறுப்பற்ற,
திமிரான பதில்!
பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று ஒரு அமைச்சரே நியாயப்படுத்தலாமா?
மக்களின் உயிரைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து நழுவி, இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லத் துடிப்பது எந்த வகையில் நியாயம்?
நாட்டின் சட்டம்-ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு அமைச்சரின் இந்த ஒரு பதிலே சான்றாக நிற்கிறது.
கொலைகள் நடப்பது உண்மை: ஆனால் அது எதிர்க்கட்சிகளின் அவதூறா?
மக்களின் பயம் உண்மை,
ஆனால் அது பண்டிகை காலத்து "சாதாரண விஷயமா"?
மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய உயரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரே,
தன்னுடைய அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க இப்படி சாக்குபோக்கு சொல்வதும், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதும் பொறுப்பற்றத்தனத்தின் உச்சம்!
பட்டிமன்ற புகழ் @imrajmohanஅமைச்சரே... பண்டிகை காலம் என்பது மக்கள் சந்தோஷமாக இருக்கத்தானே தவிர, இரத்தக் களறியைப் பார்த்து அஞ்சி நடுங்க அல்ல!
குற்றங்களைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாமல்,
தங்களது அரசின் நிர்வாக கோளாறை மறைக்க அதை நியாயப்படுத்தும் வார்த்தைகளை பேசுவது அமைச்சர் பொறுப்புக்கு அழகல்ல.
இனியாவது வெறும் வாய் வார்த்தை சாக்குபோக்குகளை எல்லாம் நிறுத்திவிட்டு, நாளுக்கு நாள் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முயற்சியாவது செய்யுங்கள்.
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ@CMOTamilnadu
" எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேணும்.. துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்கணும்.. " - நீங்க மதுபோதையில் இருந்ததா இன்ஸ்பெக்டர் சொல்றாரு.. ? துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக கூறப்படும் கார்த்திக் என்பவர் மீண்டும் பேட்டி..
#Trichy | #TVK | #MLA | #DeputySpeaker | #RaviShankar | #PolimerNews
துறையூரில் தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை கூற சென்ற கார்த்தி என்ற நபரை தாக்கியதோடு மட்டுமல்லாமல்,
விவகாரம் பூதாகரம் ஆனதும் அவரை மிரட்டி வீடியோ பதிவு செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.
குறைகளை கூற வந்தவரை தரக்குறைவாக பேசி தாக்கியது மட்டுமல்லாமல், ஆளும்கட்சி அதிகார திமிரில் இப்போது கொலை மிரட்டல் வேறு விடுத்துள்ளார் தவெக அரசின் ஆச்சரியக்குறி உறுப்பினர்.
இப்போதாவது இந்த ஆச்சரியக்குறி அரசு, துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க முன்வருமா?
இல்லை இந்த பிரச்சனையை மறைக்க வழக்கம்போல மடைமாற்று அரசியல் செய்யப் போகிறதா?
@TVKVijayHQ
#பொய்க்கால்_குதிரை_அரசு
"மிரட்டி சமாதானப் பேச்சு"
"துணை சபாநாயகரும், இன்ஸ்பெக்டரும் என்னை மிரட்டினார்கள். மிரட்டித்தான் சமாதானப் பேச்சு நடத்தினர். சமாதானம் பேசும் வீடியோவை 6 டேக் எடுத்து வெளியிட்டனர். துணை சபாநாயகர் என்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்"
- துணை சபாநாயகர் மீது கார்த்திக் மீண்டும் குற்றச்சாட்டு
#DySpeaker #ravisankar #thanthitv
துணை சபாநாயகரை சந்திக்க சென்ற நிருபர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர் !
பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ரவிசங்கர் போன்றோர் பொதுமக்களில் ஒருவரை இப்படி கண்மூடித்தனமாக தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
@CMOTamilnadu@tvkravisankar
அதிமுகவுக்கு கொள்கை என்று எதுவுமில்லை.
திமுகவுக்கு தான் கொள்கை இருக்கிறது.
- விலையில்லா உடன்பிறப்புகள்
அப்படி என்ன கொள்கை திமுக கொள்கை?
புத்தகங்களை ஜெராக்ஸ் போட்டு ஊழல் பண்றது..
அ.தி.மு.க பத்தி தெரிஞ்சிக்க...👇👇
Video courtesy: Siva Pradhapan
@EPSTamilNadu#aiadmk
உருட்டு ன்னாலும் ஒரு நியாயம் வேணாமா முஸ்தபா ப்ரோ? 😂
குதிரை பேரம்? யாரை? உங்களை? 😂😂😂😂
நல்ல Humour Sense தான் போங்க..!!
