விழ விழ எழுவோம்.
தோத்திட்டே இருந்தாலும் கூடவே நிற்போம்💪
அறிக்கை விட்டு நினைவஞ்சலி செய்பவர் இல்லை சீமான் கூட நின்று அஞ்சலி செய்பவர்.
சீமான் ஈழதமிழர்களிடம் காசு வாங்குறார் என்பவன் எல்லாம் ஓராம போய் விஜய்க்கு 🔥 விடவும்.
நினைவேந்தல் முடிஞ்சுது.
இனி சீமான் பேசியதில் என்ன நொட்டை கண்டு பிடிக்கலாம் என்று எங்கட ஆட்கள் கிளம்பிட்டாங்கள் 🤭🤦♀️
மேடையில் சிரிச்சார் 🙄
கை தட்டினார் 🙄
அரசியல் பேசிட்டார் 🙄
டேய் யாருடா நீங்க எல்லாம் 😭
Illegal 'cash-for-votes' in Tirunelveli constituency:
TVK: Rs 1,000 and Rs 1,500
DMK: Rs 1,000
AIADMK: Rs 1,000
TVK is currently distributing cash in areas where it expects strong support. With a weak distribution network, supporters of candidate have allegedly sought help of village leaders. DMK & AIADMK hve almost completed distribution.
கரூர் மரணங்களுக்குப் பிறகு, நள்ளிரவில் அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலினின் செயல்பாட்டை வரவேற்று, Royal Salute என அண்ணன் @Saattaidurai அவர்கள் கூறியதை வைத்து, உள்நோக்கம் கற்பித்து, அவதூறு பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள் சில வீணர்கள்.
திமுகவுடன் நாம் தமிழர் கட்சிக்கு இருப்பது பகை முரண்; திமுக வாழ்நாள் எதிரிதான். இது திமுகவினருக்கும் மிக நன்றாகவே தெரியும். திமுக மட்டுமல்லாது, அதிமுகவும் அந்த வகையினதுதான்.
இருந்தபோதிலும், திமுகவோ, அதிமுகவோ எங்காவது ஒரு இடத்தில் தவறி ஒரு நன்மையை செய்தாலும் வரவேற்கவே செய்திருக்கிறோம். அனைத்துச் சாதியினரும் அரச்சகர் ஆகும் திட்டத்தை திமுக கொண்டு வந்தபோது வரவேற்றோம். தைப்பூசத்துக்கு அதிமுக விடுமுறை விட்டபோது வரவேற்றோம்.
திமுக, அதிமுகவை தேர்தல் களத்தில் எப்போதும் எதிர்க்கிறோம். ஆனால், ஒரு சிக்கலில் அவர்களது அணுகுமுறை/செயல்பாட்டைப் பொறுத்து எதிர்ப்பு/ வரவேற்பு என்பதை முடிவு செய்கிறோம். இது Issue Based Politics! அந்த அடிப்படையிலேயே, கரூரூக்கு உடனடியாகச் சென்ற ஸ்டாலினின் செயல்பாட்டை வரவேற்றார் அண்ணன் துரைமுருகன்.
விஜய் பதில் சொல்லாது ஓடிப் போனதை ஒப்பிட்டு, " ஸ்டாலின் மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு." எனத் தொடங்கித்தான் ஸ்டாலினின் கரூர் வருகையை வரவேற்றார். அதேசமயம், அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டதில் கேள்விகளை எழுப்புகிறோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கெதிராக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்தப் பரிந்துரைகளை ஏன் அமலாக்கம் செய்யவில்லை? அதனைப் போலவே, இதனையும் கிடப்பில் போட்டுவிட்டால், என்ன செய்வது? எனக் கேட்கிறோம்.
இருந்தபோதிலும், அண்ணன் துரைமுருகனைப் பற்றி அவதூறு பரப்பி, தங்களது வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள் சில மூடர்கள்.
அற்பர்களே! அவர் அளவுக்கு உங்களில் யார் திமுகவை விமர்சித்தது? அவர் அளவுக்கு திமுகவால் அடக்குமுறைகளை எதிர்கொண்டது யார்?
