பதவி பணத்துக்காக திமுகவுக்குள் வந்தவன் ஓடட்டும்....
உண்மையாக உழைக்கும் திமுககாரனுக்கு மரியாதை கொடுப்போம்....
உடன்பிறப்புகள் Follow செய்யுங்கள் follow back செய்யப்படும்....
மீண்டும் உதயசூரியனை உதிக்க வைப்போம்....!!!!🌄🌄
#ஓரணியில்தமிழ்நாடு#உடன்பிறப்பேவா#DMK4Ever#GenZDmk
தலைவர் கலைஞர் இல்லை என்ற குறையைத் தன் அயராத உழைப்பால் போக்கி, தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அரவணைத்து கழகத்தை வழிநடத்தி வரும் நமது மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற நாள் இன்று.
கலைஞரின் மறுஉருவமாக நின்று கழகத்தை வழிநடத்தும் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
#DMK
"முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வழியில் கழக தேர்தலை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் நடத்தி முடித்திருக்கிறீர்கள். ஒரு கட்சியின் பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்"
- @dmk_youthwing செயலாளர் திரு @Udhaystalin MLA.
#ThalaivarMKStalin
பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கை வழி நின்று திராவிட இயக்கத்தை வழிநடத்தும் தலைவர் திரு @mkstalin அவர்கள் திமுக தலைவராக பொறுப்பேற்ற சிறப்பு நாள் இன்று!
#DMK
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (27-08-2026) சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற, நினைவில் வாழும் திரு. பி.எச். பாண்டியன் அவர்களின் பெயர்த்தியும், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. பி.எச். பால் மனோஜ் பாண்டியன் - திருமதி தீப்தி மனோஜ் பாண்டியன் இணையரின் மகளுமான நிரஞ்சனா பாண்டியன் - ஜே.பி. கிறிஸ்டோபர் சித்தாந்த் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இளம் பத்திரிகையாளர் ந.வினோத்குமார் அவர்கள் மறைவுற்றார் என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
விகடன், தமிழ் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நாளேடுகள், புதிய தலைமுறையின் ஆங்கில இணையதளமான ‘தி ஃபெடரல்’ ஆகியவற்றில் பணியாற்றியவர் ந.வினோத்குமார்.
கழகத்தின் இளைஞர் அணி சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் முரசொலி பாசறை பக்கத்தில், ‘முதன்முதலில்’, ‘சீரணி’, ‘இடம் - பொருள் - கலைஞர்’ என 3 முக்கியத் தொடர்களை எழுதியுள்ளார். ‘திராவிட மாடல் அரசு’ தொடரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
‘தமிழரசு கலைஞர்’, ‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’, ‘வான்- மண் – பெண்’, ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’, ‘பாப்லோ The boss’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ‘முந்நூறு ராமாயணங்கள்’, ‘நிலம் - துப்பாக்கி – சாதி’, ‘அமர நாயகன்’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
உடல்நலப் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், சமூகநீதி சிந்தனையோடு தன் சீரிய எழுத்துப்பணிகளைத் தொடர்ந்த ஓர் எழுத்தாளரை இழந்திருக்கிறோம் என்பது ஈடு செய்ய இயலாதது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினர் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்ன மேட்ச், எந்த டீம் என்றே தெரியாமல் கண்டதை கதையடித்து விடக்கூடாது பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை யார் என்று கூகுள் செய்து பார்த்தாலே தெரியும். அமைச்சரே இதையெல்லாம் பார்த்து தெரிந்துகொண்டு பேசுங்கள், சட்டமன்றத்தில் போய் உளறிக்கொண்டிருக்காதீர்கள்!
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@udhaystalin அவர்கள், சட்டமன்றத்தில் இன்றைய தினம், நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மக்களை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.
அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாண்புமிகு எதிர்க்கட்சி கொறடா திரு ஏ.வா வேலு அவர்கள்
MMDR சட்டத் திருத்தத்தை எதிர்த்து விஜய் கடிதம் எழுதினார், திமுக இதை எதிர்க்கவில்லை என்கிறது இந்த செய்தி.
அடிப்படை ஆதாரமற்ற, விஷமத்தனமான கருத்துருவாக்கம் இது.
1) முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதும்போது அதை DIPR மூலமாக வெளிப்படையாக வெளியிடுவது தான் வழக்கம். இந்த நிமிடம் வரை விஜய் எழுதியதாக சொல்லப்படும் கடிதம் பொதுவில் வெளியிடப்படவில்லை. அது என்ன ராணுவ ரகசியம் அல்லது அரசின் ரகசிய கடிதமா ? பொதுவில் வெளியிடமால் மறைக்க வேண்டிய அவசியம் என்ன ? எதற்கு பயப்படுகிறது விஜய் அரசு.
2) ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடிதம் எழுதியதாக, ஆகஸ்ட் 25 அன்று சட்டப்பேரவையில் சொன்னதால் தான் இந்த செய்தியே வெளிவந்துள்ளது. Indian Express கூட விஜயின் கடிதத்தில் உள்ளதாக சில செய்திகளை 'Source' அடிப்படையில் தான் வெளியிடுகிறது. Nothing official.
