திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Happy Birthday, Rahul ji.
You’ve walked the length of India, carrying a message of love, secularism, and progress, reminding us that politics must connect, not divide.
Keep walking, keep listening.
@rahulgandhi
நார்வே செஸ் 2026 தொடரில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை ஒரே பதிப்பில் இரண்டு முறை வீழ்த்தி, வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய செஸ் இளம் மேதை ஆர். பிரக்ஞானந்தாவிற்கு மக்கள் நீதி மய்யம் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது !
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#Norwaychess
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வன்முறை செய்து, கொன்ற குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
- மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
மயிலாடுதுறையில் திறக்கப்பட்ட மூர்த்தி கபே கிளையின் திறப்பு விழாவில் MNM சார்பாக
சிறப்பு அழைப்பாளராக திரு M.N. ரவிச்சந்திரன் அவர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.
மாவட்ட செயலாளர் திரு S. மனோகர் மற்றும் மாவட்ட IT அணி துணை அமைப்பாளர் இரா. சூரிய பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
The previous government of Tamil Nadu ( DMK ) had been in active negotiations with the Defence Research and Development Organisation (DRDO) for over three years to anchor the AMCA project in Hosur.
The State proposed integration of the AMCA complex with the upcoming Hosur domestic airport, split seamlessly between a defense testing facility on one side and a passenger terminal on the other.
Hosur is located roughly 40 km from the Aeronautical Development Agency (ADA) headquarters in Bengaluru—the nodal body designing the 5th-generation stealth fighter. Officials noted this would have allowed superior logistical and airspace integration.
officials close to the developments indicate that political considerations and aggressive regional bidding tipped the scales.
The loss of the AMCA facility is seen as a setback for the Tamil Nadu Defence Industrial Corridor, which had hoped to use the stealth fighter program to establish Hosur as a premier national aerospace hub.
Such setbacks reflect poorly on the State. Therefore, Makkal Needhi Maiam urges Tamil Nadu government to safeguard against any inequitable treatment from the Union government while establishing a rigorous mechanism to track and execute all proposed projects.
We strongly urge the Union Government to not ignore Tamilnadu for its resistance to BJP and it's biased policies preventing our development, growth and progress of stare.
We stand united in voicing out our concerns that all states should be equally benefitted.
Tamilnadu should get this project, for which we have worked for the past 3 years
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#DRDO
#InvestInTN
#Aerospace
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Puducherry
#NRangaswamy
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இவர்களின் தலைமையில் புதுச்சேரி புதுப்பொலிவுடன் மகத்தான வளர்ச்சி பெறட்டும். மக்கள் மகிழ்ச்சி அடையட்டும்.
#Puducherry #NRangaswamy
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து,
திரு. சூர்யா @Suriya_offl, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Karuppu
தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
#Karuppu
ஒரு தேர்வு கூட முறைகேடு இல்லாமல் நடத்தப்படாத நீட் நுழைவுத் தேர்வில், இம்முறை 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் சிதைக்கப்பட்டிருக்கிறது.
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாத்து,
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்ப கொண்டு வர வேண்டும் என்று,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் வலியுறுத்தல்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#NEET
நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள மதுக்கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. C.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான அரசுக்கு,
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் வாழ்த்துச் செய்தி!
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
PM SHRI பள்ளிகள்---ஒரு பார்வை!மாநில உரிமைகளுக்கு சவாலாக அமையக் கூடிய PM SHRI!
PM SHRI யின்
சாதகங்கள் என்று சொல்லப்படும் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், பசுமைப் பள்ளிகள், தொழில்சார் கல்விக்கு முக்கியத்துவம் மற்றும் NEP 2020-ன் கீழ் மாதிரிப் பள்ளிகளாக உருவாக்கம் ஆகியவை ஏற்கனவே
*ஸ்மார்ட் வகுப்பறைகள், புதிய கட்டிடங்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் & தமிழ்ப் புதல்வன், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், அதிநவீன லேப்டாப்கள் சுருக்கமாகச் சொன்னால், உட்கட்டமைப்பில் நவீனமயமாக்கல் மற்றும் மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல்* என தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளவை.
இவற்றை, ஏதோ புதிதாக அறிமுகப்படுத்துவது போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
இதன் ஊடே பொதிந்து கிடக்கும் சவால்கள் :
1. 60:40 நிதிப் பங்கீடு - மாநிலங்களுக்கு நிதிச் சுமை.
2. மொழி மற்றும் பெயர் மாற்றம் தொடர்பான மத்திய-மாநில கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு.
3. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளால் மற்ற அரசுப் பள்ளிகளிடையே ஏற்படக்கூடிய பாகுபாடு.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்றும் அவ்வாறே இருக்க வேண்டும்.
ஒன்றிய அரசு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கட்டுப்படுத்தவும், மாநில உரிமைகளில் தலையீடு செய்யவும் தொடங்கியுள்ளது.
ஆனால், எந்தச் சூழலிலும் மாணவர்களின் கல்வி உரிமையிலும் மாநில உரிமையிலும் சமரசம் செய்யக்கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக இருக்கிறது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#ThreeLanguagePolicy
#PMSHRI
#FascistBJP
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்.
#KamalHaasan#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam