எந்த மக்களுக்காக நீ உண்மையாக இருக்க போராடுகிறாயோ
அதே மக்களால் நீ விமர்ச்சிக்கப்படுவாய்,
நிராகரிக்கப்படுவாய்....
என்னை நம்பி வாக்களித்த,வாக்களிக்காத யாவர்க்கும் ஒரு பிரச்சினை என்றால் முதல் குரலாக நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாய் எனது குரல் முதலில் ஒலிக்கும்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் கருங்காடு ஊராட்சியில் சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் பிரேதங்களை தோளில் சுமந்தும், ஓடும் தண்ணீரில் தோளில் சுமந்தும் செல்லும் அவல நிலையை நீக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு வழங்கப்பட்டது

பெண்மையைப் போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்!
உலகின் உயிராற்றலாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாளில் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!
“பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அளவிட முடியும்” என்கிறார் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர்!
"பெண்கள் ஒடுக்கப்படும் வரை எவராலும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியாது. ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டுப் பெண்கள் நடத்தப்படும் விதத்தைப் பொறுத்தே அமைகிறது." என்கிறார் ஆப்ரிக்க மக்களின் விடுதலைக்குப் போராடிய நெல்சன் மண்டேலா!
"எந்தவொரு நாடு பெண்களை மதிக்கவில்லையோ, அந்த நாடு எக்காலத்திலும் உயர்ந்த நிலையை அடைய முடியாது. ஒரு பறவை ஒரு இறக்கையை மட்டும் வைத்துக்கொண்டு பறக்க முடியாது என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்!
“தையலை உயர்வு செய்” என்கிறார் நம்முடைய பாட்டன் பெரும்பாவலன் பாரதி!
"மங்கையர் அறிவால் இந்த மாநிலம் உயரும்!" என்கிறார் புரட்சிப்பாவலர் தாத்தா பாரதிதாசன்!
‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் தாத்தா கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’ எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் நீண்ட நெடுங்காலமாகவே பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, செயலாக்கம் பெறவில்லை. ஆனால், அதனை ஈழத்தாயகத்தில் சாத்தியப்படுத்தி நிறுவிக்காட்டினார் நம்முடைய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அவர்தம் பிள்ளைகள் அதனை தமிழ்நாட்டில் செயற்படுத்த அணியமாகி நிற்கிறோம்.
ஐக்கிய நாடுகள் அவை 2026-ஆம் ஆண்டு மகளிர் நாளுக்கான மையக்கருத்தாக "எண்ணியல் யுகத்தில் பாலின சமத்துவம்: பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் புதுமை" என்ற முழக்கத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கடந்த 2016 ஆம் ஆண்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே உலகில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் செய்திடாத செயற்கரிய செயலாக தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தேர்தலில் சரி பாதி இடங்களில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி, உண்மையான பாலின சமத்துவம் என்பது பெண்களுக்கான அதிகாரமளித்தல்தான் என்ற உண்மையைச் செயலில் நிறுவியது. அது வெறும் சோதனை முயற்சியல்ல, சாதனை முயற்சி என்பதை அடுத்து வந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடர்ந்து உலகிற்கு உணர்த்தியது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அந்த சாதனையைத் தொடர்கிறது நாம் தமிழர் கட்சி. இது பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி தரும் சலுகை அல்ல; பெண்களுக்கான உரிமையை பெண்களையே எடுத்துக்கொள்ளச் செய்யும் நம் இனத்திற்கான பெருமை.
அடிமைத் தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி, மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாக, அண்மைக்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்கிப்பெருகி வருவது பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்வினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. பெண்களுக்கு எதிரான இக்கொடுமைகள் ஒழிய பெண்களுக்கு அரசியல் அதிகாரப்பகிர்வை தருவது மட்டுமே நிலைத்த தீர்வாக அமையும். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளும் அரசோ மாதம் 1000 ரூபாய் தொகையைத் தருவதை மகளிர் உரிமைத் தொகை என்கிறது. ஏற்கனவே ஆண்ட கட்சியோ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்கிறது. ஒரு நாளைக்கு அரசு வழங்கும் வெறும் 33 ரூபாய் தொகைதான் மகளிர்க்கான உரிமையா? அந்தத் தொகையும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும்தான், வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் கிடையாது என்கிறது அரசு. எந்த வேலைக்குச் செல்லும் பெண் வீட்டில் வேலை செய்யாமல் இருக்கிறார்? உண்மையில் அவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அந்த குறைந்தபட்ச தொகையும் பெற தகுதி இல்லை என்பதை எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்கிறது அரசு? மகளிர்க்கான உரிமை என்பது அரசு வழங்கும் அற்பத்தொகையில் இல்லை. மக்கள் தொகையில் சரிபாதி உள்ள ‘மகளிர் தொகை’க்கேற்ப சம அதிகாரம் அளிப்பதே உண்மையான மகளிர் உரிமையாகும்.
