எழுத��தாளரும், திமுகவின் ஆதரவாளருமான அண்ணன் @sugunadiwakar அவர்களது பதிவுக்கான எதிர்வினை!
தந்தி தொலைக்காட்சியின் விவாத நிகழ்வில் விசிகவின் ஆளூர் ஷா நவாஸ் பேசியதற்கு அம்மேடையில் பதில் சொல்ல வாய்ப்பில்லாத நிலையில், ‘ஷா நவாஸின் உருட்டுகள்’ எனும் தலைப்பில் தம்பி வலையொளியில் ஒரு காணொளி வெளியிட்டிருந்தேன். ( https://t.co/Vb63ejvJlT )
அதுகுறித்து அண்ணன் சுகுணா திவாகர் அவர்கள் ஒரு பதிவை இட்டிருக்கிறார்.
பொதுவாக, பெரியார் ஈவெரா குறித்து விமர்சனங்களை வைக்கிறபோது அதனை எதிர்கொள்ள கருத்தியல் வலிமையற்ற பெரியாரியவாதிகள் இரண்டு வகை உத்திகளைக் கையாள்கிறார்கள்.
ஒன்று, ஈ���ெரா குறித்து விமர்சனங்களுக்கு தகுந்த விளக்கத்தையோ, மறுப்பையோ, தர்க்க நியாயத்தையோ முன்வைக்காது, ‘பெரியாரை விமர்சித்தால் நீ சங்கி’ என முத்திரை குத்துவார்கள்; அதாவது, விமர்சனங்களுக்கு விடையளிக்காது, வினாக்களைத் தொடுப்பவருக்கு உள்நோக்கம் கற்பித்துத் தப்பித்துவிடுவது.
இரண்டாவது, "நீங்கள் கொண்டாடுகிற தம���ழின முன்னோர்களே பெரியாரை ஏற்றுக்கொண்டப் பிறகு, உங்களுக்கு என்ன சிக்கல்? அவர்களை ஏற்பீர்கள்; பெரியாரை ஏற்க மாட்டீர்களா?" என தமிழின முன்னோர்களைத் துணைக்கழைத்து ஈவெராவை நியாயப்படுத்த முயல்வது
இந்த இரண்டையும்தான் ஆளூர் ஷாநவாசும் செய்தார். இப்போது சுகுணா திவாகரும் செய்கிறார்.
பெரியார் ஈவெராவை நியாயப்படுத்த வ.உ.சி.யைக் கொண்டு வருகிறார்கள். 1928ஆம் ஆண்டு வ.உ.சி. நாகையில் பெரியாரின��� படத்தைத் திறந்து வைத்து, வணங்கினார் என்கிறார்கள். உண்மைதான். மறுப்பதற்கில்லை. அதேசமயம், வ.உ.சி. அடுத்த எட்டே ஆண்டுகளில் 1936ஆம் ஆண்டு இறந்துபோனார். அதாவது, ஈவெரா நீதிக்கட்சியின் தலைவரானதுகூட வ.உ.சிக்குத் தெரியாது. எந்த நாட்டு விடுதலைக்காக வ.உ.சி. சிறையில் செக்கிழுத்தாரோ, சுதேசிக் கப்பல்விட்டாரோ, சொத்துக்களை இழந்தாரோ, இரட்டை ஆயுள் தண்டனை பெற்றாரோ, ராஜதுரோகி என வெள்ளைய அரசால் பழிசு���த்தப்பட்டாரோ, அந்த நாடு விடுதலைபெற்ற நாளைக் கறுப்பு நாளென ஈவெரா விமர்சித்து எதிர்த்தது வஉசிக்குத் தெரியாது. தெரிந்திருந்தால், ஈவெராவை விமர்சித்திருப்பார் என அறுதியிட்டுக் கூறலாம். அப்படியிருக்க, 1973ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஈவெராவை நியாயப்படுத்த, 1936ஆம் ஆண்டே இறந்துபோன வ.உ.சி.யைத் துணைக்கு அழைக்கிறார்கள்.
