நேற்றைய தினம் 02.03.2026, திங்கட்கிழமை - தமிழக தலைநகர் சென்னையில் உள்ள திமுக தலைமையகமான, அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.
பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது முடிந்தது. 2026 சட்டமன்��� தேர்தலில் தமிழர் தேசம் கட்சி களம் காணும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
என்னா @SeemanOfficial திருச்சி வந்தாலே ஏதாவது ஒரு கோளார குடும்ப போல,முதன்முதலில் நீ மாநாடு போட்டப்ப மே23 அன்று சதயவிழா அதன்பிறகு அண்ணன் @KKSelvakumaroff மன்னிப்பு கேட்டு மே24 னு மாத்துன..ஒரு படி மேல போய் முத்தரையர் மன்னர,இராவணனு மாத்துரியா சீமான்! இதுவும் ஒரு பொழப்பு..ஹாஹாஹா
79 ஆண்டுகால அரசியல் புறக்கணிப்பு!முத்தரையர் சமூகத்தின் நியாயமான குரலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் செவிசாய்க்க வேண்டும்!!
சுதந்திர இந்தியாவின் 79 ஆண்டுகால வரலாற்றில், தமிழக நிலப்பரப்பில் பெரும்பான்மை மக்கள் தொகையைக் கொண்டுள்ள, வீரமும் பாரம்பரியமும் மிக்க முத்தரையர் சமூகம் இன்றுவரை அரசியல் அதிகாரப் பகிர்வில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரியது.
மக்களாட்சியின் மாண்பு என்பது அனைத்து சமூகங்களுக்குமான சமமான பிரதிநிதித்துவத்தில் அடங்கியுள்ளது.ஆனால்,இதுவரை முத்தரையர் ���மூகத்தை சேர்ந்த ஒருவர் கூட மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. இச்சமூகத்திலிருந்து இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே மக்களவைக்குச் செல்ல முடிந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை அரசியல் சக்தியாக விளங்கும் முத்தரையர் சமூகத்தின், மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் இருப்பது சமூக நீதியாகாது.
வெறும் வாக்கு வங்கியாக மட்ட��மே இச்சமூகத்தைப் பார்க்காமல், கொள்கை முடிவெடுக்கும் ��திகாரமிக்க இடங்களுக்கு அவர்களைக் கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கு உள்ளது.மக்களாட்சியில் ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அந்த சமூகம் அடையும் அரசியல் அதிகாரத்திலேயே அடங்கியுள்ளது. அந்த வகையில், முத்தரையர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய தருணம் இது.
'வருகின்ற மாநிலங்களவைத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளும் ஏனைய ��ரசியல் இயக்கங்களும் முத்தரையர் சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, முத்தரையர் சமூகப் பிரதிநிதியை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சமூக நீதி பேசும் கட்சிகள், முத்தரையர் சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுச் செயல்படுவதே உண்மையான சமூக நீதியாகும். இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்த அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறேன்!
வீரமே விழுதுகளாய்... வெற்றியே வேர்களாய்!
வரலாற்றுச் சிறப்புமிக்க "முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு" மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது!
தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இருந்து, நம் இனத்தின் உரிமைக் குரலை மீட்டெடுக்கத் திரண்டு வந்த உறவுகளே! உங்கள் வருகை தமி��க அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.
முத்தரையர்கள் வெறும் வாக்கு வங்கி அல்ல; இந்த மண்ணை ஆண்ட மன்னர் பரம்பரை! இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்கவும், நம் சமூகத்தின் உரிமைகளை உரக்கச் சொல்லவும் திரண்ட அந்த மக்கள் கடல், எதிரிகளுக்கு நாம் யார் என்பதை உணர்த்தியிருக்கிறது.
கனமழையிலும் , நீண்ட பயணத்தையும் பொருட்படுத்தாமல், நம் இனத்தின் எதிர்காலத்திற்காகத் திரண்டு வந்த என் பாசத்திற்குரிய முத்தரையர் பெருங்குடி மக்களே!;உயிரினும் மேலான இளைஞர் பட்டாளமே!
உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த மாநாட்டை மாபெரும் வெற்றி விழாவாக மாற்றியுள்ளது. தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க��்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
"அதிகாரம் என்பது பிச்சையல்ல, அது போராடிப் பெற வேண்டிய உரிமை!"
இனி வரும் காலம் நமக்கானது! மாநாட்டில் திரண்ட இந்த ஒற்றுமை, விரைவில் அரசியல் அதிகாரமாக மாறும் வரை ஓயப்போவதில்லை.
வெற்றி நிச்சயம்! வீர முத்தரையர் புகழ் ஓங்குக!
#முத்தரையர்மாநாடு
நாளைய தினம் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை_ திருச்சி ஆலம்பட்டி புதூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களிடம் வழங்கினேன்!
#முத்தரையர்மாநாடு
The Hon’ble Vice-President of India, Shri C. P. Radhakrishnan, released a commemorative postage stamp in honour of Emperor Perumbidugu Mutharaiyar II (Suvaran Maran) today at the Vice-President’s Enclave, New Delhi.
Speaking on the occasion, the Hon’ble Vice-President appreciated the Government under the visionary leadership of Hon’ble Prime Minister Shri Narendra Modi ji, for continuous support to Tamil culture and language. He lauded initiatives such as the Kashi Tamil Sangamam and efforts to recognise and honour Tamil kings, leaders, and freedom fighters who had not received due recognition earlier.
The Vice-President mentioned that the release of the commemorative postage stamp on Emperor Perumbidugu Mutharaiyar was part of this ongoing process of recognition. He said that recognising unsung heroes is essential to revive the cultural pride of the nation as India marches towards Viksit Bharat.
Hon’ble Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman;Hon’ble Deputy Chairman, Rajya Sabha, Shri Harivansh and Hon’ble Union Minister of State for Information & Broadcasting and Parliamentary Affairs, Dr. L. Murugan, were present on the occasion.
@nsitharaman@DrLMurugan@IndiaPostOffice
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலை வெளியிட முழு முதல் காரணமாக இருந்தது பிரதமர் திரு. @narendramodi அவர்கள் மற்றும் @BJP4Tamilnadu தலைவர்களுமே என்றால் அது மிகையில்லை..!
பேரரசர் இரண��டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia
@CPR_VP