உளமார என்ற சொல்லின் வரலாறு –க்கு தெரியுமா ?
தமிழக அரசியலில் சில சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு வரலாறு, ஒரு கருத்தியல், ஒரு போராட்டத்தின் நினைவுச்சின்னங்கள். அப்படிப்பட்ட சொல் தான் “உளமார”
இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பதவியேற்பு விழாவில், “உளமார” என்பதற்குப் பதிலாக “ஆண்டவன் பெயரால்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டது பலரிடமும் விவாதத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது.
ஏனெனில், தமிழ்நாட்டில் “உளமார” என்பது வெறும் மொழிச் சொல் அல்ல; அது பகுத்தறிவின் அரசியல் அடையாளம்.
இந்த வரலாற்றின் தொடக்கம் சார்லஸ் பிராட்லா என்ற பிரிட்டிஷ் அரசியல்வாதியிடம் இருந்து ஆரம்பிக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் தீவிர நாத்திகராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்பட்ட அவர், 1880-ல் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “கடவுளின் பெயரால்” உறுதிமொழி எடுக்க மறுத்தார்.
“இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைக்க முடியாது” என்று அவர் வாதிட்டார். இதனால் அவரை நாடாளுமன்றம் ஏற்க மறுத்தது. ஆனால் பிராட்லா தளரவில்லை. மீண்டும் தேர்தல் நடந்தது; மீண்டும் வென்றார். மறுபடியும் மறுக்கப்பட்டார். இப்படியே மூன்றுமுறை மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தும், அதிகார அமைப்பு அவரைத் தடுத்தது.
அப்போது அவர் கூறிய ஒரு கருத்து ஜனநாயக வரலாற்றில் முக்கியமானதாக மாறியது:
“என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் உரிமையை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.”
இறுதியில் அவரது இடைவிடாத போராட்டத்தால், 1886-ல் “கடவுளின் பெயரால்” என்பதற்குப் பதிலாக “உளமார” அல்லது “மனசாட்சிப்படி” உறுதிமொழி எடுக்க அனுமதி கிடைத்தது. பின்னர் அது சட்டமாகவும் மாறியது.
அதாவது “உளமாற” என்பது ஒரு சொல் அல்ல; மத அதிகாரத்துக்கு எதிராக மனசாட்சியின் வெற்றி.
பிரிட்டனில் தொடங்கிய இந்த சிந்தனைக்கு தமிழ்நாட்டில் அரசியல் உயிர் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா
1967-ல் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் தலைமையிலான அமைச்சரவை முதன்முறையாக “இறைவன் பெயரால்” என்ற முறையை நிராகரித்து “உளமார” என்று உறுதிமொழி எடுத்தது. அது வெறும் நடைமுறை மாற்றமல்ல; இந்திய அரசியலிலேயே பகுத்தறிவை அரசின் மொழியாக்கிய தருணம்.
அண்ணா அதற்குக் கொடுத்த விளக்கம் இன்னும் நினைவில் நிற்கிறது:
“கடவுளிடம் பரிகாரம் செய்து சமரசம் செய்யலாம்; மனசாட்சியிடம் முடியாது.”
இந்த ஒரு வரியிலேயே “உளமார ” என்பதின் முழு அரசியல் தத்துவம் அடங்கியுள்ளது.
அதன்பிறகு கலைஞர் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களும் அந்த மரபைத் தொடர்ந்து “உளமாற” என்றே பதவியேற்றனர்.
பின்னர் வந்த ஜெயலலிதா “ஆண்டவன் மீது ஆணையிட்டு” என்று கூறி அந்த மரபை மாற்றினார். அதன் பின் அதிமுக ஆட்சிகள் அந்த வழியிலேயே சென்றன. மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-ல் “உளமார” என்று முழங்கியபோது, அது ஒரு அரசியல் வார்த்தையாக மட்டுமல்லாமல் திராவிட மரபின் மீள் அறிவிப்பாகவும் பார்க்கப்பட்டது.
இப்போது கேள்வி என்னவென்றால் — இன்று விஜய் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் “உளமார ” என்பதற்கு பதிலாக “ஆண்டவன் பெயரால்” உறுதி ஏற்றது அவர் கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பதற்காக அல்ல.