முதல் மொழிப்போரில் ஈவெரா பங்கெடுத்ததை எவரும் மறுக்கவில்லை. அதிலும் சில சறுக்கல்கள் இருக்கின்றன என்றபோதிலும், அவரது பங்கெடுப்பு இருக்கிறதென்பதை மறுப்பதற்கில்லை. ஏன்? மொழிப்போர் ஈகத்தின் மூலவ���்களான நடராசனும், தாளமுத்துவுமே பெரியாரியவாதிகள்தான் என்பதை மறைப்பதற்கில்லை. அதேசமயம், 1964-65ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் ஈவெரா முழுக்க முழுக்க அதிகாரவர்க்கத்தின் பக்கம்தான் நின்றார். அரச வன்முறையை நியாயப்படுத்தும் ஊதுகுழலாய் செயல்பட்டார். மொழிப்போர் வீரர்கள் மீதான அரசப்பயங்கரவாதத்தை முழுமையாக ஆதரித்து, நியாயப்படுத்தினார். இந்தித்திணிப்பையும்கூட நியாயப்படுத்தினார். ���ம்மொழிப்போரின் முதல் ஈகியான கீழப்பழுவூர் சின்னச்சாமி கடன்தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக ‘விடுதலை’ இதழில் எழுதி கொச்சைப்படுத்தினார். சின்னச்சாமியின் சாதியையும் குறிப்பிட்டு எழுதினார். நிற்க! முதல் மொழிப்போரில் ஈவெராவின் பங்களிப்பைப் பற்றி எழுதியிருக்கிறார் மறைமலையடிகள் என்கிறார்கள். உண்மைதான். ஆனால், இரண்டாவது மொழிப்போருக்கு முன்பே, 1950 ஆம் ஆண்டு மறைமலையடிகள் இறந்துபோனார். அவருக்கு 1964- 65ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் ஈவெரா இந்தித்திணிப்பை ஆதரித்ததும், அதற்கெதிராகப் போராடியவர்களை ஒடுக்கச் சொன்னதும் தெரியாது. ஆனால், 1973ஆம் ஆண்டுவரை வாழ்ந்த ஈவெராவை நியாயப்படுத்த 1950ஆம் ஆண்டே இறந்துபோன மறைமலையடிகளை அழைத்து வருகிறார்கள்.
எவ்வளவு தந்திரமான அரசியல்?
அத்தோடு, பெரியாரை விமர்சித்தால் அது பாஜகவுக்கு வழிவகுத்துவிடுமாம். பெரியார் எனும் பிம்பத்தை உடைத்துவிட்டால், பாஜக எளிதாக உள்ளே வந்துவிடுமாம். இதெல்லாம் என்ன மாதிரி புரட்டு? உருட்டு? பாஜக எதிர்ப்புணர்வுக்கும், பெரியாருக்கும் என்ன தொடர்பு? பெரியாரியவாதிகள் பாஜகவை எதிர்க்கலாம். அதற்காக, தமிழ்நாட்டு மக்களின் பாஜக எதிர்ப்புணர்வுக்குக்குக் காரணமே பெரியார்தான் என்பதா? அப்படிக் கூறினால், அதனைப் போல ஒரு மோசடித்தனமான வாதம் ஒன்றில்லை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள் ஈவெராவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அதன்வழியா பாஜகவைப் புறக்கணிக்கிறார்கள்? உறுதியாக இல்லை! தமிழ்நாட்டின் மிக மிகப் பெரும்பான்மை மக்கள் கடவுளை வழிபடுக���றார்கள்; விரதம் இருக்கிறார்கள்; பிரதோஷமென கோயிலுக்குச் செல்கிறார்கள்; வேண்டுதல் வைக்கிறார்கள்; காவடி எடுக்கிறார்கள்; மொட்டை அடிக்கிறார்கள்; அலகு குத்துகிறார்கள். திருநீர் அணிகிறார்கள்; புராணங்களையும், இதிகாசங்களையும் நம்புகிறார்கள்; விதி, கர்மா போன்றவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்; சொர்க்கம், நரகம் எனும் கற்பிதங்களை உண்மை என்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பாஜக��ை ஏற்பதில்லை. ஏனென்றால், பாஜக முன்வைக்கும் மதவாத அரசியல் மீதான ஒவ்வாமையும், எதிர்ப்புணர்வும்தான் காரணம். அந்த உணர்வை ஊட்டியது ஈவெரா இல்லை. அவ்வுணர்வு இயல்பிலேயே இம்மண்ணில் நிறைந்திருக்கிறது. ஈவெராவின் கொள்கைகளைத் துளியும் அறிந்திடாதவர்கள்கூட மதவாத எதிர்ப்புணர்வை வலுவாக கொண்டிருக்கிறார்களென்றால், அதற்குக் காரணம் தமிழர் நிலத்தின் வரலாற்றுவழிபட்ட மரபியல் குணமும், இம்மண்��ுக்கே உரித்தான தனித்துவமானப் பண்பு நலன்களும்தான். அதனால்தான், ராமரை வழிபாடு செய்வோர்கூட பாஜகவுக்கு இங்கு வாக்குச் செலுத்துவதில்லை. எனவே, பெரியார் பிம்பம் உடைபட்டால் பாஜக உள்ளே வந்துவிடும் என்பது பச்சைப்பொய். இன்னும் சொல்லப் போ��ால், வாக்கரசியலுக்கும், பெரியார் எனும் பிம்பத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்ட உண்மையாகும்.