3) விஜய், தவெக, தமிழ்நாடு அரசு யாரேனும் ஒருவர் சார்பில் அதிகாரப்பூர்வமாக இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டித்துள்ளார்களா ?
4) 'Vijay opposes..' என்று எழுதியுள்ளது Indian Express. அந்த கடிதத்தை / அது குறித்த குறிப்பை கூட வெளியிடாத அளவுக்கு பயந்து கிடப்பதற்கு பெயர் தான் எதிர்ப்பதா ?
5) 'Interestingly, neither the DMK nor the ADMK has opposed so far' - இதில் திமுக எதிர்க்கவில்லை என்பது அப்பட்டமான பொய், திரிபு வேலை.
விஜய் கடிதம் எழுதியதாக சொல்லப்படும் நாள் 17/08/2026. அதில் கண்டனம் இருந்ததா, எதிர்ப்பு இருந்ததா என்று எதுவும் தெரியாது. ஏனெனில் அது 'Source' சொன்னது.
ஆனால், திமுக சார்பில்
அ) 12/08/2026 - மேனாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள்
'நிதிக் கூட்டாச்சியின் மீதான நேரடி தாக்குதல்' என்று கண்டித்தார்.
ஆ) 13/08/2026 அன்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு கனிமொழி அவர்கள்
'இது மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் & மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் மசோதா' என்று வெளிப்படையாக கண்டித்தார்
இ) 13/08/2026 அன்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திரு திருச்சி சிவா அவர்கள், இந்த மசோதாவை குறைந்தபட்சம் தேர்வு குழுவிற்காவது அனுப்ப வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
ஈ) 14/08/2026 அன்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு கனிமொழி அவர்கள்
'இந்த சட்டத் திருத்தம், கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் முரணானது. முதலமைச்சர் விஜய் ஏன் எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார்' என்று கேள்வி எழுப்பினார்.
திமுக இந்த சட்டத் திருத்தத்தை கடுமையாக எதிர்த்ததற்கான சான்றுகள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் உள்ளபோதே, திமுக எதிர்க்கவில்லை என்று அப்பட்டமாக பொய்யை எழுதுகிறது இந்த ஊடகம்.
ஆனால், திமுக கேட்ட பிறகு, 17/08/2026 இல் கடிதம் எழுதியதாக 25/08/2026 அன்று அமைச்சர் தகவலாக சொல்கிறார். கடிதம் இப்போது வரை வெளியிடப்படவில்லை. 'Source' அடிப்படையில் விஜய் எதிர்த்ததாக ஒரு செய்தியை வெளியிடுகிறது இந்த ஊடகம்.
இதற்கு பெயர் தான் ஊடக அறமா ?
11,000 கோடி தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்தும் ஒரு சட்டதிருத்தம் குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ கருத்து என்ன ? மக்கள் அதை தெரிந்துகொள்ள உரிமை அற்றவர்களா ?
எதிர்க்காத தவெகவை கேள்வி எழுப்பாமல், Source அடிப்படையில் ஒரு கதை எழுதிவிட்டு, எதிர்த்த திமுகவை குற்றம் சுமத்துவது தான் இந்த நாட்டின் ஊடகப் பணி.
Heart goes out to the thousands of people affected by the massive landslide and floods triggered by a seemingly small earthquake in the high ranges bordering Tibet and Nepal🙏🏾
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@udhaystalin அவர்கள், சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற, வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியக்கழகச் செயலாளர் திரு.அயப்பாக்கம் துரைவீரமணி - திருமதி கனிமொழி ஆகியோரின் அன்பு மகள் வீர.குடியரசி - ரா.கார்த்திகேயன் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர்.
ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன்.
#NepalFloods #Rasuwa #FlashFlood
Deeply saddened to hear about the devastating floods in Nepal, which have caused severe damage and reportedly left hundreds of Indians, including more than 50 tourists from Tamil Nadu, missing.
I urge the Hon’ble Minister of External Affairs to take immediate steps to coordinate with the Nepalese authorities, ensure the safety and well-being of the missing tourists, and provide all possible assistance to their families.
#NepalFloods
அம்பலமான த.வெ.க அரசின் இரட்டை வேடம்!
ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றுவது, ஏற்கெனவே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதென அற்ப அரசியலை செய்து வருவதே த.வெ.க அரசின் வழக்கமாகி இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக பேரவையில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..
ஏற்கெனவே இதுதொடர்பாக இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, ஆசிரியர்களைப் பாதுகாப்பதுடன், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் 25.11.2025 அன்று கடிதம் எழுதி இருக்கிறார். இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
த.வெ.க அரசின் இந்த தனித்தீர்மானம் நாடகத்தை தாண்டி, அதற்கு முந்தைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஆசிரியர் தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது! அப்படி குறைத்தால் தேர்விற்கான மதிப்பு குறைந்துவிடும்’ என ஆசிரியர்களுக்கு எதிராக வாதாடியுள்ளது.
மேலும் புதிதாக வந்த த.வெ.க அரசு முழுமையான சட்டப்போராட்டத்தையும் மேற்கொள்ளவில்லை.
த.வெ.க அரசின் இந்த இரட்டை வேட நாடகங்களும், போலி விளம்பர வெறியும் என்று முடிவுக்கு வருமோ?