ஒரு ஜனநாயகத்தில் ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பதும் இல்லாதிருப்பதும் அவரின் உரிமை. ஆனால் தமிழக அரசியலில் “உளமார ” என்பது ஒரு வரலாற்று அரசியல் அடையாளமாக மாறிவிட்ட நிலையில், அதைத் தவிர்த்து “ஆண்டவன் பெயரால்” என்பதைத் தேர்ந்தெடுப்பது இயல்பாகவே ஒரு அரசியல் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தன்னை மாற்று அரசியலின் பிரதிநிதியாகவும், திராவிட கொள்கைகளின் தொடர் அரசியல் கட்சியாக காட்டிக்கொள்ளும் ஒருவர், அண்ணா தொடங்கி வந்த பகுத்தறிவுச் சின்னத்தைத் தவிர்க்கும்போது, விமர்சனங்கள் எழுப்புவது தவிர்க்க முடியாததே.
ஏனெனில் “உளமார” என்பது வெறும் நாத்திகர்களின் சொல் அல்ல;
அது மனசாட்சிக்குப் பொறுப்பேற்கும் அரசியலின் மொழி.
“ஆண்டவன் பெயரால்” என்று சொன்னால் பொறுப்பு மேலுலகிற்கு செல்கிறது;
“உளமார ” என்று சொன்னால் பொறுப்பு நேராக தன்மனசாட்சிக்கே வந்து நிற்கிறது.
இன்று பலருக்கு “உளமார ” என்பது ஒரு சாதாரண நடைமுறை போலத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் சார்லஸ் பிராட்லா போன்றோரின் சிறை, போராட்டம், தேர்தல் தோல்விகள், மீண்டும் எழுச்சிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா போன்றோரின் பகுத்தறிவுப் புரட்சி இருக்கிறது.
அதனால் தான், ஒரு அரசியல்வாதி எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதும் முக்கியமாகிறது.
சில நேரங்களில் ஒரு சொல், ஒரு முழு கருத்தியலை வெளிப்படுத்திவிடும். தமிழக அரசியலில் “உளமாற” அப்படிப்பட்ட ஒரு சொல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Apologies for the delay. Here's the official @oneplus Nord giveaway tweet. Just Re-Tweet this tweet and make sure you're following @UnboxTherapy for your chance to win. Good luck!
Congratulations to the Modi Govt on #100DaysNoVikas, the continued subversion of democracy, a firmer stranglehold on a submissive media to drown out criticism and a glaring lack of leadership, direction & plans where it’s needed the most - to turnaround our ravaged economy.
#ParaAsianGames2018 : K. Jennitha Anto, Kishan Gangoli, Parul Parmar, Neeraj Yadav and Amit Kumar added to India's tally with gold medals in their respective events. @ParalympicIndia
https://t.co/gMTFz3wR6Q
Who is killing India's nuclear scientists?
Eleven Indian nuclear scientists, who have died unnaturally between 2009 to 2013. What remains actual is the strange deaths of some of the most talented nuclear scientists of the country. Let’s check them out....
🔥*NEW GIVEAWAY*🔥
4X @Honor_USA View10 Smartphones. Just make sure you're following me and retweet this tweet for your chance to win. GOOD LUCK 👊 #HonorView10
Must watch: Vintage Vajpayee: A true statesman, praising Nehru despite differences with him. Compare this to the vile & vulgar abuse of Nehru by our 'leaders' today
Another Baba who is a bootlicker of those in power, comes out in support of Killer Copper smelter of Vedanta. Sure know where his bread is buttered https://t.co/0iD4MBO8Wj
We promise you that if that’s the kind of support we get every time we play for the country, we will give our lives on the pitch. India, this night was special because we were in this together. Those in the stands shouting, and the ones at home cheering - thank you!
A GI tag connects the quality and authenticity of a given product to a particular geographical origin, thereby ensuring that no one other than the authorised user can use the popular product’s name https://t.co/ZXxarMbdVV
717 children died in Adani run hospital in Bhuj in last 3.4 yrs, an infant mortality rate of >18%! This was the hospital built by Guj govt from public money & handed over to Adani by Modi! And Modi says he ran the best State! https://t.co/KWmmO0TBdP