பசுமையும், வளமையும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதை இலக்காக கொண்ட நமது “We The Leaders” அமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் 50,000 மரக்கன்றுகள் வழங்கவிருப்பதாக, இங்கிலாந்து நாட்டில் உள்ள “Annamalai Overseas Supporters” குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world.
On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
We The Leaders இயக்கத்தின் வளர்ச்சிக்கு பங்களித்து வரும் தன்னார்வலர்கள், தலைவர்கள், நல்லெண்ணம் கொண்ட ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி.
இயக்கத்தின் பெயரில் அலுவலகம் அல்லது மையம் தொடங்க வேண்டுமெ��ில், அதிகாரப்பூர்வ அனுமதி பெ��்ற பிறகே தொடங்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு We The Leaders இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளை மட்டுமே பின்பற்றவும்.
புதிய மையங்கள் தொடர்பான அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
Warmest birthday greetings to our Hon President of India, Tmt. Droupadi Murmu avl.
Praying to the Almighty to bless her with a long, healthy life and continued strength in guiding our great nation.
@rashtrapatibhvn
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இ��ு உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகி��து.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு ��ெல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிற��ன்.
மனுஷன் IPS ஆ இருந்தபோதும்..
மீடியா பூரா
சிங்கம் சிங்கம் சிங்கம்
மனுஷன் பதவி ல இருந்தபோதும்..
மீட��யா பூரா
அண்ணாமலை அண்ணாமலை
அண்ணாமலை
பதவி ல இல்லாதபோதும்
மீடியா பூரா
அண்ணாமலை அண்ணாமலை
அண்ணாமலை
கட்சி விட்டு போன போதும்
மீடியா பூரா
அண்ணாமலை அண்ணாமலை
அண்ணாமலை
Just அவரோட farm வீடியோ தான் போட்டார்..
இப்போவும் மீடியா பூரா அண்ணாமலை அண்ணாமலை
அண்ணாமலை
ஒரு மனுஷன் இவ்ளோ புகழ் பெற...
ஒன்னு 20..30 வருஷம் அரசியல்ல
இருக்கணும்
இல்ல 20...30 வருஷம் சினிமா ல
இருக்கணும்
இல்லன்னா அவர் அண்ணாமலையா இ���ுக்கணும்
😎😎😎😎
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அவற்றின் புழக்கம் குறையும்.
போதைப்பொருள்களுக்��ு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் மாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது https://t.co/bpwUirXkR4 இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் ம��்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம்.
அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.
https://t.co/rfti0J7ZsL
https://t.co/oVURDAxIE7 - Where it all began.
1.8 Million Members and Counting!
தலைவர் அண்ணன் அண்ணாமலை Wetheleaders யில் இணைய லிங்கை கிளிக் செய்யவும்!
https://t.co/LdMFsF9ReV? referral code=WTL-26-41756
Two-tier CRPF+CISF escort with IAF airlift.
4-layer CCTV with AI surveillance.
Biometric & facial recognition before entry.
Multiple layers of frisking.
Multi-level oversight with direct monitoring from the Prime Minister’s office.
Yes, you read it right. But these are not arrangements to buy high-level, classified, military-grade software. These are the arrangements made by the Ministry of Education for the NEET retest scheduled for 21st June 2026.
Every student would appreciate the government's efforts to prevent paper leaks by implementing additional security measures and enhanced monitoring. But an increase in scrutiny before entry, extended frisking, and an increase in the overall exam time from 180 minutes to 195 minutes will only add to their already ballooning exam pressure.
While the government has taken measures to contain leaks, they have forgotten the additional burden they have imposed on a young student before they take up an assessment, one that they have spent months preparing for, dissolving the entire purpose of our exam system and the NEP 2020’s goal to reduce “Exam Stress”.
Despite all these arrangements for the examination, there are issues with downloading the admit cards, and NTA has assured students that it will resolve them at the earliest.
Yes, there are challenges that demand meaningful solutions. However, I am concerned that the approach devised for the NEET retest may not resolve the issue; instead, it risks creating a new set of problems.