முதலமைச்சருக்கு கடிதம்
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சருக்கு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா கடிதம் அனுப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்
மயிலாடுதுறையில் அமைச்சர் பார்வை மயிலாடுதுறை சித்தர்காடு தமிழ்நாடு அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு.Y.N.ஜமால்
மாற்றம்!
சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன், திருவள்ளூர் ஆட்சியராக கவிதா, அரியலூர் ஆட்சியராக மிருணாளினி, பெரம்பலூர் ஆட்சியராக சரண்யா அரி, ராமநாதபுரம் ஆட்சியராக சிவகுரு ஆகியோர் நியமனம்
இந்திய வம்சாவளி சாம்பியன்
கடினமான ஆங்கிலச் சொற்களின் எழுத்துகளை சரியாக சொல்லும் 2026ஆம் ஆண்டுக்கான Scripps National Spelling Bee champion போட்டியில் ஷ்ரே பரிக்(14) என்ற கலிபோர்னியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்றார்
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாட்டின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு; பொதுத்துறையின் சிறப்பு செயலாளராக சுந்தரவள்ளி ஐஏஎஸ் நியமனம்நிதித்துறை செலவின செயலாளராக லலிதா ஐஏஎஸ் நியமனம்: தமிழ் நிதித்துறையின் இணை செயலாளராக கமல் கிஷோர் ஐஏஎஸ் நியமனம்
சிங்கப்பெண் திட்டம் -விழா ரத்து
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைப்பதாக இருந்த திட்டத்தின் தொடக்க விழா ரத்து
நீர்மோர் பந்தல்களை திறக்க
தவெகவினர் தங்கள் பகுதிகளில் நீர்மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என தவெக தலைமை உத்தரவு பழச்சாறு, இளநீர், மோர், குடிநீர், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் கோடை வெயிலால் மக்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்பு தவெக பொதுச்செயலாளர்
போராட்டத்தில் விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து பயிர்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகளுக்கு
நிதியமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் சந்திப்பு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து கோரிக்கை விடுத்ததாக தகவல். பிரதமர் மோடியை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் விஜய்
மயிலாடுதுறை 1-8 வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை: பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க தீவிர ஆலோசனை!
#mayiladuthurai mayiladuthurai
https://t.co/MylJsmAq4h
திருமாவளவன் உறுதி
எந்த சூழலிலும் தவெக ஆட்சி கவிழ இடம் கொடுக்க மாட்டோம். 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிப்போம் என்ற நம்பிக்கையில் ஆட்சியில் திறம்பட செயல்பட வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன்
டாஸ்மாக் மூடல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் கடைகள் இன்று முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை ஏற்க முடியாது: அதிமுகவினர் அடுத்தடுத்து இணைவது தவெக மீதான நம்பகத்தன்மையை பாதிக்க செய்யும் விசிகவின் ஆதரவை திரும்பப்பெற மாட்டோம்: தற்போது இருக்கும் ஆதரவு ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும் தவெக நம்பலாம் விசிக தலைவர் திருமாவளவன்
69% இடஒதுக்கீடு -முதலமைச்சர் ஆலோசனை
தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது.
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஈடுபடுவோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரிக்கை
பயிர்க்கடன் தள்ளுபடி- முதல்வர் உத்தரவு
"கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்றகுறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி"
பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் 14.22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் - முதலமைச்சர் விஜய்
சட்ட விரோதமாக செயல்பட்டதாக புகார் மணலியில் தீ விபத்து ஏற்பட்டுள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு சட்ட விரோதமாக செயல்பட்டதாக புகார்
4 மாதங்களுக்கு முன்னரே ஸ்ரீ சாய் ஆயில் லூப்ரிகேஷன் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக தகவல்
மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை நிர்வாக காரணங்களுக்காக டெண்டர்களை ரத்து செய்தது தமிழ்நாடு
போக்குவரத்து, பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட துறைகள்.கு சார்பில் வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டன