My Dream was participating in the Tamil Eelam National Army one of the Discipline Army, Navy and the Air force in the world but its now invaded and destroyed by Sri Lanka Racist Brutal Government
But Mark my words one day my Dream come true
#TamilEelam
https://t.co/HejOTS52Or
24.07.2001 அன்று கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தை தீயில் கருக்கிய கரும்புலிகள்- காணொளி
24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
எம் மக்கள் மீது குண்டு வீசிய குண்டுப் பறவைகளை அவற்றின் இருப்பிடம் தேடிச்சென்று தீயில் கருக்கி தாய்மண்ணின் விடியலுக்காய் உறங்கும் உருத்தெரியா (மறைமுகக் கரும்புலிகள்) தேசப்புயல்களுக்கு எம் சீரம் தாழ்ந்த வீரவணக்கம்.
யாழ் திருநெல்வேலியில் 23/07/1983 அன்று நடந்த அதிரடி தாக்குதல் பற்றி தமிழின தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் .
வரலாறு என் வழிகாட்டி என வழி நடந்த வரலாற்று தலைவனே எம் வழிகாட்டி
#அறிவோம்_தமிழீழம்
Black July is not just history - it is memory, loss and resilience. We remember the lives taken and stand for truth, justice and liberation.
#BlackJuly1983#Tamilgenocide
கருப்பு ஜூலை (23.07.1983),
தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவன்முறையின் கரும்பக்கம். ஆயிரக்கணக்கான உயிர்கள், வாழ்வாதாரங்கள், கனவுகள் சிதைக்கப்பட்ட நாள். நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாத காயம் இன்னும் ஆறவில்லை.
#BlackJuly#TamilGenocide
லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமை ஏற்று நடத்திய திருநெல்வேலி தாக்குதல்
1983 யூலை 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.
இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர் தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து விடுதலை பெற்ற தமிழீழத்தில் தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.
-தமிழீழ விடுதலை போரட்டமுமும் தமிழீழத் தேசியத் தலைவரும் நூல்