பெரியார் ஈவெராவை சங்கிகள் எதிர்ப்பதற்கும், தமிழ்த்தேசியவாதிகள் எதிர்ப்பதற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. சுருங்கக் கூறினால்,
சனாதனத் தர்மத்துக்கு எதிரானவர் ஈவெரா எனக் கூறி எதிர்க்கிறார்கள் சங்கிகள். தமிழ்மொழிக்கும், தமிழர் எனும் தேசிய இன அடை��ாளத்துக்கும், தமிழ்த்தேசியத்துக்கும் எதிரானவர் ஈவெரா என தமிழ்த்தேசியவாதிகள் எதிர்க்கிறோம்.
புராணங்களை, இதிகாசங்களை எதிர்த்தார் ஈவெரா என சங்கிகள் எதிர்க்கிறார்கள்; பழந்தமிழர் இலக்கியங்களையும், காப்பியங்களையும், அறிவுக்கொடையான திருக்குறளையும் வசைபாடினார் ஈவெரா என தமிழ்த்தேசியவாதிகள் எதிர்க்கிறோம்.
இந்து மதத்தைக் காட்டமாக விமர்சித்தார் ஈவெரா என சங்கிகள் எதிர்க்கிறா���்கள். உயிருக்கு நிகரான தமிழ்மொழியை வசைபாடினார் என தமிழ்த்தேசியவாதிகள் எதிர்க்கிறோம்.
இருந்தபோதிலும், ஈவெராவை விமர்சித்தால் சங்கி எனும் முத்திரை; ஈவெராவின் பிம்பத்தை உடைத்துவிட்டால், பாஜக உள்ளே வந்துவிடும் எனும் அங்கலாய்ப்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. என்ன ஒரு கோமாளித்தனம்?
இப்போது பதிவுக்கே மீண்டும் வருவோம்.
வ.உ.சி., மறைமலையடிகள் போன்ற முன்னோர்களைத் துணைக்கழைத்து ஈ���ெராவை நிலைநிறுத்த முற்படும் முயற்சியின் நீட்சியாக தற்போது அன்னை மீனாம்பாளை அழைத்து வந்திருக்கிறார் சுகுணா திவாகர். அவர்தான் ‘பெரியார்’ என ஈவெராவுக்குப் பட்டமளித்தார் என்கிறார். அதே பெரியார் எனும் பட்டத���தை ராஜாஜிக்கு ஈவெரா அளித்தார் என்பதையும் இச்சமயத்தில் சேர்த்துப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
‘பெரியார்’ எனும் பட்டத்தை 1938 ஆம் ஆண்டு அன்னை மீனாம்பாள் ஈவெராவுக்கு வழங்கியதாகக் கூறுகிறார் சுகுணா திவாகர். ஆனால், ‘நாயக்கர்’ எனும் சாதிப்பட்டத்தை நீக்கியதால் பெருமை குறைந்துவிடுமோ என அஞ்சி, ‘நாயக்கர்’ என இருந்த இடத்தில் ‘பெரியார்’ எனும் சொல்லை முதன்முதலாகச் சேர்த்தது 1928ஆம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் சிதம்பரம் பிள்ளை என்பதைத் தங்களுக்கு 1973ஆம் ஆண்டு ஈவெரா உணர்த்தியதாகவும், 1929ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் பெரியார் என ஈவெரா அழைக்கப்பட்டார் எனவும் கூறுகிறார் ஐயா ஆனைமுத்து. மேலும், 1928ஆம் ஆண்டு முதல் ‘பெரியார்’ என அழைக்கப்பட்டது 1938ஆம் ஆண்டு முதல் பெருவழக்காக மாறியது என்றும் கூறுகிறார். பெண்கள் மாநாட்டில் அன்னை மீனாம்பாள��� ‘பெரியார்’ என அழைக்க வேண்டுமென வலியுறுத்தியது ஏற்கனவே இருந்தப் பெயரை விளம்பரப்படுத்தும் தன்மையில்தான் என அறுதியிட்டுக் கூறுகிறார் ஆனைமுத்து. நாங்கள் கூறினால், 'பெரியார் மீது வன்மம்; அதனால், வரலாற்றைத்திரிக்கிறார்கள்' என்பீர்கள். கூறுவது பெரியாரியப் பெருந்தொண்டர் ஆனைமுத்து ஆயிற்றே! அவருக்குப் பெரியார் மீது வன்மமோ, காழ்ப்புணர்வோ இருந்திருக்க வாய்ப்பில்லை; அவருக்கு வரலாற்றைத் திரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதனால், ‘பெரியார்’ எனும் பட்டம் ஈவெராவுக்கு வழங்கப்பட்டதன் உண்மையானப் பின்னணி இதுதான் என்பதற்கு இதனைவிட வேறு சான்று தேவையில்லை என்கிறேன்.
மொத்தத்தில், சுகுணா திவாகர் அவர்களது பதிவைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டினால், அதில் தேறுவது ஒன்றே ஒன்றுதான்.
அன்னை மீனாம்பாளை ‘பெரியார்’ என ஏற்பீர்கள். மீனாம்பாள் ஏற்ற ஈவெராவை ஏற்க மாட்டீர்க��ா? என்பதுதான். உங்கள் வாதத்திற்கே வருகிறேன் சுகுணா திவாகர் அவர்களே!
சுப்ரமணியப்பாரதியை முழுமையாக ஏற்ற கனகசுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார். அவரை திராவிட இயக்கமும், பெரியாரியவாதிகளும் முழுமையாக ஏற்கிறீர்கள்; கொண்டாடுகிறீர்கள். அந்தப் பாரதிதாசன் ஏற்ற பாரதியை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? பாரதிதாசன் ஈவெராவைக்கூட விமர்சித்திருக்கிறார். ஒருநாளும் பாரதியை விமர்சித்ததில்லை.
உங்கள��� தர்க்கத்தின்படி, மீனாம்பாளை ஏற்றால், மீனாம்பாள் ஏற்ற ஈவெராவையும் ஏற்க வேண்டுமென்றால், பாரதிதாசனை ஏற்கிற பெரியாரியவாதிகள், அவர் ஏற்ற பாரதியை ஏற்பீர்களா? என்பதுதான் என் கேள்வி.
அப்புறம், ‘ரேடிசன் புளூ ஹோட்டலில் ரூம் போட்டால்தான் கூட்டத்துக்கு வருவேன்’ என அண்ணன் சீமான் கூறியதாக எழுதியிருக்கிறார் சுகுணா திவாகர். திமுகவை ஆதரித்து, திமுகவோடு சேர்ந்ததால் அவர்களின் மொழி��டையும், மூன்றாந்தர விமர்சனமும் அண்ணன் சுகுணா திவாகருக்கு ஒட்டிக் கொண்டது போலும்! பரவாயில்லை! 3 ஆண்டுகளில் 30,000 கோடிகளைக் கொள்ளையடிக்காத கொள்கைக் கோமான்களான சபரீசனையும், உதயநிதியையும் அதிகாரப்பீடங்களாகக் கொண்டுள்ள அப்பழுக்கற்ற கட்சியான திமுகவை ஆதரிக்கிறீர்கள்! ஊழல் என்றால், என்னவென்றே தெரியாத உத்தமசீலர்களை ஆதரிக்கிறீர்கள்! பரவாயில்லை!
போகட்டும்!
நிறைவாக, பெரியார் ஈவெரா த��ிழ்த்தேசியவாதியில்லை; அவர் தமிழ்த்தேசியம் பேசவும் இல்லை என்பதுதான் உங்களது பார்வையென உங்களது நூலின் மூலம் அறிகிறேன். அதனை மற்ற பெரியாரியவாதிகளுக்கு எப்போது புரிய வைக்கப் போகிறீர்கள்?
தலைவர் பிறந்த நாள்! தமிழர் எழுச்சி நாள்!
இந்த உலகத்தின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனத்திற்கென தனித்துவமான வரலாற்றுப் பெருமிதங்கள் பல இருந்தாலும், இருப்பதிலேயே மாபெரும் பெருமை எம் தலைவர், என்னுயிர் அண்ணன், மேதகு வே பிரபாகரன் அவர்களை தன் மகனாக தமிழன்னை ஈன்றெடுத்தது தான். காலத்தின் போக்கில் அடிமைப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட அன்னைத் தமிழினம், தான் பெற்றெடுத்த மகனால் தலை நிமிர்ந்ததுதான் நம் இனத்தின் வரலாறு. வீழ்த்தப்பட்ட தமிழ்த்தேசிய இனம் மீண்டும் நிமிர்ந்த��� எழுந்த நன்னாள். நம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் பிறந்த பொன்னாள் இன்று!
இந்த உலகம் முழுக்க பரந்து வாழும் 12 கோடி தமிழ்த்தேசிய மக்களின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக, முகவரியாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 71 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் ���ொந்தங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.!
உலகில் தோன்றிய சில மகத்தானவர்களின் வாழ்க்கை வரலாறே உலக வரலாறு’ என்கிறார் புரட்சியாளர் லெனின்.ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி, நிலம், பண்பாடு, இறையாண்மை ஆகியவற்றைக் காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகின்றன.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய உலகின் மூத்த குடியான தமிழ்த்தேசியப் பேரினமும் பன்���ெடுங்காலமாக தன்னுடைய தனித்துவமிக்க மொழி, நிலம், பண்பாட்டு அடையாளங்களைக் காத்துக்கொள்ள வரலாற்றின் வீதிகளில் நின்று போர் புரிந்து வருகிறது.