(1/2)
தமிழர் இன அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேசியம் என்ற தன்னகரில்லா கோட்பாட்டை முன்னிறுத்தி தன்னலமில்லாமல் தொடர்ந்து களத்திலே இயங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோபிசெட்டிபாளையத்தில் 01-03-2026 அன்று நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுவில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதாக தீர்மானம் இயற்றியிருப்பது மிகப்பெரிய பெருமையையும் , பேருவுவகையையும் எங்களுக்கு அளிக்கிறது.
தமிழ்த் தேசிய தத்துவக் களத்தில் எங்களது முன்னத்தி ஏராக தமிழ்த் தேசிய இன நலனுக்காக எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்த பெருமக்களின் இந்த ஆதரவு நாம் தமிழர் கட்சியின் தொடர் இனப்பணிக்கு கிடைத்திருக்கிற மகத்தான விருதாகவும், தமிழர் இன உரிமை அரசியல் நகர்வில் ஒரு மைல் கல்லாகவும் கருதி பெருமிதம் அடைகிறோம்.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழர் இன நலன்களுக்காக போராடி வருகிற எங்களுக்கு, பேரறிவும் பெரும் தொண்டும் நிரம்பிய எங்களது மூத்தவர்கள் அளித்திருக்கிற பெருமைமிக்க அங்கீகாரமாக கருதி நெஞ்சம் மகிழ்கிறோம்.
இந்த தீர்மானத்தை இயற்றிய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் எம் பெரு மதிப்பிற்குரிய தமிழ்த் தேசிய தத்துவ பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்த் தேசிய பேரறிஞர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களுக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், வரலாற்றுப் பெருமை வாய்ந்த சிறப்பு பொதுக் குழுவில் பங்கேற்ற பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் , மனம் நிறைந்த நன்றிகளை நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது. நாம் தமிழர் கட்சியின் மீது தமிழ்த் தேசியப் பேரியக்கம் கொண்டிருக்கின்ற பெரும் நம்பிக்கையை எப்போதும் நாங்கள் காப்பாற்றுவோம் என்பதை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானம் தமிழர் இன அரசியல் களத்தில் இன்னும் தனித்துவத்தோடும், எவ்வித சமரசம் இல்லாமலும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கிட பெரும் ஊக்கமாக அமைகிறது.
எங்களது பகைவர் எங்கோ மறைந்தார்..
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
அன்பு நிறைந்த நன்றியுடன்...
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருத்தணி நகரின் பெருந்தமிழர் ம.பொ.சி. பேருந்து நிலையத்தின் பெயரை, கருணாநிதி பேருந்து நிலையம் என்று மாற்றும் முடிவை திமுக அரசு கைவிடாவிட்டால் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu@mkstalin
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 5 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அது மட்டும் போதாதென்று, தமிழ்நாட்டில் தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி, ஐயா கருணாநிதி பெயரில் திறப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு ஐயா கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய திமுக அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அறிவித்தது. அதேபோன்று திருவள்ளூர் நகரில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்திருந்த காய்கறி சந்தையின் பெயரை மாற்றி ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்டும் முடிவையும் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மீண்டும் பெருந்தலைவர் பெயரே சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையத்தின் பெயரையும், ஆடுதுறை தாத்தா காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடியின் பெயரையும் கருணாநிதி பெயரில் எதேச்சதிகாரமாக திமுக அரசு மாற்றுவதை நான் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்ட பிறகு திமுக அரசு பின்வாங்கியது.
கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்த்தலைவர்களின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருவது என்பது வேதனைக்குரியதாகும். இந்நிலையில், தமிழ்த் தலைவர்களின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது ஏற்க முடியாத கொடுமையாகும். அக்கொடும்போக்கின் நீட்சியாக தற்போது, திருத்தணி நகரில் அமைத்திருந்த எல்லை காத்த மாவீரர்
ம.பொ.சிவஞானம் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையத்தின் பெயரை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று மாற்ற முயல்வது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். ஐயா கருணாநிதிக்கும், திருத்தணிக்கும் என்ன தொடர்பு உள்ளது? அவரது பெயரை சூட்ட வேண்டிய அவசியமென்ன?
தன்னிகரில்லா தமிழ்ப்பெரும் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை தம் எழுத்தாலும், சொற்பொழிவுகளாலும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருந்தகை. தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகு சுதந்திர அரசியல் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டென உரைத்து, தமிழ்த்தேசிய அரசியல் காக்க தமிழரசு கழகம் கண்ட தன்மானத்தமிழர், Ôதலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்Õ என்று காத்திட்ட தீரர். திருத்தணியை அரசியல் பெரும்போர் நடத்தி மீட்டு வடவெல்லை காத்த வீரர் பெருமதிப்பிற்குரிய தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள். அவருடைய ஈகத்தினை போற்றும்விதமாகவே திருத்தணி பேருந்து நிலையத்திற்கு ம.பொ.சிவஞானம் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. அத்தகைய வரலாற்று அடையாளத்தை அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது பெருந்தமிழர் ம.பொ.சி.யின் ஈகத்தை அவமதிக்கும் செயலாகும்.
