உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் ப��தித்த பேரன்பின் தாய் தமிழ்! அந்த உயிர்மொழியினை அன்பைப் போதிக்க வில்லையெனக் கூறி, அமைச்சர் மரியவில்சன் அவமதிப்பு செய்வதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக்கொள்ளக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம். தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா?
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள��ம், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா?
அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக
மக்கள்தான் உங்கள் மீது க���பம்கொள்ள வேண்டும்!
நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது?
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து நான் பிறப்பால் கிறித்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பத�� என்ன மாதிரியான அணுகுமுறை?
நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்கள��க்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுக்கட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டத��� அமைச்சர் அவர்களே!
உலகிற்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க்குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?
உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும்,
பாரடா உன் மானுடப் பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும்,
புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும்,
"உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?
காக்கைக்குருவி எங்கள் சாதி; நீள் கடல���ம் வானும் எங்கள் கூட்டம்! என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா?
தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன் அவர்களே!
எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார்;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பக்கத்து வீட��டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார்;
தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது.
பெரும்பாவலர் பாட்டன் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார்.
'வாடியப்பயிரை கண்டு வாடிய'
வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்?
உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் எங்கள் தமிழ்!
"தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.
அதே அவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.
கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு?
இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை இலத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள்.
*நீங்கள் பிறந்த மதம் கிறித்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறித்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனா��ிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறித்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோ���்.
ஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி! அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி! தாய்மொழிதான் அடையாளம்.
அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்���ொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற
அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறித்துவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை! எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ் அன்பைப் போதிக்காது என்று ���ழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
மாண்பமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
போதைப்பொருட்களின் பழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்த கோவை மாணவர் அமுதனின் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களாலேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. நட்பையும், நல்லொழு��்கத்தையும் கற்றுத்தர வேண்டிய வேண்டிய கல்விக்கூடங்களிலேயே மாணவர்களிடையே பகைமையும், வெறுப்பும், போதைப்பழக்கமும் உருவாகி, அது ஒரு உயிரைப் போக்கும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது எதிர்கால தலைமுறையினர் குறித்தான அச்சத்தை ஏற்படுத்துகிறது. தம்பி அமுதனை இழந்து, ஆற்ற முடியாதப் பெருந்துயரத்தில் சிக்குண்டு வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
கல்லூரி வளாகத்தில் நிலவும் போதைப்பொருட்களின் புழக்கம் குறித்துக் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாலேயே மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டதாக, அவரது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோவை, செட்டிப்பாளையம் காவல்நிலையத்திற்கு மாணவர் அமுதன் அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடமிருந்து போதைப்புழக்கம் குறித்தத் தகவல்களைக் காவல்துறையினர் பெற்றுள்ளனர் என்பதும், அதற்குப் பிறகே, ஏறக்குறைய 20 மாணவர்களால் அமுதன் அடித்தே கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பதுமான செய்திகள் பெற்றோரின் குற்றச்சாட்டை உறுதிசெய்கின்றன. அப்படியிருக்கையில், போதைப் பொருட்களின் புழக்கம் எனும் முதன்மைக்காரணத்தை ��ூடி மறைத்து, மாணவர்களிடையேயான தகராறு என வழக்கின் கோணத்தையே மாற்ற முற்படும் தவெக அரசின் போக்கு அநீதிக்குத் துணைபோகும் துரோகம் இல்லையா? ‘குழு மோதல்’ எனக் கொஞ்சமும் கூச்சமில்லாது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் கூறியதெல்லாம் மோசடித்தனம் இல்லையா? 20 பேர் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வதற்குப் பெயர் குழு மோதலா? அலைபேசி பறித்ததால் வந்த சண்டை, குழுமோதல் என்��ால் மட்டும் இப்படுகொலை நியாயமாகிவிடுமா? இல்லை இது படுகொலையே இல்லை என்றாகிவிடுமா? அரசு தன் மீது குற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இன்னொரு கொடுங்குற்றத்தை மூடி மறைக்கலாமா? பறிபோன மாணவனின் உயிரைவிட உங்கள் ஆட்சியின் மீதான நற்பெயர்தான் முதன்மையானதா? பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனையே இல்லை என்கிறதா அரசு? அண்மையில் ஒரு பள்ளியில் கஞ்சாபோதையில் சக மாணவனை தாக்கும் காணொளியை ஆட்சியாளர்கள் பார்க்கவில்லையா? பரப்புரைக்கூட்டங்களில் தன்னை, ‘தாய் மாமன்’ எனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், படுகொலை செய்யப்பட்டு இறந்துபோன 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு தாய் மாமனாக என்ன சொல்லப் போகிறார்? என்ன நீதியைப் பெற்றுத் தரப் போகிறார்? தனது மகனை இழந்தப் பரிதவிப்பில் பெருங்குரலெடுத்து ஓலமிடும் பெற்றோருக்கு என்ன சொல்ல விளைகிறார்? நடந்தவைகளை மூடி மறைத்து, பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் வேலையைச் செய்கிறது கல்லூரி நிர்வாகம். போதைப்பொருட்களின் பயன்பாட்டுக்கும், இக்கொலை வழக்குக்கும் தொடர்பில்லை என ���ண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு. இதுவெல்லாம் வெளிப்படையாகக் செய்யப்படும் சனநாயகத்துரோகம் இல்லையா? வெட்கக்கேடு! பேரவலம்!
ஆகவே, தம்பி அமுதனின் படுகொலையில் நீதிவிசாரணை செய்யப்பட்டு, தொடர்புடைய கொலையாளிகள் யாவரும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்��ாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
என்னாச்சு என்னாச்சு?
'பக்கா மாஸ் முதல்வரே' என்னாச்சு என்னாச்சு?