தமிழினத்தின் இருபெரும் தாய் நிலங்களான தமிழ்நாடும், தமிழீழமும், ஆர்ப்பரிக்க���ம் அலை கடலால் பிரிந்து இருந்தாலும், அன்னைத் தமிழ் மொழியின் பிள்ளைகள் என்கின்ற உறவால், குருதி முழுவதும் நிறைந்திருக்கின்ற மரபணுக்களின் ஒத்திசைவு உணர்வால், ஒற்றைத்தேசிய இனத்தின் மக்களாகவே தமிழர்கள் நாம் வாழ்கின்றோம்.
தொன்மை மிக்க பண்பாடு, நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி, எக்காலம் தோன்றியது என அறிய முடியாத இலக்கண, இலக்கியச் செழுமை மிக்கத் தாய்மொழி என்ற அளப்பரிய சிறப்புகள் தமிழினத்திற்கு இருந்தாலும், சகல விதமான உரிமைகள் மற்றும் இறையாண்மையுடன் கூடிய ஒரு தேசம் இல்லையே என்ற பெரும் தவிப்பு தமிழர் மனதிற்குள் நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறது.
தமிழர்களின் பூர்வீக நிலங்களில் ஒன்றான ஈழத்தாயகத்தில், வந்து குடியேறிய சிங்கள இனவெறி ஆட்சியாளர்களால் உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு, பூர்வக் குடி தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டபோது, அறவழியில் போராடிய அரசியல் தலைவர்கள் மீதும் அடக்குமுறைகள் ஏவி, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அக்கொடுமைகளுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்படி போராட��் துணிந்தவர்களும் வல்லாதிக்க நாடுகளின் வட்டார அரசியல் சூழ்ச்சிக்கு இரையாகி விலைபோனபோது, இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்ற லட்சியத்தை தன் ஆன்மாவில் பதித்துக் கொண்டு, தலையே போனாலும் விடுதலை போராட்டத்தை விட்டுத்தரமாட்டேன், உயிரே போனாலும் ,உன்னத இலட்சிய வேட்கையைக் கைவிடமாட்டேன் என்று சமரசமற்று களத்தில் நின்று சாதித்த சரித்திர நாயகர்தான் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்���ள்.
அடிமை வாழ்வினும் உரிமைச் சாவு மேலானது என்ற இலட்சிய உறுதியுடன் இனவிடுதலை கனவினை நிறைவேற்றிட காலம் தந்த கரிகாலனாக, மறம் பேசியக் களத்தில், அறம் பேசி நின்ற சான்றோனாக தமிழ்த்தேசியத் தலைவர் அவர்கள் திகழ்கிறார்கள்.
பெருமைகளும், பெருமிதங்களும் பொங்கி நிறைந்து பூரித்து நிற்கிற தமிழர் இன வரலாற்றில், மாபெரும் வீரத்துடன் வேலெடுத்து பாய்ந்த முருகன் முதலாக, வாளெடுத்து சுழன்ற மூவ���ந்தர்கள் என காலப் பெருமையின் நீண்டு துலங்கும் பட்டியலில் மிளிர்ந்து சுடர்கின்ற அழல் ஞாயிறாய் இனத்தின் விடுதலை காக்க இன்முகத்தோடு களத்தில் நின்ற மாவீரன் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
��ங்கி உயர்ந்த உயர் குணத்தால், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையினால், எவர் உதவியும் இன்றி தன் சொந்த மக்களையே படையாக கட்டி, தான் பிறந்த தாய் மண்ணிலேயே நின்று போராடிய பெருமாவீரன் என்பதால் இதுவரை உலகில் தோன்றிய புரட்சியாளர்களில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன்மையானவர்.
படையின் எண்ணிக்கையில் வெற்றியல்ல; எண்ணத்தில்தான் வெற்றி என்பதை தம் ஈடு இணையற்ற போராட்ட வரலாற்றால் உலகிற்கு எடுத்துச் சொல்லி, எதிரியாலும் குற்றம் சொல்ல முடியாத அப்பழுக்கற்ற, வீரக்காவியமாகத் திகழும் தலைவர் பிரபாகரன் அவர்கள் கட்டமைத்த ஈழ சோசலிசக் குடியரசுதான், இதுவரை தோன்றிய உலக நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக மது, புகை, ஊழலற்ற, பெண்கள் பாதுகாப்பு, மக்கள் நலன் பேணுகின்ற, மொழி, பண்பாட்டு அடையாளங்களைப் போற்றி வளர்க்கின்ற, சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தத் தீங்கும் செய���யாத, தாய்மைப் பொருளாதாரத்தைப் போற்றி வளர்த்த ஒரு பொதுமை அரசாக வரலாற்றில் திகழ்ந்தது.
