I'm publicly committing to the 100 Days of Code Challenge while completing Microverse's Pre-Course Work starting today! Learn More and Join me! https://t.co/IHdOZyuvMG https://t.co/W3qo2DwS21 #100DaysOfCode
The effortless gains are not surprising, as the DMK had been diligently constructing a robust economic system, onboarding new companies, and presenting numerous proposals globally. These achievements are a testament to the DMK's dedicated efforts.
#dmk#TVKVijay
அடேங்கப்பா இவறு சொல்லித்தான் எல்லா முஸ்லீமும் ஓட்டு போட்டாங்களாக்கும் நீங்க கூட்டணியில் இல்லாவிட்டாலும் இஸ்லாமிர்கள் ஓட்டு மதசார்பற்ற பாசிசத்திற்க்கு எதிராக திமுக விற்கும் அதன் கூட்டணிக்கும்தான் விழும் அது தன்னெழுச்சியா வரக்கூடியது
அமைச்சர் பதவிய வாங்கினோமா அனத்தாம போனோமானு இருங்க என்னவோ ஒரு அமைச்சர வச்சி உலக முஸ்லிம்களை காக்க போராமாதிரி பெரிய உரிமையை மீட்ட மாதிரி நினைப்பு இந்த பதவி கிடைக்கலேனா உலகமே இருண்டு போய்ருக்கும்
இப்படி ஒரு துரோகத்தை திமுக உங்களிடம் கனவிலும் நினைத்து பார்த்திருக்காது.
பகிர்வு
கழக முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு அவர்கள் அறிக்கை
மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர்.
மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் கழகத் தலைவர் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்.
மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறித் தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது - ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்.
இப்போதாவது - இதற்காகவாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்.
தங்கள் பிரச்சணைகளுக்காக மக்கள் இப்போதும், “ஸ்டாலின் ஐயா” என்று அழைப்பது,
தலைவர், தன் ஆட்சி காலத்தில், மக்கள் பிரச்சணைக்கு, நேரடியாக களத்திலே இறங்கிய களப்பணியையே பறைசாற்றுகிறது.
வாழ்க திராவிடம்.
மீண்டும் வேண்டும் திராவிடம் 2.0
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம் தான். திமுக முன்மொழியும் அரசியல் சிக்கலானது. திமுகவை ஆதரிப்பது எளிதல்ல. இடதுசாரியாகவோ, தமிழ்த்தேசியவாதியாகவோ அம்பேத்கரியவாதியாகவோ இருந்துவிடலாம். அக்கொள்கைகளுக்கெல்லாம் எல்லோருக்கும் புரிய வைக்கும் எளிமை இருக்கிறது. ஆனால் திமுகவின் கொள்கை அப்படியல்ல.
இந்தியாவிலேயே பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் நடத்தி வன்முறையைக் கையில் எடுக்காமல், அறவழியில், அறிவு வழியில். தேர்தலில் தொடர் வெற்றி கண்ட கட்சி திமுக மட்டும் தான். இந்தக்கொள்கையை எல்லோரும் எதிர்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாவற்றையும் மறுக்கிற கட்சி. புரட்டிப் போடுகிற கட்சி. அதை மிகவும் எளிதாக வெறுப்பரசியல் என்று சொல்லிவிடலாம். அது பயன்படுத்தும் 'நடைமுறைவாதத்தை' சமரசம் என்று எள்ளி நகையாடலாம். அதன் வெளிப்பாட்டுத் தன்மையை முரட்டுத்தனம் என்றோ, பண்ணையார்த்தனம் என்றோ சொல்லிவிடலாம். அதன் தன்னம்பிக்கையை, ஆணவம் என்று எல்லோரும் தவறாகக் குறிப்பிடுவர்.
திமுகவிற்கு நெருக்கடி எங்கிருந்தும் வரலாம். பார்ப்பனர் முதல் ஒடுக்கப்பட்டோர் வரை எல்லோருக்கும் திமுகவின் மீது விமர்சனம் இருக்கும். உயர்ஜாதியினர், திமுகவை தமது கட்சி என்று பார்ப்பதில்லை. சூத்திரர்கள் இதை தலித்துகளுக்கு ஆதரவான கட்சி என்பார்கள். தலித்துகள் இதை சூத்திரர்கள் கட்சி என்பார்கள். இந்துக்கள் திமுகவை சிறுபான்மையினர் கட்சி என்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டோர் நிந்திப்பார்கள். பெண்கள் இதை முரட்டு ஆண்களுக்கான கட்சி என்பார்கள். திமுகவை யாரும் வெளிப்படையாகச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒரு கள்ளக்காதலைப் போல இந்த உறவைப் பாவிப்பார்கள். இத்தனைக்கும் இது தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.
