⚠️
Big boss,
என்னமோ பிளான் பண்ணிட்டானுங்க தோணுது!
அதுக்கு விளம்பரம் பண்றத விட்டுட்டு, வேற வேலை முடி இருந்து பார்த்தா நலம்னு நினைக்கிறேன்.
#நாம்தமிழர் ஆதரவாளர்கள் கவனத்திற்க்கு.⚠️
நாம் தமிழர் கட்சி - கும்மிடிப்பூண்டி தொகுதி, கோங்கல்மேடைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி அ.சத்யபிரகாஷ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி சத்யபிரகாஷ் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சத்யபிரகாஷ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!
பகுஜன் ஜமாஜ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு புகழ் வணக்கம்
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Seeman#EngalDesam#Armstrong
https://t.co/H7CJXBkjHO
பூட்டுக்கு திண்டுக்கல், அல்வாக்கு திருநெல்வேலி, குட்காவுக்கு நம்ம விஜயபாஸ்கர்!
நேற்று வரை ஊழல் இன்று முதல் ஊதுகுழல்!
தூய்மை படுத்தும் தவெக!
#அசுரன்@TVKVijayHQ
11 வயது பய்யனாம்.. வீட்டுக்கு தெரியாம கார எடுத்துட்டு வந்து.. ரோட்டுல குழுவா நடந்து வந்த புத்த துறவிகள் மேல ஏத்திட்டான்.. 08 பேர் ப*லி.. 15,20 பேர் கிட்ட மருத்துவமனையில் அனுமதி..
- தாய்லாந்து
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்!
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கும் தவெக அரசு.
கன்னியாகுமரிமாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணை காலாவதி ஆகும் நிலையில்,அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கன்னியாகுமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய செயற்குழு கூட்டத்தில்இதே தவெக, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நாடகம் அரங்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கும் பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி நிற்கும் தமிழ்நாடு தவெக அரசின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
முழு காணொளி மனிதி வலையொளியில்.
https://t.co/PhXtnCrTvr
தங்கள் உடலையும், உயிரையும் பொருட்படுத்தாது, இரவு - பகல் பாராது, மக்கள் உயிர்காக்கவும், நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உலகம் முழுவதும் அரும்பாடாற்றும் மருத்துவர் பெருந்தகைகள் அனைவரும் மிகுந்த போற்றுதலுக்குரியவர்கள்; வணங்கத்தக்கவர்கள்!
உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப் பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும், காயங்களுக்கும் மருத்துவச் சிகிச்சையளித்து உயிர்காக்கும் உன்னதப் பெரும் பணியில் ஈடுபட்டு வருவதாலேயே கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை உலகம் போற்றி வருகின்றது.
மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!
#DoctorsDay
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம்தமிழர்கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத வரை எந்த செய்தியை நம்ப வேண்டாம்!
காலையில் இருந்து ஓடும் ஒரு பிரச்சனையை மறைக்க காசு கொடுத்து பரப்பப்படும் அவதூறு இது!
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு சீமான் கண்டனம்
#KVenkatNarayana | #Seeman | #NTK
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் பயன்படுத்தும் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளலாம் என அரசு அறிவித்தும் ஒரு லோடுக்கு ஒரு லட்சம் கேட்ட தவெக ஒன்றிய செயலாளரை வழிமறித்த விவசாயிகள் !
தமிழகமெங்கும் வசூல் வேட்டையை துவங்கிய தவெக பொறுப்பாளர்கள் .
@CMOTamilnadu