ஒரு மக்கள் தலைவனின் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் எளிய வாழ்க்கை வாழ்ந்து, இறுதிவரை மக்களின் விடுதலைக்காகக் களத்தில�� நின்று, எதிர்த்து நின்ற எதிரியைக்கூட உளப்பூர்வமாக வென்றுக் காட்டிய பெருந்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
ஈராயிரம் ஆண்டில் எவரும் கண்டிடா
போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்,
சீராயிரம் கண்ட செந்தமிழ் மரபினன்
தேராயிரம் பூட்டி திருவென்று வந்த பெருவீரன்,
உயிரினும் மேலான நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கரங்களில் இருந்த நம் ஈழத்தாயகத்தின் விடுதலைப் போராட்டம் ��ன்று உலகத் தமிழர்களின் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இப்பூமிப்பந்தில் இறுதித்தமிழன் இருக்கும்வரை, தாயக விடுதலைக்காக, இலட்சிய வேட்கையை இறுதிவரை ஏந்தி நிற்க வேண்டும் என்பதே நம் சத்தியத்தலைவரின் சாதனை வாழ்க்கையிலிருந்து நாம் எடுத்துக் கொள்கிற தத்துவமாக இருக்கிறது.
என்ன நிகழ்ந்தாலும், எத்தனை காலம் ஆனாலும், மன உறுதி குலையாமல், விடுதலை நோக்கம் சிதையாமல், தமிழீழ விடுதல���ப்பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதுதான், நம்முயிர் தலைவர் மீதான நமது ஆழ்ந்த பற்றுறுதியை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரே வழி என்பதை அவர் பிறந்த இந்நாளில், நாம் உணர வேண்டும்.
தமிழீழம் என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல, அது உலகமெங்கும் வாழக்கூடிய 12 கோடி தேசிய இனத்தின் பெருங்கனவு என்பதை உணர்ந்து அதை ��ென்றெடுக்க தலைவர் பிறந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும்.
உலகெங்கும் வாழ்கின்ற எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு நம் தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 71 ஆவது அகவை நாளில் தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
- செந்தமிழன் சீம��ன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஊடக மாஃபியாத் தனம்
--------------------------------
”சீமான் இப்படி செய்திருக்கக்கூடாது, பத்திரிகை, ஊடகவியலாளர்களை இப்படி ஒருமையில் பேசியிருக்கக்கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்கள் அவரை புறக்கணிக்க வேண்டும்” என்று முற்போக்க��� கோவன்கள் எழுதுவதையும் பேசுவதையும் பார்க்க நேரிடுகிறது.
கோவன்கள் எல்லாம் முற்போக்கு பேசுவதுதான் காலத்தின் கேடு.
இங்கே சீமான் பேசியதை நியாயப்படுத்த வரவில்லை.
ஆனால் குறிப்பிட்ட சில அரசியல் கட்சி தலைவர்களை மட்டும் குறி வைத்து, அவர்களை கோபப்படுத்தி, அதை பொது வெளியில் ‘அவர் அப்படித்தான்’ என்ற கட்டமைப்பை செய்ய���ம் ஊடக மாஃபியா தனத்தைப் பற்றி இந்த முற்போக்குகள் யாரும் பேசுவதில்லை.
அது அண்ணாமலையோ, சீமானோ, எடப்பாடியாரோ, குறிப்பிட்ட சில எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை மட்டும் டார்கெட் செய்து, அவர்களின் பிரஸ் மீட்டில் மட்டும் இப்படியான குழப்பத்தை ஏற்படுத்தி வரும் போக்கு சரியான ஒன்றா என்ற கேள்வியை ஊடக தர்மம் பற்றி பேசுபவர்கள் எழுப்புவதில்லை.
ஒரு கட்சித் தலைவரை இப்படி கேள்விகள் கேட்பது ஊடக அறம் என்று பேசும் ஒட்டுத் திண்ணைவாதிகளுக்கு…
இதே கேள்விகளை, அந்த ஊடகவியலாளர் நடந்து கொண்டதைப் போல், ஸ்டாலின் அல்லது உதயநிதியிடம் நடந்துக்கொண்டால் எதிர் கொள்வார்களா? ஒரே ஒரு செய்திளார் சந்திப்பை அப்படி எதிர்கொள்ள முடியுமா? அமளி துமளி செய்து வெளியேற்றி விடுவார்கள். முடிந்தால் அடித்தும் அனுப்பி வைப்பார்கள்.