உங்களுக்கு எதாச்சும் வேண்டும் என்றால் உங்க கட்சி தலைவரிடம் Direct-ஆகவே கேளுங்களேன்… எதுக்கு இந்த வெட்டி உருட்டு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தவெக அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் முன்வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டு, அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைத்து மக்களை திசைதிருப்பும் செயல் – “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் வீழ்ச்சி” என்பது போல தவெகவின் தற்குறித் தனமான நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
தமிழக அரசியலில் முதன்முறையாகக் குதிரை பேரத்தை அறிமுகப்படுத்தி, மைனாரிட்டி ஆட்சியை நடத்தி வரும் தவெக, தற்போது குதிரை பேரம் குறித்துப் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு இணையானது.
தங்களது திறனற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைத் திசைதிருப்புவதற்காகவே இந்த குதிரைபேர நாடகத்தை பார்க்க வேண்டியுள்ளது.
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத தவெக, ‘யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, தவெக தலைவர் வருவார் பின்னே, சோபா வரும் முன்னே என ஒவ்வொரு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் சோபாவை அனுப்பி ஆதரவு கோரியதோடு, தவெகவுக்கு எதிராகப் போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை தட்டித்தூக்கி ராஜினாமா செய்யவைத்து, அதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு, தற்போது குதிரை பேரம் குறித்து ஒப்பாரி வைப்பது முரண்பாட்டின் உச்சகட்டமாகும்.
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு; மின்சாரக் கட்டணக் குளறுபடிகள்; அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்; அரசின் அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள்; அரசு நிர்வாகங்களில் ஆளுங்கட்சியினரின் தலையீடு; எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை அரசுப் பணிகளை ஒதுக்குவதற்காக லஞ்சம் கேட்பதாக எழும் புகார்கள்; பொருளாதார வீழ்ச்சி; அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்லும் தொழில் முதலீடுகள் எனத் தவெக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளால் ஒட்டுமொத்த தமிழகமும் இதுவரை இல்லாத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், நாள்தோறும் அதிகரித்து வரும் தொடர் படுகொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள், சிறைக் கைதிகள் தப்பியோடும் நிகழ்வுகள், போதைப்பொருட்களைப் பதுக்கி வைக்கும் ஆளுங்கட்சியினர் என சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும், நிர்வாகத் தோல்விகளையும் திசைதிருப்பி மக்களை ஏமாற்றும் நோக்கில், ஆட்சிக்கு எதிராகக் குதிரை பேரம் நடப்பதாகக் கூறி நீலிக்கண்ணீர் வடிக்க வெட்கமாக இல்லையா?
அடுத்தடுத்து வரவுள்ள இடைத்தேர்தல்களை நேர்மையாகச் சந்திக்கத் திராணியற்று, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு மட்டும் இப்போதே சென்று, நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் "ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்குச் ஸ்வீட் செய்வதும்", அப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளை மிரட்டி மாணவர்களை அழைத்து வந்து Road Show நடத்துவதும், கேவலத்திலும் கேவலமான அரசியலாகும்.
எனவே, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பவும் மேற்கொள்ளும் அற்பத்தனமான இதுபோன்ற முயற்சிகளைக் கைவிட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் மக்களே வெகுண்டெழுந்து இந்த மைனாரிட்டி தவெக அரசுக்கு ஜனநாயக ரீதியில் முடிவுரை எழுதுவார்கள்.
@CMOTamilnadu@TVKVijayHQ
திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டவனைப் பிடித்துக் கொடுத்த எனக்கு 21 நாட்கள் சிறையில் தரம் கெட்ட உணவு!
ஆனால் ஊழல் வழக்கில் கைதானவருக்கு வீட்டிலிருந்தே உணவு!
இது எப்டி இருக்கு!!
வாழ்க ஜனநாயகம்!!
கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது.
“வெற்றி ஆட்சி சாதனை மலரில்”
சட்டம் ஒழுங்கு சீர்கேடு,
போதைப்பொருள் கடத்தல்,
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் இதுவும் முக்கிய தலைப்பாக வைக்கலாம்.
தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறை சிறைக்கைதிகள் தப்பி ஓடும் போதும் ஒரு ஒரு செய்தி வருகிறது, “சிறைத் துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம்”, “கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிற்க வைக்கிறோம்” என்றெல்லாம்.
இன்று கூட “சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என @CMOTamilNadu செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது.
மொத்தத்தில், இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற @actorvijay நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்.
அது எப்படி கைதிகளால் , சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது?
இது போன்ற கடுங்குற்றவாளிகள் , தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது,
சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி
இந்த ஆட்சி தங்களைக் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்?
அறிக்கை மூலம் அதிகாரிகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படக்கூடாது என்று அறிவுருத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர்
திரு. ஜோசப் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியுள்ளவாறு தனது முதல்வர் பணிகளை மேற்கொள்ளப்போகிறார்?
@AIADMKOfficial