அதே போல திமுகவை ஆதரிப்போருக்குக் குழப்பம் வரலாம், தடுமாற்றம் வரலாம். முன் மாதிரிகள், உதாரணங்கள் இல்லாத அரசியலை இந்த இயக்கம் கடைபிடிக்கிறது. மாநில உரிமை பேசும் (ஆனால் பிரிவினை பேசாது), மொழி உரிமை பேசும் (ஆனால் மொழி வெறி இல்லை), பெண்ணுரிமை பேசும் (ஆனால் பெண்கள் ஆதரவு இருக்காது), ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை வெளியே சொல்ல முடியாது, ஏனெனில் யாராவது ஒருவர் நீதிமன்றத்திற்குப் போய் அதைத் தடுத்துவிடுவர்கள். நீதிமன்றம், ஊடகம், அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் என எதிரிகளை எங்கும் கொண்டிருக்கும் கட்சி இது.
இந்தத்தோல்வி புதிதல்ல. இனியும் திமுக வெகுண்டெழும். அதற்கான தேவை இன்னும் இருக்கிறது.
திமுக தோற்றதற்கு வெளியே சொல்லப்படும் காரணங்கள் நிறைய இருக்கலாம். ஊழல், போதை, பெண் பாதுகாப்பு என்பன யாவும் ஆதாரமற்றவை என்று ஏற்கனவே பலர் நிரூபித்துவிட்டனர். இவை எல்லாம் நிர்வாகக் காரணங்கள். அவற்றை வெளியில் சொல்லிவிடலாம்.
வெளியில் சொல்லப்படாதது அரசியல் காரணங்கள் தான்.
கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்திய திராவிட மாடல் என்ற சொல் அனைத்து எதிரிகளையும் ஒன்றிணைத்துவிட்டது. தமிழ்நாடு தவிர இந்த வார்த்தை இந்த அர்த்தத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை. ஒரு எல்லை மாநிலம் இப்படியான ஒரு உறுதியான கொள்கையுடன் வளர்ச்சி பெறுவது இந்தி, இந்து, இந்தியா என்று பேசுவோரைப் பயமுறுத்திவிட்டது.
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைவரையும் சங்கடப்படுத்திவிட்டது. குடும்ப அமைப்பே கேள்விக்குள்ளாகும் என்ற கிலி (paranoia) ஆண்களையும் ஆணாதிக்கத்தை உள்வாங்கிய பெண்களையும் உலுக்கிவிட்டது. பிற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியக் குடும்பங்கள் என்னாகும்?
கல்விக்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் முக்கியத்துவம் படிப்பில் அக்கறை இல்லாதோருக்கும், முறையான கல்வியில் தோல்வி அடைந்தோருக்கும், படிப்பில் வெற்றி பெற்ற உயர்ஜாதியினருக்கும் சங்கடத்தைக் கொடுத்துவிட்டது. காலை உணவுத்திட்டம், எல்லோரையும் படிக்கவைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அடைந்திருக்கும் மிதமிஞ்சிய வளர்ச்சி எல்லோருக்கும் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் தான் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குப் போனார்கள். இப்போது வடமாநிலத்தவர் இங்கு பணிபுரிகின்றனர். கல்வியில், மருத்துவத்தில், தொழிலில், வேலைவாய்ப்பில், பொதுக்கட்டமைப்பில் நாம் அடைந்திருக்கும் பிரமாண்டமான வளர்ச்சி திராவிட மாடல் அரசியல் இந்தியா முழுக்கப் பரவிவிடுமோ என்ற பயமும் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. (1/2)
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
@elan49638332361 எனக்கு அதையேதான் நானாகவே ஆதரவு கருத்தைப் பதிகின்றேன். நான் இதுவரை தி.மு.க.வின் எந்தக் கூட்டத்திற்கும் கூடச் செல்லாதவன். இருந்தாலும் இந்தத் தேர்தலில் அவர்கள் தோற்றதில் இருந்து ஏதோ நான் தோற்றது போல ஓர் உணர்வு. ஸ்டாலின் அவர்களின் செயலும் மற்றவர்களை அணுகும் முறையே ஈர்த்தது.
நிர்வாகத் திறமை இருந்தால் இருக்கும் நிதியை வைத்துச் சாதிக்கலாம்; தி.மு.க முன்னெடுத்த மக்கள் நலத் திட்டங்களே அதற்குச் சாட்சி.
We are waiting to see you, Mr. Vijay Avarkale.
#dmk#mkstalincomingagain