கையாளத்தெரியாத
கோபம்;
கடனுக்குக் கடன்
கேட்கும் குணம்;
சொன்னால் போதும்
உடனே உடையும் மனம்;
கத்திரி வெயிலிலும்
தேநீர் அருந்தும் இதம்;
பார்வையிழந்தவர்களின்
ஊதுபத்தி;
பாதசாரிகள் கடைவீதியில்
பலாப்பழம்;
வெப்பத்தை விழுங்கியது
கருப்புச் சாறு;
இரவு வரும் வரை நகர
வேண்டும்;
இரவு பிடித்து வைத்தாலும்
எப்படியும் நகர்ந்துவிடும்.
சாளரன்.
27.06.2026
நீ தேடவில்லை
ஆதலால் நான் பறவை
நீ சிறைபிடித்தாய்
ஆதலால் நான் வானம்
நீ காதல் சொன்னாய்
ஆதலால் நான் கவிஞன்
நீ காதலை மறந்தாய்
ஆதலால் நான் கவிதை.
சாளரன்
05.06.2026
delulu !
யாரையுமே தேர்ந்தெடுக்காமல்
காதல் செய்துகொண்டே
வாழ்கிறேன்
அவர்களை எனக்குப் பிடிக்கும்
என்பதால் அவர்களும் அப்படியே தவிப்பார்கள் என்று கனவு காண்கிறேன்
எழுதி அழித்தால் என் வார்த்தைகள்
முக்கியமாகும் என்று நினைத்துக்கொள்வேன்
நான் இல்லை என்றால்
எல்லோரும் எனக்காக ஏங்குவார்கள்
என்று ஒளிந்துகொள்வேன்
ஒரு நேர்காணலுக்குச் செல்லும்
முன்பே வெற்றி பெறுவேன்
ஒரு இரவில் கிட்டார் கற்றுக்கொள்வேன்
ஒரு வாரத்தில் எழுத்தாளர்
ஆகிவிடுவேன்
அடுத்த மாதம் இந்தியா முழுவதும்
சுற்றி வந்துவிட பயணிப்பேன்
நானே யானை
நானே பறவை
நானே எறும்புகள்
நானே கடல்
நானே மழை
நானே கடவுள்
நானே பிசாசு…!
சாளரன்
21.11.2025
எனக்கு ஒரு சந்தேகம்...
தொலைக்காட்சியில் வரும் எல்லாருக்கும் கண்டிப்பாக சினிமா ஆசை இருக்கும்... அதுவும் விஜய் டிவி பற்றி சொல்லவே வேண்டாம்... நிறைய பேரு சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து இருக்காங்க... சிவகார்த்திகேயன் அதில் உச்சம்...
இப்படி இருக்க இந்த பிரியங்கா மட்டுமே இதுவரைக்கும் ஒரு படம் கூட நடிக்கல ...என்ன காரணமோ??!
Wrong சைடுல …Opposite-ல கார் வர்றது தெரிஞ்சும், "நாம போவோம், அவன் நிப்பாட்டுவான்"ங்கிற அந்த ஒரு கெத்து! 😎
ரோட்டுக்கு வந்தாலே அவங்கதான் 'சூப்பர் ஹீரோ'னு முடிவு பண்ணிடுறாங்க.
பஸ்ல ஒரு லேடி ரோட்ல போற வர வண்டி நம்பர் எல்லாத்தையும் ஒரு பேப்பர் ல எழுதிக்கிட்டு இருக்காங்க.. எழுதுற வேகத்தை பாத்தா இறங்குறதுக்குள்ள ஒரு நூறு வண்டி நம்பராவது நோட் பண்ணனும்ன்ற ஒரு வெறி தெரியுது..
எதுக்கா இருக்கும் இது? வண்டி நம்பர் எல்லாம் வச்சு ஏதாவது பண்ண முடியுமா என்ன?