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.2500 என்னாச்சு?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 என்னாச்சு?
ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் என்னாச்சு?
சாதிவாரி கணக்கீடு ஆய்வு என்னாச்��ு?
தமிழர் நாகரீக அருங்காட்சியகம் என்னாச்சு?
மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250000 என்னாச்சு?
வீடு தேடி ரேசன் பொருள்கள் என்னாச்சு?
முதியோர் தொகை ரூ.3000 என்னாச்சு?
மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?
தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30000 என்னாச்சு?
பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் என்னாச்சு?
காவலர் சலவைப்படி ரூ.1௦௦௦ என்னாச்சு?
காவலர் ஊதியம் ரூ.25000 என்னாச்சு?
தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4௦௦௦ என்னாச்சு?
வழக்கறிஞர் நல நிதி ரூ.3000 என்னாச்சு?
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7000 என்னாச்சு?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்னாச்சு?
அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம் என்னாச்சு?
பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம் என்னாச்சு?
கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25000 என்னாச்சு?
விலையில்லா சானிடரி நாப்கின் என்னாச்சு?
12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500 என்னாச்சு?
மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் என்னாச்சு?
வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம் என்னாச்சு?
வெற்றி விவசாய உரிமைத் ���ொகை ரூ.15000 என்னாச்சு?
மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20000 என்னாச்சு?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்னாச்சு?
அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8000 என்னாச்சு?
அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.2500000 காப்பீடு என்னாச்சு?
அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள் என்னாச்சு?
மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு என்னாச்சு?
150 நாள் ஊரக வேல��� உறுதித்திட்டம் என்னாச்சு?
சொத்து வரி குறைப்பு என்னாச்சு?
கடைசியாக,
ஐந்து சிறப்புத்திட்ட நிதிநிலை
அறிக்கை என்னாச்சு??
#TVKFails
எங்களுக்கு காவிச்சாயம் அப்புறம் பூசலாம். முதல்ல உங்க கட்சியைச் சேர்ந்த ஷா நவாஸ் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லுங்க!
பாஜகவின் மறைமுக ஆட்சி நடக்குதுன்னு சொல்றாரே, வெட்கங்கெட்டுப் போய் அந்த ஆட்சில எதுக்கு அங்கம் வகிக்குறீங்க?
@VanniTamizhVCK
காவிரி நதிநீர்��்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
@CMOTamilnadu @TVKVijayHQ
காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந���த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்தது��ான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும்.
காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உத��நிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; எதிர்க்கட்சித்தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை மறந்து, கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல.
அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால���, என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவின���் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் மாண்புமிகு நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன ���ுதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?
என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும்.
மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும்? திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டமன்ற ��றுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?
காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது. காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாக போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானதாகும்.
சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
நெல்லை மனோன்மணி��ம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய பெருமகனார் மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலிருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாயை அவமதிக்கும் வகையில் நடந்தேறிய இச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகமொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட���டிருப்பது இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். வந்தே மாதரம் எனும் மதச்சார்பு கொண்டப் பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும். ஆளுநர் அர்லேகர் அழுத்தத்தின் பெயரில் இவ்வாறு நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும்கூட, அதற்கு எவ்��ித எதிர்வினையுமாற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்.
கொள்கை எதிரியென மேடையில் அறிவித்துவிட்டு, பாஜக எதிர்ப்பையே முழுமையாக மறந்துபோய், ஒன்றிய அரசிடம் சரணாகதி அடை��்துவிட்ட முதல்வர் விஜய் அவர்கள், தமிழ்நாட்டில் இதுநாள்வரைப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாய் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அண்ணன் சீமானை AI மூலமாக எடிட் செய்தும் அவதூறு பரப்பி வந்த கோகுல் தமிழன் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
பல வருடங்களாக வழக்கறிஞர் பாசறையிடம் இதைத்தான் கேட்டோம் இப்போ ஒத்த ஆளாக செய்திருக்கிறார் 👏👏
ரொம்ப சந்தோசம்ன்னே 😊
உங்கள் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் 🌾
அன்னை தமிழ் உறவுகளே களமாட வாருங்கள்..
தங்களால் இயன்ற நிதி உதவி கொடுத்து உதவிடுங்கள்..
S.ROSHINI
A/C.NO.376801000012999
IFSC CODE:IOBA0003768
INDIAN OVERSEAS BANK
THIRUMULLAIVOYAL BRANCH
CHENNAI
..
இந்திய அரசியல் வரலாற்றில் என் அளவுக்கு தோற்றவர்கள் யாரும் இல்லை! ஆனால் என் அளவுக்கு சளைக்காமல் களத்தில் நின்றவர்களும் யாரும் இல்லை!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
https://t.co/haai7pYmk7
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே#சீமான்#ntk#ntkitwing #seeman #tamilnationalism
இந்திய ஊடகத்தில் தமிழ்த்தேசிய இனத்த���ன் தலைவரான மேதகு வே பிரபாகரனைப் பற்றியும் விடுதலைப்புலிகளைப் பற்றியும் இன்று பேசுகிறார்கள். இந்த வாய்ப்பை உருவாக்கியது தான் அண்ணன் சீமானின் மகத்தான சாதனை. 💪
சீமானுக்கு காரைக்குடியில் என்ன வேலை ? - கார்த்திக் சிதம்பரம்
சோனியாவுக்கு இந்திய அரசியலில் என்ன வேலை ?
வயநாட்டில் ராகுல் ,பிரியங்காவுக்கு என்ன வேலை ?
பா.சிதம்பரம் மகாராஷ்ராவில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .....
அப்போவெல்லாம் இந்த கேள்விகளை கேட���டீங்களா Mr. @KartiPC
"இந்திய தேசிய" காங்கிரசு லட்சணம்....