இன்னும் ஒருபடி மேலே சென்று பொய் வழக்கு போட்டு உள்ளே வைப்பார்க��். அதுதான் திமுகவின் ஊடக மாஃபியாத் தனம்.
இப்படி சொல்வதற்காக அவர்கள் கோபப்படக்கூடாது. அதுதான் உண்மை.
ஆனால் சீமான் அப்படி செய்யவில்லை. வெறும் பேச்சோடவே நின்றுக் கொண்டார். அங்கே இருந்த அவர்களின் தொண்டர்களும் ��மைதியாகவே இருந்தார்கள். திமுகவைப்போல் நடந்து கொள்ளவில்லை.
இப்படியிருக்க, ஊடக அறம் ஏதோ சீமானால்தான் கெட்டுவிட்டது என கோபாலபுரத்து ஒட்டுத் திண்ணைகள் ஊளையிடுகின்றன.
1970 களில் அலை ஓசை என்ற நாளேடு. தொடக்கத்தில் திமுகவை ஆதரித்து வந்தது. பிறகு எம்.ஜி.ஆர். ஆதரவு, திமுக எதிர்ப்பு நிலை எடுத்தது. அதற்கேற்றாற் போல் அன்று நடந்த பல ஊழல்களையும் (சர்க்காரியா கமிஷன் ஊழல் பட்டியல்கள்) தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
அதற்காக வேண்டியே அந்த அலை ஓசை நாளேடு அடித்து நொறுக்கப்பட்டது, பத்திரிகைகளை எரித்தார்கள். அதை நடத்திய வேலூர் நாராயணனுக்கு கொலை மிரட்டல்.
அதைப்போலவே துக்ளக் சோவுக்கு கொலை மிரட்டல். ஆங்காங்கே துக்ளக் இதழ் ஏஜெண்ட்டுகளிடம் இருந்த புத்தகத்தை மடக்கிப்போட்டு எரித்தார்கள். அராஜகம் அதிகமாகவே இருந்தது.
விற்பனையில் முதல் இடத்தில் இருந்த குமுதம் வார இதழ் அலுவலகத்தையும் விட்டு வைக்கவில்லை. அதன் மீது தாக்குதல் நடத்தினார்கள், மிரட்டினார்கள்.
தினமலர் பத்திரிகை பற்றி முரசொலியில் தினந்தோறும் தினமலம் என்ற தலைப்பில் எழுதி தாக்கினார்கள். தினமணி நாளேட்டையும் குறி வைத்து தாக்கி, யாரும் வாங்கக்கூடாது என்றார்கள். இன்று தினமணி நாளேடு வாங்காதோர் பட்டியல் என்று முரசொலில் எழுதினார்கள்.
இது ஒரு வித மிரட்டல்.
ஒரு விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் வைக்கலாம். அல்லது ஒரு கருத்திற்கு எதிர் கருத்து வைக்கலாம். அதை மறுக்க முடியாது. ஜனநாயகத்தின் கருத்துச் சுதந்திரம்.
ஆனால் திமுக செய்தது எல்லாம��� ஊடக மாஃபியாத் தனம். மிரட்டு, உருட்டு, தாக்கு. இதுதான் அவர்களுக்கு கை வந்த கலை. எதிர் கருத்துள்ளவர்களை தனிப்பட்ட ரீதியில் தாக்கு, நாளாந்தரமாக செய்தியை வெளியிடு, எழுது என்பதுதான் அவர்களின் ஊடக மாஃபியாத் தனம்.
இப்படிப்பட்ட கும்பல்கள் தான் வந்து, இப்போது சீமானுக்கு பாடம் எடுத்துக் கொண்டுள்ளன. கோபாலபுரத்து ஒட்டுத் திண்ணைகளுக்கு இதுதான் ஊடக அறம் என்றாகியுள்ளது.
இன்னும் இரண்டு உ���ாரணங்களைச் சொல்லலாம்.
கோபாலபுரத்து கோமான் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு ‘மாமன் குடும்பத்து’ தினகரன் நாளேடு ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதில் கொதிப்படைந்த மு.க.அழகிரி, ஆட்களை ஏவி அந்த பத்திரிகையை பட்டப்பகலில் எரித்தார்.
மூன்று பத்திரிகை ஊழியர்கள் பலியானார்கள். ‘கொதித்து��் போன மாறன் சகோதரர்கள், அழகிரியை கொலைகாரன் என்றனர்.
அதுபற்றி கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள் ‘உங்கள் மகனை கொலைகாரன் என்கிறார்களே’ என்று கேட்டதுதான் தாமதம்,
‘யாரு கொலைகாரன்? யாரு? நீதான்டா கொலைகாரன், நீதான்டா கொலைகாரன்’ என்று சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஒருமையில் பேசி மிரட்டியதை ஊரே பார்த்தது.