ஆகவே, புனரமைக்கப்பட்டு திறக்கப்படவிருக்கும் திருத்தணி நகரின் பேருந்து நிலையத்தின் பெயரை, பெருந்தமிழர் ம.பொ.சி. பேருந்து நிலையம் என்பதிலிருந்து கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று மாற்றும் முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கின்றேன்.

நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கிற வேட்பாளர்கள் அனைவரும் படித்தவர்கள் விவசாயியோ ஆடு மாடு மேய்ப்பவர்களோ இல்லை என்று மேம்போக்காக விமர்சனம் வைப்பவர்களுக்காக...
அனைத்து விவரங்களோடு போட்டு விமர்சிக்க உங்களுக்காகவே இதை பகிர்கிறேன்..
வயிறெரியாமல் இதை பார்த்து எடுத்து வைத்து விமர்சிக்கவும்..
இந்திய சுதந்திர போராட்ட வீரர்,
பொதுவுடமைப் போராளி,
எளிமையின் மறுவடிவம்,
நேர்மையின் சிகரம்,
தகைசால் தமிழர்
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு
நாம் தமிழர் கட்சியின்
கண்ணீர் வணக்கம் 🙏🙏🙏
ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல் என வாழ்வியல் கூறுகள் வழி, நம் தமிழ் மொழி தந்த தொன்ம இலக்கியம் என யாவும் பெற்று பண்பாட்டு செழுமைமிக்க தமிழ்ப் பேரினத்தின் இறையோன் நம்மின மூதாதை முப்பாட்டன் முருகப்பெருமானாவார்.
தமிழர் பண்பாட்டு அசைவுகளைத் தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை நிலங்கள் முழுமையும் விரவியிருக்கும் இறைவனாக
முப்பாட்டன் முருகப்பெருமான் திகழ்கிறார்.
உலகம் முழுமையும் எங்கெல்லாம் தமிழர்கள் பெருமளவு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முருகப்பெருமானுக்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.
ஈழம், சிங்கப்பூர், மலேசியா, கனடா, இலண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு என எல்லா இடங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டு தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார்.
‘பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகை காட்டும் முதுமொழியின்படி தொல்தமிழர் தங்கள் வாழ்வியல் பாடுகளின் மூலம் பெற்ற பண்பட்ட அனுபவங்களே
தமிழர் பண்பாடாகியது.
அப்படி நமது மூத்தோர் வழி பயணப்படுவது, மூத்தோர்
வழி பாடுபடுவதே தனித்துவமிக்க தமிழர் மெய்யியல் வழிபாடாகும்.
அத்தகைய தமிழர் மெய்யியல் பண்பாட்டு நிகழ்வு சிறப்புறும் வகையில் திருமுருக
வழிபாட்டுத் திருநாளான
தைப்பூசப் பெருவிழாவினை
உலகெங்கும் தாய்த்தமிழ் சொந்தங்கள் கொண்டாடி,
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
தமிழ் இறைவன்! நம் முப்பாட்டன்!
திருமுருகப்பெருமமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம்!
உலகத் தமிழர் அனைவருக்கும்
தைப்பூசத் திருநாள்
வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பாட்டாளி மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கும், முன்னேற்றத்திற்கும் தம் வாழ்வினை ஒப்புவித்து வாழ்ந்த பெருந்தகை!
வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்!
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்!
அன்பிற்கினிய அண்ணன் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் பிறந்த நாளில் என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகின்றேன்!
நதி என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது உலக உயிரினங்களின் உடைமை. பூமியின் மலை மார்பிலிருந்து விழும் அருவிப்பால் உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது. அதைத் தடுக்க உலகில் எவனுக்கும் உரிமை கிடையாது. இந்தத் தாக்குதலால் சம்பந்தப்படாத பல லட்சம் விவசாயிகள், மக்கள் மற்றும் ஆடு, மாடு, மான், மயில் போன்ற உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. தண்ணீரைத் தடுப்பவன் முடிந்தால் சுவாசிக்கும் காற்றையும் தடுத்துப் பார்க்கட்டும். மக்கள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திலேயே வாக்களிக்காமல் எப்போது மாறப் போகிறார்கள்? நீங்கள் எங்களுக்கு வாக்கு தந்தாலும் தராவிட்டாலும் ஒருநாள் நாங்கள் வெல்வோம். அன்று இங்கே கண்ணீர் சிந்திய என் தங்கை முபினா உள்ளிட்ட அனைத்து சகோதரிகளின் கண்ணீரையும் துடைப்பேன். இஸ்லாமியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் உறுதியாக நிற்போம்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் நாட்டின் ஒரே எல்லைச்சாமி எங்கள் அண்ணன் சீமான் தான்.
தமிழ் மண்ணிற்காகவும் இங்கு வாழும் மக்களுக்காகவும் ஒவ்வொரு கணமும் களத்தில் போராடி வரும் இனத்தின் பாதுகாவலன் அவர் ஒருவர் மட்டும் தான்.
#சீமானோடு_நிற்கிறோம்
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நம் முப்பாட்டன்!
திருமுருகப்பெருமான்
திருப்புகழை வணங்கிப் போற்றுவோம்
உலகத் தமிழர் அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி