தினமும் பொய் பேசி திமுகவிடம் மூக்குடைபடுவதே தவெகவின் முழுநேரப் பிழைப்பு! உழவர்களின் நெல் சேமிப்பில் திராவிட மாடல் அரசு செய்த வரலாற்றுச் சாதனைகளின் புள்ளிவிவரம்!
தினமும் திமுக மீது வதந்திகளைப் பரப்பி வாலாட்டும் தவெகவின் வாயை அடைக்கும் புள்ளிவிவரங்கள்:
ரூ.825 கோடி மதிப்பீட்டில் மாபெரும் சாதனை: 18 மாவட்டங்களில், 54 இடங்களில், 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 383 நவீன சேமிப்புத் தளங்கள் கட்டி முடிக்கப்பட்டன!
ரூ.331 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு: 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன சேமிப்புத் தளங்கள் நேர்த்தியாகக் கட்டித் திறக்கப்பட்டன!
ரூ.494.71 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட் பணிகள்: 130 இடங்களில், 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட சேமிப்புத் தளங்களுக்கான பணிகள் முழுவீச்ச��ல் முன்னெடுக்கப்பட்டன!
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை எளிதில் விற்பனை செய்வதற்காக திமுக ஆட்சியில் 4000 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
2025 செப்டம்பர் 1 தேதி முதல் 2026 மே 9 தேதி வரை 54 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திமுக செய்த சாதனைகளை மறைத்து, மேடைக்கு மேடை உளறிக்கொட்டும் தவெகவின் போலிப் பிரச்சாரக் கூடாரத்திற்கு இந்த உண்மைகளே சாட்டையடி!
ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது க���டும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.