திமுகவின் நான்காண்டு ஆட்சிக்காலத்தில், 4 முறை கைது, ஓராண்டுக்காலம் சிறை, குண்டர் தடுப்புக்காவல், அடுத்தடுத்து பல வழக்குகள், சிறைக்குள் உடலியல் சிக்கல்கள், உளவியல் நெருக்கடி என அண்ணன் சாட்டை துரைமுருகன் எதிர்கொண்ட அடக்குமுறைகள் ஏராளம். இருந்தபோதிலும், சிறைக்குச் செல்லும் முன்பு எந்த வீரியத்தோடு இருந்தாரோ, அந்தளவுக்கு இன்றளவும் இருக்கிறார்; இருப்பார்! நீங்கள் அதனை எல்லாம் எதிர்கொண்டு இருந்தால், அரசியல் பேசுவதையே விட்டுவிட்டு போயிருப்பீர்கள் மூடர்களே!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின்போது களத்துக்கே சென்று, திமுகவைத் தோலுரித்தவரும் அவரே! செந்தில் பாலாஜியின் ஊழல்களைச் சாடி, அதனால் வழக்குகளைப் பெற்று, இன்றளவும் அதனை எதிர்கொண்டு வருபவரும் அவரே!
உங்களின் தனிமனித வன்மத்தையையும், பகையையும் தீர்த்துக் கொள்ள இவ்விவகாரத்தைப் பகடைக்காயாக மாற்றாதீர்கள். அருவருப்பாக இருக்கிறது.
அவர் அவராகவே இருக்கிறார். நீங்கள் கொஞ்சம் மனிதத் தன்மையோடு இருங்கள்!
திருப்புவனம் அஜித்குமார் காவல்நிலைய படுகொலை குறித்து @sunnewstamil யில் ஒரு நியூஸ் கார்டுகூட வரவில்லை.
அப்டி எவ்வளவுதான் திமுககிட்ட வாங்குறீங்க குணசேகரன்? @GunasekaranMu
@TVKVijayHQ இவன்தான் உங்க வாரியரா? ப்ரோ ?
யாரோ ஒருவரின் காணொளியை பரப்பி அதில் ஆடும் பெண்ணை பற்றி விசாரிக்கும் இவன் போன்றோர் இருக்கும் கட்சியில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் !
சவுக்கு சங்கர் வீட்டில் தொடுக்கப்பட்ட தாக்குதல் குறித்து ஜென்ராம், குணசேகரன் போன்றவர்கள் வாய்திறந்தார்களா? தமிழ் ஊடக உலகம் ஏன் கனத்த மௌனம் சாதிக்கிறது?
குணசேகரன் ரொம்ப யோக்கியசிகாமணி ஆச்சே! அவருமா வாய்திறக்கல?
96 இடங்களை மட்டுமே வென்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் 2006 - 11ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்தது திமுக. தனியொரு கட்சியாகப் பெரும்பான்மை பெறாத திமுகவை, 'மைனாரிட்டி திமுக' என விளித்தார் ஜெயலலிதா.
உண்மையில் ஜெயலலிதா வைத்தது நியாயமான வாதம்தான். அதனை ஏற்றுக் கொள்ள முடியாத கருணாநிதி, "மைனாரிட்டி திமுக என ஜெயலலிதா கூறினால், திருமதி ஜெயலலிதா என்று நான் அவரைக் கூறுவேன்" என்றார்.
தனிக்கட்சி பெரும்பான்மை பெறாத ஒரு கட்சியை , 'மைனாரிட்டி அரசு' எனக் கூறுவதில் எந்தப் பிழையுமில்லை. ஆனால், திருமணம் ஆகாத ஒரு பெண்ணை, 'திருமதி' என விளிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
இருந்தும், ஜெயலலிதா மீது வக்கிரமான தனிநபர் தாக்குதல் தொடுத்தார் கருணாநிதி. அப்போது அவருக்கு வயது 85. அந்த வயதுக்கேற்ற முதிர்ச்சியோ, பக்குவமோ, நாகரீகமோ அற்று, இழிவான விமர்சனத்தைச் செய்தவர் கருணாநிதி. அந்த கருணாநிதியின் மகள்தான் இப்போது நாகரீகப் பாடமெடுக்கிறார்.