இது எந்த ஊடக அறத்தில் வரும்?. பிறகு இந்த கும்பல் ‘கண்கள் பணித்தன, இதயம் இனித்தன’ ���ன ஒன்றாகிப் போனது வேறு விடயம்.
இப்படியான மாபியாத் தனத்திற்கு முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்லாம்.
எம்.கே.டி. சுப்ரமணியம் என்பவர் ஜவகரிஸம் என்ற இதழை நடத்தி வந்தார். முதன் முதலில் கருணாநிதிக்கு மேடை அமைத்துக் கொடுத்ததும்,அவருக்கு தயாளு அம்மாளை பெண்பார்த்துக் கொடுத்ததும் இந்த புண்ணியவான் தான். அண்ணாவோடு எல்லாம் பழகியவர்.
அவருடைய பத்திரிகையில் ‘ராஜாத்தி அம்மாளுக்கு மகள் பிறந்திருக்கிறார். மருத்துவ பதிவேட்டில், தந்தை என்கிற இடத்தில் மு.கருணாநிதி என்று உள்ளது. யார் அந்த கருணாநிதி?” என்று சின்னதாக ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டிருந்தார், அவ்வளவுதான்.
அவரு��்கு வந்த மிரட்டல்களும் உருட்டல்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அப்படி ஒரு மகள் பிறக்கவேயில்லை, என் பெயரை கலங்கப்படுத்துவதற்காகவே பத்திரிகை பொய் செய்தியை வெளியிடுகிறது என சுப்ரமணியனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, இரண்டு மாதம் சிறை தண்டனையும் வாங்கிக் கொடுத்த ஊடக மாபியாத் தனத்தை அன்றே தொடங்கி வைத்தார் முத்தமிழ் அறிஞர்.
இந்த பின்னணியைக் கொண்டவர்கள்தான் சீமானுக்கு ஊடக அறத்தைப�� பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பு: சீமான் இப்படிப்பட்ட ஊடக மாஃபியா கும்பல்களை எதிர்த்து ஒருமையில் பேசியது தவறு. கருணாநிதி பிரஸ்மீட்டில் அவரை கேள்வி கேட்ட உண்மையான பத்திரிகையாளர்களை (மாபியாக்கள் அல்ல) துப்பி (தட்டி) அனுப்பியதைப் போல் அனுப்பியிருக்க வேண்டும்.
நேர்மையான பத்திரகை ஊடகவியலாளர்கள் வேறு, திமுக-திராவிட மாஃபியாத் தன ஊடகவியாளர்கள் வேறு.
இன்ற���க்கு இது போதும்.
நன்றி வணக்கம்!
பா.ஏகலைவன்,
24.11.2025.
குட்டு பட்ட குட்டு பட்ட கூட்டம் குனிந்த கதை போதும்,பொறுமை மீறும்போது புழுவும் புலியாகும்🐯
தமிழர்களை நாய் என்று சொன்ன சிங்களவர்களின் வாயாலயே தமிழர்களை புலிகள் என்று சொல்ல வைத்த ஒப்பற்ற பெரும் மாவீரன்,தமிழ் இனத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா - பாரதி
#தமிழ்நாடுநாள்_2025
தமிழ்நாடு நாள்
பொதுக்கூட்டம்
எழுச்சிப் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாள்: ஐப்பசி 15 | 01-11-2025
மாலை 3 மணி
இடம்: அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எதிரில், சென்னை.
திரள் நிதி அளிக்க 👇:
https://t.co/beiF8LYk6y
@director_esakki நடக்காத ஒன்றை சொல்லி தமிழ் மக்கள் விமர்சனம் செய்தவனை கேள்வி கேட்டால் குறுக்க வரும் பிஜேபி கௌசிக் ஆ நீங்க..தேர்தல் அப்ப மட்டும் வரீங்க டா...துரோகி நாய்களா
@DrGanesh_Japan நான் தற்குறி அனில் இல்லை.ஆனால் நான் ஒரே ஒரு தலைப்பு எடுத்து அதில் இந்த திராவிட இயக்கம் மற்றும் ஆட்சிக்கு அப்பறம் எவ்வளவு கேவலமா அந்த துறை இருக்கு என்று பேசுவோமா
@ProudTamizhan1 திமுக கிட்ட இருந்து தமிழர்கள் காப்பாற்ற..இன்னொரு தற்குறிகிட்ட அதிகாரம் போனால்.தமிழ்நாடு அரசியல் ஆ நீ செத்துட்ட டா...டே அளவாக முட்டு கொடுங்க டா