#Share#அதிகம்_பகிரவும்
எங்களுக்கு அனுமதி்(தண்ணீர்) கிடைக்குமா?
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி முதுகுளத்தூர் கடலாடி தாலுகா அனைத்தும் நீரில்லாமல் பாலைவனமாக காட்சி அளிக்கிறது.. இந்த நிலையை மாற்ற அந்த பகுதியை சேர்ந்த 450 கிராம மக்கள் சேர்ந்து AYFA என்ற அமைப்பை உருவாக்கி நம்முடன் இணைந்து இந்தப் பகுதியை சேர்ந்த சங்கரத்தேவன் கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம்.. மாவட்ட ஆட்சியர் நீர்வளத் துறைக்கு இதை பரிந்துரை செய்து உடனடியாக அனுப்பியுள்ளார்.. நீர்வளத் துறைக்கு பரிந்துரைத்து 20 நாட்களுக்கு மேலாக ஆகியும் இன்னும் இந்த இளைஞர்களை அதிகாரிகள் அனைவரும் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று அலைகழிக்கின்றனர்.. ஏற்கனவே நீர் இல்லாமல் பாலைவனமாக காட்சி அளிக்கும் இந்த மூன்று தாலுகா இந்த வருடமும் மழை பொழிவிற்கு முன்னால் இந்த களப்பணிகள் செய்யாமல் விட்டால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.. இந்தப் பகுதி கால்நடைகளுக்கு கூட குடிக்க நீர் இல்லாமல் இருக்கும் நிலை உண்டாகும்.. இராமநாதபுரத்தின் வரட்சியை மாற்ற அப்பகுதி் மக்கள் தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டும் நிலையிலும் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது அப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் வேதனையடைய செய்துள்ளது..
இதற்கு தீர்வு உடனடியாக வேண்டும். இந்த மழை காலத்திற்கு முன் பணிகளை தொடங்க வேண்டும்.
எங்களுக்கு அனுமதி கிடைக்குமா??@CMOTamilnadu@mkstalin@ramnadcollector@PTTVOnlineNews@ThanthiTV@news7tamil@News18TamilNadu@sunnewstamil
#Share#அதிகம்_பகிரவும்
இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள். மனிதர்கள் வாழ தகுதியற்று கிடக்கிறது ஆப்பநாடு. ஆப்பநாட்டில் சீமை கருவேல மரங்கள் ஆடியுள்ள கோர தாண்டவத்தை பாருங்கள். எங்கு பார்த்தாலும் சீமை கருவேல மரங்கள். நாங்கள் இருக்கும் இடம் ஒரு காலத்தில் பெரிய ஆறாம். இங்கு ஒரு அணையும் இருந்ததாம்.
இந்த நிலையை மாற்ற AYFA - ஆப்பநாடு இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் சபையுடன் இணைந்து களம் இறங்கியுள்ளோம். முதல் கட்ட பணிகளாக 8 km அளவு கொண்ட சங்கரத்தேவன் கால்வாயை சீரமைக்க உள்ளோம். இதனை தொடர்ந்து 40 km அளவு கொண்ட நாராயணன் கால்வாயை சீரமைக்க உள்ளோம். இந்த இரண்டு கால்வாயையும் சீரமைத்தால் கிட்டத்தட்ட 500 கிராம மக்களும், 250 பெரிய கம்மாய்களும், 1000 க்கும் மேற்பட்ட குளம் குட்டைகளும் பாசணம் பெற்று 500000 விவசாய மக்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும்.
இந்த நிலையை மாற்ற உதவி தேவை. இதை சீரமைக்க @ramnadcollector மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்த உடனே பணிகளை தொடங்க தயாராக உள்ளோம். இந்த வருட மழை காலத்திற்கு முன் இந்த பணிகளை செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9962200666.